Tuesday, May 25, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்


பொய்த்தேவு க.நா.சு.
வாடிவாசல் சி.சு.செல்லப்பா.
அபிதா லா.ச.ர.
பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
வாசவேஸ்வரம் கிருத்திகா
தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி
சுந்தர காண்டம் ஜெயகாந்தன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்.
நினைவு பாதை நகுலன்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி
கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்.
நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்.
சாயாவனம் ச,கந்தசாமி
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்.
பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்
பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்
கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.
நிலக்கிளி அ.பால மனோகரன்
இடைவெளி சம்பத்
கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்.
பிறகு,வெக்கை-பூமணி.
நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்.
.காகித மலர்கள் ஆதவன்.
வாடா மல்லி சு.சமுத்திரம்.
கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்
வெளியீட்டகம்]
மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்.
கோவேறு கழுதைகள் இமையம்.
ஏழாம் உலகம் ஜெயமோகன்.
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்.
கொரில்லா,ம்-ஷோபாசக்தி.
ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.
37'' M.G.சுரேஷ்.
அஞ்சலை கண்மணி குணசேகரன்
நிழல் முற்றம் பெருமாள்முருகன்.
நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்.
ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்,
புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்
வட்டத்துள் வத்சலா
மரம் ஜி.முருகன்,
துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா.
கள்ளி வாமு.கோமு.
முன்றாவது சிலுவை உமா வரதராஜன்.
கன்னி பிரான்சிஸ் கிருபா.
ரத்த உறவு யூமா.வாசுகி.
வேருலகு மெலிஞ்சி முத்தன்.

19 comments:

 1. அருமையான தொகுப்பு

  தொடர்ந்து தெரிவுகள் அறிமுகப்படுத்துங்கள்

  ReplyDelete
 2. கண்டிப்பாக ,நன்றி நேசன்!

  ReplyDelete
 3. Thanks for the great information Vijay!

  ReplyDelete
 4. இந்த நாவல்கள் அனைத்தையும் நீங்கள் வாசித்துவிட்டீர்களா? அப்படி ஆம் என்றால் முக்கியமான இரு நாவல்களை எடுத்து அந்த இருநாவல்களின் சமூகமும் மனிதர்களும் பின்னனியும் என மாறுப்படும் தருணங்களைப் பற்றி எழுதலாமே. மேலும் வாசிப்பை நெருக்கப்படுத்தும். உங்கள் பட்டியலில் எல்லாமும் குறிப்பிடத்தக்க முக்கியமான நாவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. வாழ்த்துகள்

  ReplyDelete
 5. நன்றி பாலமுருகன்,நான் வாசிக்காமல் எந்த தெரிவுகளையும் அளிப்பதில்லை.அண்மையில் வந்துள்ள முன்றாவது சிலுவை,வேருலகு பற்றி எழுத இருக்கிறேன்

  ReplyDelete
 6. ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் இருக்கும், அப்படி ஒன்று இது.

  ஒரு புளியமரத்தின் கதை, தலைமுறைகள், விஷ்ணுபுரம் போன்றவைகளும் மிக முக்கிய நாவல்களே, அவைகளையும் இத்துடன் சேர்த்திருக்கலாம். அத்துடன், பசித்த மானுடம், நினைவுப்பாதை, உறுபசி போன்றவைகள் முக்கியமானதாக எனக்கு படவில்லை. வேறோரு பட்டியலில் சேர்க்கலாம்.

  ReplyDelete
 7. நன்றி.. சுஜாதாவின் ஒரு நாவல்கள் கூடவா தேறவில்லை..???  நன்றி

  www.narumugai.com

  ReplyDelete
 8. @அசோக் நீங்கள் சொன்ன மூன்று நாவல்களையும் இன்று படித்து பார்த்தால் மிக பழையதாக தெரிகிறது.
  விஷ்ணுபுரத்தில் எந்தெந்த பகுதிகள் எந்த வரலாற்று புத்தகங்களில் இருந்து எடுக்கபட்டிருக்கிறது என எனக்கு தெரியும்.அவசியம் என்ற வார்த்தையை கவனிக்கவும்
  .

  ReplyDelete
 9. .@ மதன் செந்தில்,சுஜாதாவின் நிர்வாண நகரம் ,இருள் வரும் நேரம்,போன்றவை முக்கிய ஆக்கங்கள்,
  பாலகுமாரனின் கரையோர முதலைகள் ,இரும்பு குதிரைகள்,போன்றவையும்,அது வெகுஜன நாவல்களுக்கான பட்டியலில் சேர்க்க இருக்கிறேன்

  ReplyDelete
 10. நல்ல பட்டியல் நண்பரே...அவ்வப்பொழுது நிறைய படைப்பாளிகள் இதுபோன்று ஒரு பட்டியலை தருவது தேவை என்றுதான் நினைக்கிறேன்.படிக்காமல் விட்டவைகளை அடிக்கடி நினைவூட்டி வாசிப்பின் பொறுப்பை,அவசியத்தை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.விஷ்ணுபுரம் நாவலை ஆஹா ஓஹோ என்று பல பேர் பாராட்டி எழுதியதே அதிகம் படித்திருக்கிறேன்.இன்னும் சரியான முறையில் அந்நாவலை பற்றிய மிக தெளிவான நல்ல விமர்சனத்தை எவரும் எழுதியதாக தெரியவில்லை [அல்லது நான் படித்திருக்கவில்லை].ஒரு வேளை பலரும் அதன் கெட்டியான அட்டையில் துவங்கி முதல் நான்கு பக்கம்,இடையிடையில் [நூறு பக்கம் கழித்து]ஒரு இரண்டு பக்கம் கடைசி நான்கு பக்கம் என்று "ஆழமாக " வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களா தெரியவில்லை.யாராவது [ எல்லா பக்கங்களையும் படித்தவர்கள் ] இதற்கு ஒரு விமர்சனம் எழுதலாமே ? .மிகச்சிறந்த விமர்சனத்துக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தால்தான் எழுதுவார்களோ என்னவோ? அல்லது என்னை போன்று தலையணைகளை கண்டு பயப்படும் நபர்களா?
  விஜய், பரிசுத்தொகையை - பொற்காசுகளின் எண்ணிக்கையை - கொஞ்சம் சேர்த்து அறிவியுங்கள்.அப்பொழுதாவது எதாவது வருகிறதா பாப்போம்.

  ReplyDelete
 11. பட்டியலுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 12. நன்றி சசி,அந்த புத்தகத்தை பலரும் படிக்காமலே,பலரும் கதை கேட்டு கதை சொல்லுவது போல தான்.பேசுகிறார்கள்.தலையணி சைஸ் என்றால் தமிழ் சுழலில் நல்ல நாவல் ஆகிவிடும்.
  சமிபத்தில் அந்த மாதிரி ஒரு தலையணையை வாசித்தல் அது உம்பர்டோ ஈகோ ,ஓரன் பாமுக் எல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார்.நாவலாசிரியர்
  தலையணைகள் இப்படித்தான் உற்பத்தி செய்யபடுகின்றன..

  ReplyDelete
 13. உங்கள் பட்டியலுக்கு நன்றி சேமித்து கொள்கிறேன்

  ReplyDelete
 14. அடடே போட்டாச்சா! அருமையான பட்டியல்.. பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்!

  ReplyDelete
 15. நன்றி தியாகு,
  நன்றி அதிஷா

  ReplyDelete
 16. பெரிய சைஸ் என்றால் நல்ல நாவலில்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பதாக தோன்றுகிறது. விஷ்ணுபுரம் பற்றிய உங்களுக்கிருக்கும் அபிப்ராயம் விட்டாலும், தலைமுறைகள், புளிய மரத்தின் கதை, பழையவை என்றாலும் 'அவசியம்' படிக்கவேண்டியவை என்பதே என் எண்ணம். நன்றி.

  ReplyDelete
 17. உங்கள் கருத்துக்கு நன்றி அசோக்

  ReplyDelete