Tuesday, December 21, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


நாஞ்சில் நாடனுக்கு இந்தமுறை சாஹித்ய அகதமி விருது சூடிய பூ சூடற்க தொகுப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.அவர் என்னோடைய முன்னோடி மட்டுமல்ல ,என் தந்தையை போன்று என்னிடம் அன்பு செலுத்தி ஊக்கப்படுத்தி வருபவர் .எனக்கே கிடைத்தது போல மகிழ்வில் உள்ளேன்.தமிழில் தொடர்ந்து தகுதியற்றவர்களே சமீபத்தில் சாகித்ய அகாதமி வாங்கியிருக்கும் நிலையில் நாஞ்சில்நாடனுக்கான இந்த அங்கீகாரம் ஒரு தொடக்கம்...நாஞ்சில் நாடன் மிக அரிய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்... மிதவை, என்பிலதனை வெயில் காயும், எட்டுத்திக்கும் மதயானை போன்ற முக்கியமான நாவல்களை எழுதியிருக்கிறார்.



கேள்விப்பட்டு அவரை போனில் முயற்சி செய்தேன்.மதியம் மூன்று மணியில் இருந்தே அவரது போன்..பிஸியாக இருந்தது.இரவு ஒன்பது மணி வரை இதே நிலை.சரி பெரிய மனிதர்கள் ,எழுத்தாளர்கள் பலர் பேசுவார்கள் என விட்டுவிட்டேன்.இரவு பதினொன்று இருக்கும் .நாஞ்சிலே அழைத்தார்.இந்த விருது நான்கு வருடங்களாக இதோ அதோ என்று போக்கு காட்டி வந்ததால் செய்தி வந்தபோது நம்பவில்லை .என்று குறிப்பிட்டார்.இது தானே தமிழ் எழுத்தாளனின் நிலை.பிறகு சாஹித்ய அகடாமி இல் இருந்து அதிகாரபூர்வமாக தெரிவித்த பின் தான் நம்பியதாக குறிப்பிட்டார்.பேசி கொண்டு இருக்கும் போதே அவர் வீட்டின் போன் அடித்துக்கொண்டே இருந்தது.விடைபெற்றேன் பிறகு தொடர்புகொள்வதாக சொல்லி...ஒரே கொண்டாட்ட மனநிலையில்.

Monday, December 20, 2010

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு

உயிர்மையின் 12 நூல்கள்


நாள் 26. 12. 2010, ஞாயிற்று கிழமை நேரம்: மாலை 5.30மணி
இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்,(LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை


வரவேற்புரை : மனுஷ்ய புத்திரன்
முதலாம் அமர்வு : கட்டுரைத் தொகுப்புகள்

1. இப்போது அவை இங்கு வருவது இல்லை-கிருஷ்ணன் ரஞ்சனா
சிறப்புரை : அழகியபெரியவன்

2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம்- ந. முருகேச பாண்டியன்
சிறப்புரை: மணா

3. பெருகும் வேட்கை- அழகிய பெரியவன்
சிறப்புரை : ந. முருகேச பாண்டியன்

இரண்டாம் அமர்வு : சிறுகதைகள்
1. விமலாதித்த மாமல்லன் கதைகள்

சிறப்புரை : சுகுமாரன்

2. வெள்ளைப் பல்லி விவகாரம்: லஷ்மி மணிவண்ணன்
சிறப்புரை : லீனா மணிமேகலை

3. சுகுணாவின் காலைப் பொழுது –மனோஜ்
சிறப்புரை : ஷாஜி


மூன்றாம் அமர்வு : கவிதைத் தொகுப்புகள்

1. இவளுக்கு இவள் என்றும் பேர்- கார்த்திகா
சிறப்புரை: சுப்ரபாரதி மணியன்

2. K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
சிறப்புரை: அ.ராமசாமி

3. தீக்கடல்-நர்சிம்
சிறப்புரை: நா.முத்துக்குமார்

4 வெயில் தின்ற மழை- நிலா ரசிகன்
சிறப்புரை : பவா.செல்லத்துரை

5. இசைக் குமிழி- ஹவி
சிறப்புரை : ஸ்ரீநேசன்

6. ஞாயிற்றுக் கிழமை மதியப் பூனை-பொன்.வாசுதேவன்
சிறப்புரை: இந்திரன்
........................................................................................................................................

அனைவரும் வருக !

அடையாளத்தின் புதிய வெளியீடுகள்:

அடையாளத்தின் புதிய வெளியீடுகள்:

எம். ஜி. சுரேஷ் எழுதியவை

  1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம்; வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப்பெட்டியைப் போல், கதைக்குள் கதையாகப் பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் முதல் வகைமை மீறும் (Crossover) நாவலான இது ஏக காலத்தில் சிறுகதைத் தொகுப்பாகவும், நாவலாகவும் இருக்கிறது. தவிரவும், இது வெகுஜனப் பத்திரிகைக் கதையின் சுவாரஸ்யத்தையும், இலக்கியப் பிரதியின் தீவிரத்தன்மையையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கதையை மூன்று பேர் தொடர்ந்து சொல்லும் புதிய மரபைத் தமிழில் துவக்கி வைத்து, ஆசிரியத்தன்மையைக் (Authorship) கேள்விக்குள்ளாக்குகிறது. திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்ற இந்த நாவல், இருபதாம் நூற்றாண்டு உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான பத்து சிறந்த நாவல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

<><><>

2.அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்

இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாக பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக, குரூரமான நிகழ்காலம் கட்டப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன் வைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.

<><><>

3.சிலந்தி

துப்பறியும் மர்மக்கதைகள் இலக்கியம் அல்ல என்கிற பொதுப்புத்தியைத் தகர்த்து,மேற்கே தீவிரம் மிகுந்த துப்பறியும் இலக்கியப் பிரதிகளை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இந்த நாவலும் அத்தகைய ஒரு முயற்சியே. தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது. ஆசிரியனும், வாசகனும் பங்கு பெறும் ஒரு நூதன விளையாட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் வாசகனை பார்வையாளன் என்ற நிலையிலிருந்து விலக்கி, பங்கு பெறுவோனாக மாற்றிக் காட்டுகிறது.

<><><>

4. யுரேகா என்றொரு நகரம்

சரித்திரத்துக்கு எப்போதுமே ஒரு புனைவின் கவர்ச்சி இருக்கிறது.காரணம் அதில் கலந்திருக்கும் பொய்யின் விகிதம்தான். எல்லாக் காலங்களிலுமே, சரித்திரம் என்பது அந்தந்த அதிகார வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு ருசிகரமான பொய்கள் கலந்து எழுதப்பட்டவையே. அப்படிப்பட்ட ஒரு சுவையான நிகழ்வைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இதில் ஆதிமனிதன் வடக்கிலிருந்து தெற்கே புலம் பெயர்ந்து வரவில்லை; தெற்கிலிருந்துதான் வடக்கே பரவினான் என்றொரு புதிய கண்டுபிடிப்பு முன் வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்படும் பரபரப்பும், இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளும், இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் (History) புனைவைப் (Lies) பற்றிய, புனைவு(Fiction)எனலாம்.

<><><>

5. 37

அறிவியல் புனைகதையான இந்த நாவலில், தொடக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உரையாட ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து, அந்த அறையில் உள்ள புகைப்படம், கணினி சிப்பம், படுக்கையறை போன்ற அஃறிணைப் பொருட்களும், சென் குப்தா, நரேஷ் போன்ற உயர்திணை கதாபாத்திரங்களும் பண்டைய விக்கிரமாதித்தன், மதன காமராஜன் போன்ற கதை மரபில் கதையை மேற்கொண்டு தொடர்கின்றன. அந்த விவரணையில், கனவும், நனவும், உண்மையும், நகல் உண்மையும் இன்னதென்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன. இதனால், இந்த நாவல் பண்டைய வாய்மொழிக்கதை மரபையும், நவீன அறிவியல் புனைகதை மரபையும் ஒன்றிணைத்து ஒரு பலகுரல் பிரதியாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.

<><><>

6. இஸங்கள் ஆயிரம்

இஸங்கள்என்று அறியப்படும் கோட்பாடுகள் பற்றிப் போதிய நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. உலகக் கலை இலக்கிய வரலாற்றின் முதல் கோட்பாடான கிளாஸிஸம் முதல் இன்றையத் தேதியில் கடைசி இஸ்மாக வந்திருக்கும் போஸ்ட்-போஸ்ட்மாடர்னிஸம் வரையிலான ஏராளமான கோட்பாடுகள் குறித்து ஒரே கூரையின் கீழ் வைத்து இந்நூல் விவாதிக்கிறது. இஸம்என்றால் என்ன? அது ஏன் முளைக்கிறது என்பது குறித்துத் தீவிரமாக ஆராயும் இந்த நூல், கலை இலக்கியப் பரப்பில் இது வரை வெளி வந்திருக்கும் எல்லா முக்கியமான இஸங்கள் பற்றியும் அவற்றின் சுருக்கமான வரலாறு பற்றியும் எடுத்துரைக்கும் முதல் தமிழ் நூலாக வெளி வந்திருக்கிறது.

<><><>


தமிழவன் எழுதியவை

1. இரட்டைச் சொற்கள்

இத்தொகுப்பில் உள்ள கதைகள் நூதனத் தன்மை வாய்ந்தவை. கதை என்ற நிகழ்ச்சியை மீறிச் சென்று ஒருவித பன்முகத்தன்மையை எய்துபவை. இவை அர்த்தங்களை ஒத்திப் போடுவதன் மூலம் மொழியைக் கடந்து செல்கின்றன. நிகழ்ச்சிகளைக் கதையாக்குதல், உருவகக் கதை சொல்லல், பழைமையை நினைவு கூரல், புதுமையை வரவேற்றல் போன்ற கதைக் கலையின் அனைத்து சாத்தியங்களையும் இவை கையாள்கின்றன. அர்த்தங்களை வெளியேற்றுதல், ஒரு பாத்திரத்தில் தொடங்கி, இரட்டை பாத்திரமாக மாற்றி பின்பு பழைய பாத்திரத்தை மங்கச் செய்யும் உத்தி என்று பலவிதமான கதையாடல்களை இத்தொகுப்பு முன்வைப்பதன் மூலம் நமக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.

2. சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது, ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்துகிறது. இதனாலேயே இது தமிழில் ஒரு புதிய புனைகதை மரபைத் தொடங்கி வைக்கிறது. புனைவு நாடான தொகிமொலா, ராணி பாக்கியத்தாய், அரசன் பச்சைராஜன் போன்ற கதாபாத்திரங்கள் நமது நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கின்றன. ஒரு கற்பனை தேசத்தின் கதை மாந்தர்களாக உலவும் இந்தப் பாத்திரங்கள், நமது நிஜவாழ்வில் இரத்தமும் சதையுமாய் உலவும் உண்மை மனிதர்களை நினைவு படுத்துகின்றன என்பது ஒரு நூதன அம்சம். இந்த அம்சமே வாசகனின் நனவிலி மனத்தைத் தட்டி எழுப்பும் சாகசத்தைச் சாத்தியமாக்குகிறது.

<><><><><

3. ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

தமிழின் முதல் மேஜிகல் ரியலிஸ நாவலான இது தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப்படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதை சொல்லலில் இந்த நாவல் இயங்குகிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கதை வழி செல்லாமல் படிம வழி செல்கிறார்கள் என்பது முக்கியமானது. ஜானின் உடலில் சிலந்திகள் கூடு கட்டுவது; நிழலோடு சீட்டாடுவது; கிழிந்த சட்டையினரைப் புரட்சிக்குத் தயார் செய்வது; அசையாமல் பச்சையம் பிடித்துக் கிடக்கும் தெய்வமூர்த்தி போன்ற படிமங்களால் இந்த நாவல் வாசகனை ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் செல்கிறது.

<><><><><>

4. ஜி.கே.எழுதிய மர்ம நாவல்

இது ஒரு புதுவகை நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம், இந்நாவலில் அறிவைத் தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடைகிறது. அதன் மூலம் ஒரு தீவிரமான இலக்கியப் பிரதியாகிறது. மர்மநாவல் என்ற பாணியில் புனைவைநவீனமாய் எழுதிச் செல்லும் இந்தப் பிரதி காலம் காலமாக வீரதீர சாகசங்களை நிகழ்த்திய குதிரைவீரர்களைப் பகடி செய்கிறது.சுருங்கை என்னும் புனைவு நகரத்தில் நிகழும் இந்தக் கதையில் துப்பறிபவனோடு வரும் அவன் துணைவனின் அசட்டுத்தனம்,கோமாளித்தனம், அவன் எதிர்கொள்ளும் விபரீதங்கள் முதலியன நமக்குப் புதிய அனுபவத்தை தருகின்றன. துப்பறிபவன் போகும்சூரியக்கோயில், கிரந்தக்கோயில், அவன் நடத்தும் தத்துவ விவாதங்கள் என்று விரியும் இந்த நாவல் ஒரு கதையாடலைத்தொடர் உருவகமாக, எள்ளலுடன் விவரிப்பதன் மூலம் நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.

<><><><><>

5. அவஸ்தை

யூ. அனந்த மூர்த்தி, கன்னடத்திலிரு ந்து தமிழில்: தமிழவன்

ஒரு மனிதனின் உள்ளங்கையில் இந்த உலகமே வந்து விழத் தயாராக இருக்கிறது. ஆனால் அதை அவன் நிராகரிக்கிறான். இந்த இருத்தலியல் அபத்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. கிருஷ்ணப்ப கௌடா சொல்வது பலிக்கிறது. இதுபோன்ற பல செயல்களால் ஏற்படும் செல்வாக்கு அவனை முதலமைச்சர் ஆகும் அளவுக்கு உயர்த்துகிறது. ஆனால், அவன் முதலமைச்சர் ஆக விரும்புவதில்லை. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் திருமணம் செய்துகொள்வதோ வேறு ஒரு பெண்ணுடன். இறுதியில் இணைவதோ முன்னாள் காதலியுடன். கிருஷ்ணப்ப கௌடா ஏககாலத்தில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல்வாதியாகவும் இருக்கிறான். நேர்மையற்ற மனிதர்களுடன் சமத்காரமாகப் பழகவும் செய்கிறான். நவீன மனிதனின் பிளவு பட்ட சுயத்தையும் அதன் விளைவான அவலத்தையும் இந்த நாவல் விரித்துரைக்கிறது.

<><><><><>

Adaiyaalam,
Publishing Group
1205/1 Karupur Salai
Puthanatham 621 310
Trichy Dist, Tamilnadu, India
Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055
email:
info@adaiyaalam.net


தென்மேற்கு பருவக்காற்று = சீனு + செழியன்


நானிருந்த இருக்கைகளின் முன்னால் தெற்கத்தி மக்கள் ரத்தமும் சதையுமாக திரிந்துகொண்டிருந்தனர். சீனு ராமசாமி தேனியின் பல்வேறு மனிதர்களாய் பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டிருந்தான். கடும் வெயில் அம்மக்களின் வெக்கையாய் சிறு திரைக்கூடத்தினுள் வியாபித்துக்கொண்டிருக்கிறது. நான் கோடையின் கடும் தாக்கத்திற்குள் நுழைந்திருக்கிறேன்.


ஒரு கதை தொடங்கியிருக்கிறது. ஆடுகள் அவ்வப்போது மிரளுகின்றன கோடை இரவுகளில். இருட்டினுள் சணல் சாக்குப்பையினுள் மறைந்த உருவங்கள். திருடர்கள் என்னை பயமுறுத்துகின்றனர். நான் செழியனின் காமிராவை மறந்துவிட்டேன். ரஹ்நந்தனின் வாத்தியங்களில் பீதி கிளம்புகிறது. ஆட்டுமந்தையினை காவல் காப்பவனுக்கும் திருடர்களுக்குமிடையே பயங்கர மோதல். தப்பிவிடுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு அமைதியான இரவுக்காக அதை ரசித்துக்கொண்டு ஆடுகளைத் திருடும் சாக்கில் அவ்விரவை அனுபவிக்கவேண்டும் போலிருக்கிறது.


கதையினூடே ஒரு கிராமம் வருகிறது. நான் அங்கு போயிருக்கவில்லை. ஆனால் இச்சமயம் அங்கு போயிருக்கிறேன் இல்லை அழைத்துப்போகபட்டிருக்கிறேன் கதைமாந்தர்களின் பின்னால் அச்சிறு ஊருக்குள் சீனுவும் செழியனும் அழைத்துபோகின்றனர். அச்சு அசலான கிராமம். சிதைந்த மனிதர்கள். சிதிலமடைந்த வீடுகள். உலர்ந்த காற்று வீசும் தெருக்கள். கொதித்துக்கொண்டிருக்கும் பெரும் பாறைகள். நீருக்காக காத்திருக்கும் நிலங்கள். பயிரை நம்பி வாழும் கூட்டத்தினிடையே

ஒரு தாயைக் காண்கிறேன். அவள்தான் தமிழ்பெண்ணின் வீரத்துடன் தன் ஒரு மகனைக் காத்துக்கொண்டு வாழ்கிறாள்.


கண்கள் அவனை மையலில் கட்டிப்போடுகிறது. அரும்பும் காதலில் மனமெல்லாம் என் காதல் ஞாபகங்கள் பூக்கின்றன. என் முன்னால் நித்யா வந்துபோகிறாள். அப்புறம் என் எதிர்வீட்டு பெண் கண்ணம்மா வந்துபோகிறாள். இப்படியே கதைக்குள் என் கதையை சீனு ஞாபகமூட்டிவிடுகிறான்.

காதலை விரியும் இமைகளின் வழியாய் காண்கிறேன். சின்ன சிரிப்பின் வழியாய் கரைகிறேன். செழியனின் ஆழ்ந்த கனவின் வழி மையல்கொள்ளும் விழிகள் என் முன் கொத்துகொத்தாய் அலைகின்றன. நான் தென்மேற்கு பருவக்காற்றினுள் ஆடு மென்ற குழையாய் மறைந்துபோகிறேன். அந்த அம்மாவின் பிள்ளையாய் என்னை மாற்றிவிட்டார்கள். நான் அந்த வசீகரக் கண்களின் பின்னால் என்னைத் தொலைத்து அலைகிறேன். ஆஹா... மாபெரும் வாழ்வின் சுகத்தை அடைகின்றேன். சொட்டுசொட்டாய் என் தேகம் அந்த வயற்காட்டுப்பூமியில் கரைந்துதான் போகின்றது.


ஒவ்வொரு ஜீவனுக்கும் பகையென்பது விளைந்துதான் கிடக்கிறது இந்த உலகமெங்கும். நான் நேசிக்கின்ற அவளுக்கும் ஒரு பகை தானாய் முளைத்து விருட்சமாய் வேர்விடுகிறது. ஆடுகள் மாடுகள் அலையும் பூமி. ஆடுகளுக்குள் கதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. புவியியல் உண்மையும் இத் திரைப்படத்தின் மூல ஆதாரம். இயக்குநர் சீனு ராமசாமி நான்கு வருட உழைப்பில் உருவாக்கிய தாய் மகனின் பாசக்கதை. விரசத்தை ஒரு துளியுளவும் அனுமதிக்காமல் அவர் விரும்பிய கதையை மட்டுமே நம்பி ஒரு அற்புதமான படத்தை தமிழுலகிற்கு வழங்கவிருக்கிறார். வருகின்ற டிசம்பர் 24 படம் உலகமெங்கும் திரையிடப்படவிருக்கிறது.

படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். முதல் படத்தைவிடவும் இப்படத்தை திறமையுடன் குறுகிய நாள்களில் எடுத்து முடித்து தமிழில் நீண்ட நாள்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படத்தை தரவிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன். தன் உழைப்பை காமிராக்கலையை மிக அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். புதுவிதமான காமிராக்கோணங்களில் அந்தக் கிராமத்தையே கண் முன் நிறுத்தியிருக்கிறார். தமிழில் பிரமிப்பூட்டும் கலைஞன் செழியன் என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை. இன்னும் அவரிடம் இருக்கும் திறமைகளை இக்காலம் விரைவில் கொண்டுவரும் என்று சொன்னால் அது மிகையில்லை.


ரஹ்நந்தன் புதிய உத்திகளுடனான இசையில் கேட்பவரின் செவிகளை எளிதில் கவர்ந்துவிடுகிறார். தென்மேற்கு பருவக்காற்றின் கீதங்களை தீட்டி தீட்டித் தந்திருக்கிறார்.

வைரமுத்துவின் கள்ளிக்காட்டுக்கான கள்ளிக்காட்டு வரிகள் காதலை அன்பின் ஆழத்தை அள்ளி வந்திருக்கின்றன.

இன்னும் இன்னும் இத் திரைக்காவியத்தை செதுக்கியவர்கள் ஏராளம். புதுமுக நடிகர்கள் நடிகைகள் ஒரு கிராமத்து வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அம்மாவாய் வரும்

சரண்யா உண்மையில் படத்தின் மற்றுமொரு தூண் என்றால் மிகையில்லை. உணர்ச்சிகளை இயல்பில் வெளிக்காட்டுயிருக்கிறார். இன்னும் அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகிறது.


தமிழில் ஒரு பாரதிராஜா உருவாகிவிட்டார் என்று சொன்னார்கள். இல்லை ஒரு சீனு ராமசாமி உருவாகிவிட்டார்.

நண்பர்களுக்காக இப்படத்தை பிரிவியூவில் பார்த்துவிட்டு எழுதியிருக்கிறேன். வருகிற டிசம்பர் 24 படம் உலகமெங்கும் வெளியாகிறது. பார்த்துவிட்டு படம் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழ்த்துகள்

நன்றி

அய்யப்ப மாதவன்

Sunday, December 19, 2010

அடையாளம் புத்தக கண்காட்சிக்கு வெளியிடும் தமிழவனின் நூல்கள்.


சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது, ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்துகிறது. இதனாலேயே இது தமிழில் ஒரு புதிய புனைகதை மரபைத் தொடங்கி வைக்கிறது. புனைவு நாடான தொகிமொலா, ராணி பாக்கியத்தாய், அரசன் பச்சைராஜன் போன்ற கதாபாத்திரங்கள் நமது நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கின்றன. ஒரு கற்பனை தேசத்தின் கதை மாந்தர்களாக உலவும் இந்தப் பாத்திரங்கள், நமது நிஜவாழ்வில் இரத்தமும் சதையுமாய் உலவும் உண்மை மனிதர்களை நினைவு படுத்துகின்றன என்பது ஒரு நூதன அம்சம். இந்த அம்சமே வாசகனின் நனவிலி மனத்தைத் தட்டி எழுப்பும் சாகசத்தைச் சாத்தியமாக்குகிறது

2. ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

தமிழின் முதல் மேஜிகல் ரியலிஸ நாவலான இது தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப்படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதை சொல்லலில் இந்த நாவல் இயங்குகிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கதை வழி செல்லாமல் படிம வழி செல்கிறார்கள் என்பது முக்கியமானது. ஜானின் உடலில் சிலந்திகள் கூடு கட்டுவது; நிழலோடு சீட்டாடுவது; கிழிந்த சட்டையினரைப் புரட்சிக்குத் தயார் செய்வது; அசையாமல் பச்சையம் பிடித்துக் கிடக்கும் தெய்வமூர்த்தி போன்ற படிமங்களால் இந்த நாவல் வாசகனை ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் செல்கிறது.

3அவஸ்தை

ஒரு மனிதனின் உள்ளங்கையில் இந்த உலகமே வந்து விழத் தயாராக இருக்கிறது. ஆனால் அதை அவன் நிராகரிக்கிறான். இந்த இருத்தலியல் அபத்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. கிருஷ்ணப்ப கௌடா சொல்வது பலிக்கிறது. இதுபோன்ற பல செயல்களால் ஏற்படும் செல்வாக்கு அவனை முதலமைச்சர் ஆகும் அளவுக்கு உயர்த்துகிறது. ஆனால், அவன் முதலமைச்சர் ஆக விரும்புவதில்லை. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் திருமணம் செய்துகொள்வதோ வேறு ஒரு பெண்ணுடன். இறுதியில் இணைவதோ முன்னாள் காதலியுடன். கிருஷ்ணப்ப கௌடா ஏககாலத்தில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல்வாதியாகவும் இருக்கிறான். நேர்மையற்ற மனிதர்களுடன் சமத்காரமாகப் பழகவும் செய்கிறான். நவீன மனிதனின் பிளவு பட்ட சுயத்தையும் அதன் விளைவான அவலத்தையும் இந்த நாவல் விரித்துரைக்கிறது.

4இரட்டைச் சொற்கள்

இத்தொகுப்பில் உள்ள கதைகள் நூதனத் தன்மை வாய்ந்தவை. கதை என்ற நிகழ்ச்சியை மீறிச் சென்று ஒருவித பன்முகத்தன்மையை எய்துபவை. இவை அர்த்தங்களை ஒத்திப் போடுவதன் மூலம் மொழியைக் கடந்து செல்கின்றன. நிகழ்ச்சிகளைக் கதையாக்குதல், உருவகக் கதை சொல்லல், பழைமையை நினைவு கூரல், புதுமையை வரவேற்றல் போன்ற கதைக் கலையின் அனைத்து சாத்தியங்களையும் இவை கையாள்கின்றன. அர்த்தங்களை வெளியேற்றுதல், ஒரு பாத்திரத்தில் தொடங்கி, இரட்டை பாத்திரமாக மாற்றி பின்பு பழைய பாத்திரத்தை மங்கச் செய்யும் உத்தி என்று பலவிதமான கதையாடல்களை இத்தொகுப்பு முன்வைப்பதன் மூலம் நமக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது

தொடர்புக்கு,
info@adaiyaalam.net

Friday, December 17, 2010

இஸங்கள் ஆயிரம் - m.g.சுரேஷ்.

என்னிடம் பேச்சு வாக்கில் ஒரு நண்பர் சொன்னார். ‘இஸங்’களைப் பற்றிப் புத்தகம் எழுதி இருக்கிறீர்களே; ஒவ்வொரு இஸத்தைப் பற்றியும் சுருக்கமாக ஓரிரு வாக்கியங்களில் உங்களால் சொல்ல முடியுமா?’ இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்ட நான் எதற்கும் முயன்று பார்க்கலாமே என்று முக்கியமான இஸங்களைப் பற்றி ஓரிரண்டு வாக்கியங்களில் சொல்லி இருக்கிறேன்.


’இஸங்’களைப் பற்றிய மிக மிகச் சுருக்கமான அறிமுகம்

கிளாசிசம்<>
செவ்வியல் இயம் எனப்படும் இதை, கலை என்பது குறைவற்ற, பரிபூரணமான நிறைவை எய்த வேண்டும் என்று வலியுறுத்தும் கோட்பாடு எனலாம்.

மேனரிஸம்<>

செவ்வியல் தன்மை இருந்தால் கூட, ஒவ்வொரு கலைஞனுக்கும் தனித்த பாணி என்பது அவசியம் என்பதை இந்த ‘பாணி இயம்’ உணர்த்துகிறது.

பரோக்<>

கலை இலக்கியம் ஒழுங்கற்ற முத்தைப் போல் இருக்கிறது; எனவே, அந்த ஒழுங்கின்மையை நீக்கி வழு வழுப்பான முத்தாக அதை ஆக்க வேண்டும் என்ற கலைக் கொள்கையே பரோக்.

ரொமாண்டிசிசம்<>

உணர்ச்சிப் பெருக்கையும், மிகை உணர்ச்சியையும் கொண்டாடும் இயக்கமே ரொமாண்டிசிசம்.

மாடர்னிசம்<>

தொழிற்புரட்சியும் அதன் விளைவான சமூக மாற்றங்களும் கலை இலக்கியப் பெருவெளியில் பாதிப்பை நிகழ்த்திய போது நவீனத்துவம் பிறந்தது.

இம்ப்ரெஷனிசம்<>

வாழ்வின் நழுவிப் போகும் தருணங்களை உறைய வைத்துப் பார்த்தலே இம்ப்ரெஷனிசம். சூரியோதயம்; இயற்கைக் காட்சிகள், ஆகியவற்றை நகலெடுப்பது பழைய பாணி. ஒரிஜினலாகப் பார்த்து வரைவது இம்ப்ரெஷனிச பாணி.

பாவிஸம் <>

வண்ணங்களை வாரி இறைத்துப் பார்வையாளனை ஒரு விலங்கைப் போல் அச்சுறுத்துவதே பாவிஸம்.

எக்ஸ்பிரஷனிசம்<>

மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் போன்ற உணர்ச்சிப் பெருக்கை மிகைப்படுத்தாமல் அப்படியே வெளிப்படுத்துவது எக்ஸ்பிரஷனிசம் ஆகும்.

கியூபிசம்<>

ஒரு பொருளை ஏக காலத்தில் பல்வேறு கோணங்களில் பார்ப்பதை வரைந்து காட்டுவது கியூபிசம் எனப்படும். இதனால் காலம், வெளி ஆகியவற்றை இது கடந்து செல்கிறது.

பியூரிஸம்<>

தூய கலை என்பதே இதன் குறிக்கோள். கலையில் தூய்மையை வென்றெடுக்க வேண்டும் என்பதே பியூரிஸம்.

ஆர்ஃபிஸம் <>

கிரேக்க புராணத்தில் வரும் இசைக்கலைஞன் ஆர்ஃபியஸ் எப்படித் தன் இசையைக் கேட்கும் அத்தனை பேரையும் கவர்ந்தானோ, அதே போல் அனைவருக்கும் புரிகிற மாதிரியும் விரும்புகிற மாதிரியும் கலை இருக்க வேண்டும் என்பதே ஆர்ஃபிஸம்.

ஃபியூச்சரிசம்<>

கலைகள் கடந்த காலத்தை அழிக்க வேண்டும். புதிய இயந்திர சக்தியைக் கொண்டாட வேண்டும்.

ரியலிசம்<>

யதார்த்தவியல், நடப்பியல் என்று அறியப்படும் இந்த இஸம் எதையும் கூட்டாமல் குறைக்காமல் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்கிறது.

நாச்சுரலிசம்<>

இதை சுருக்கப்பட்ட யதார்த்தவாதம் எனலாம். ரியலிசத்தில் உள்ள அளவற்ற வர்ணனைகளைக் குறைக்கும் போது நாச்சுரலிசப் பிரதி உருவாகிறது.

சிம்பலிசம்<>

ஒரு கவிதையின் உடல் உறுப்புகள் (micro unit) உருவகம் என்றால், அதன் மொத்த உடல் (macro unit) சிம்பலிசம் ஆகிறது.

இமேஜிசம்<>

ஆக்கத்தை விட (creativity) விமர்சனப் பண்பு (criticism) தூக்கலாக இருக்கும் கலையே இமேஜிசம் எனப்படும்.

கன்ஸ்ட்ரக்டிவிசம்<>

கட்டமைப்பியம் எனப்படும் இக்கொள்கை, ’ஒரு கலைஞன் தனது படைப்புகளை சமூகத்தின் அறிவார்ந்த நலன்களைக் கருத்தில் கொண்டே உருவாக்க வேண்டும்’ என்று சொல்கிறது.

அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசம்,.

மறைபொருள் அகத்திறப்பாங்கு என்று தமிழில் வழங்கக்கூடிய இக்கொள்கை, ‘உணர்வு நிலைக்கும், உணர்வற்ற நிலைக்கும் இடையே நிலவும் கூட்டிணைவே அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசம் என்கிறது.

கைனடிக் ஆர்ட்<>

’இயங்கும் கலை’ என்று தமிழில் பொருள் கொள்ளக் கூடிய இந்தக் கோட்பாடு, ஓவியத்தை அதன் அசையாத்தன்மையிலிருந்து விடுவித்து, அதை அசையும் பொருளாக மாற்றியது. கயிற்றில் தொங்கும் பறவை, முப்பரிமாண ஓவியம், உலோகத்துண்டுகளை ஒன்றிணைத்தல், பிரித்தல் போன்ற கலையாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

வார்டிசிசம்<>

சுழற்சி இயக்கக் கோட்பாடான இது, பிந்தைய நிலைமையிலிருந்து பின்னோக்கிப் பழைய நிலைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது.

டாடாயிசம்<>

‘கலை என்பதே பாசாங்கு’ என்று பிரகடனம் செய்த டாடாயிசத்தை ஒரு எதிர்-கலை கோட்பாடு எனலாம். இது உடலிலிருந்து மனத்தைத் துண்டிக்கிறது.

சர்ரியலிசம்<>

அதீத யதார்த்தம் அல்லது கனவுக்கும் நனவுக்கும் இடையே உள்ள கோட்டைக் கலைத்தல் என்று இதைப் புரிந்து கொள்ளலாம்.

சுப்ரிமாட்டிசம்<>

ஓவியத்தை ஜியோமிதி வடிவங்களான சதுரம், நீள்சதுரம், கோடுகள் என்று வரைந்து காட்டுதலே சுப்ரிமாட்டிசம்.

தி ஸ்டைல்<>

பரோக் காலம் உருவாக்கிய டாம்பீகமான கட்டடக்கலைக்கு எதிரான, சிக்கனமான செவ்வக, சதுர வடிவிலான கட்டடங்களை உருவாக்கிய கட்டடக் கலையே தி ஸ்டைல்.

பாப் ஆர்ட்<>

பொது மக்கள் சார்ந்த கலை என்ற பொருளில் வழங்கும் இது நுகர்வோர் கலாசாரத்தின் இலச்சினை எனலாம். ‘அழகின்மையே அழகு’ என்று இது போதிப்பதாகக் கருதலாம். கலையின் நிரந்தரத் தன்மையை அழித்து அதைப் பயன் படுத்தித் தீர்க்கும் பொருளாக ஆக்கியது பாப் ஆர்ட்டே.

ஆப் ஆர்ட்<>

ஆப்டிகல் ஆர்ட் என்பதன் சுருக்கமான ஆப் ஆர்ட் விழித்திரையில் தோன்றும் உண்மைக்கும், அதன் மனரீதியான பதிவுக்கும் இடையே நிகழும் பிழையைக் கண்டு கொள்வதாகும்.

மினிமலிசம்<>

ஒரு கலைப் படைப்பில் ஒரு கலைஞனின் நேரடிச் செயல்பாடு குறைந்து பிற பொருட்கள் அந்தக் கலைப் படைப்பில் இணைந்து கொள்ளும் போது கலைஞனின் பங்களிப்பு குறைந்து போகிறது. அப்போது அவன் மினிமலிஸ்ட் ஆகிறான்.

கான்செப்சுவல் ஆர்ட்<>

‘கலை என்ற செயல்பாடு கலைக்கு வெளியே இருக்கிறது; அதைக் கண்டு பிடித்துப் பதிவு செய்தலே கான்செப்சுவல் ஆர்ட் ஆகும்.

எக்ஸிஸ்டென்ஷியலிசம்<>

இருத்தலியல் எனப்படும் இது ‘அர்த்தமற்ற உலகில் தன்னை அந்நியனாக உணரும் மனிதனுக்கு இந்த உலகம் அபத்தத்தையும், கசப்பையும், சலிப்பையுமே வழங்குகிறது’ என்று சொல்கிறது.

ஸ்ட்ரக்சுரலிசம்<>

‘பிரதிகள், மொழி,சமூக அமைப்பு போன்ற எல்லாம் சேர்ந்த ஒரு அமைப்பில், அதிலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து பார்க்கும் போதுதான் சொற்களுக்கான அர்த்தம் பெறப்படுகிறது’ என்ற கோட்பாடே ஸ்ட்ரக்சுரலிசம் என்னும் அமைப்பியல் ஆகும்.

போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிசம்<>

‘அர்த்தம் என்பது சொற்களில் இல்லை; பொருள் படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது. அப்படிப் பொருள்படுத்திக் கொள்ளும் அர்த்தம் கூட நிலையானதல்ல. சதா மாறக்கூடியது’ என்பது போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிசம் எனப்படும் பின் அமைப்பியல் சொல்லும் கருத்தியல்.

மேலே இருப்பதைப் படித்து விட்டீர்கள் அல்லவா? எனக்குக் கை வந்திருப்பது பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
<><><><><>><><><><><><>-
m.g.சுரேஷ்

அடையாளம் பதிப்பகம் புத்தக சந்தைக்கு வெளியிட இருக்கும்.M.G.சுரேஷின் நூல்கள்


  1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம்; வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப்பெட்டியைப் போல், கதைக்குள் கதையாகப் பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் முதல் வகைமை மீறும் (Crossover) நாவலான இது ஏக காலத்தில் சிறுகதைத் தொகுப்பாகவும், நாவலாகவும் இருக்கிறது. தவிரவும், இது வெகுஜனப் பத்திரிகைக் கதையின் சுவாரஸ்யத்தையும், இலக்கியப் பிரதியின் தீவிரத்தன்மையையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கதையை மூன்று பேர் தொடர்ந்து சொல்லும் புதிய மரபைத் தமிழில் துவக்கி வைத்து, ஆசிரியத்தன்மையைக் (Authorship) கேள்விக்குள்ளாக்குகிறது. திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்ற இந்த நாவல், இருபதாம் நூற்றாண்டு உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான பத்து சிறந்த நாவல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

<><><>

2.அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்

இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாக பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக, குரூரமான நிகழ்காலம் கட்டப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன் வைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.

<><><>

    3.சிலந்தி

துப்பறியும் மர்மக்கதைகள் இலக்கியம் அல்ல என்கிற பொதுப்புத்தியைத் தகர்த்து,மேற்கே தீவிரம் மிகுந்த துப்பறியும் இலக்கியப் பிரதிகளை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இந்த நாவலும் அத்தகைய ஒரு முயற்சியே. தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது. ஆசிரியனும், வாசகனும் பங்கு பெறும் ஒரு நூதன விளையாட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் வாசகனை பார்வையாளன் என்ற நிலையிலிருந்து விலக்கி, பங்கு பெறுவோனாக மாற்றிக் காட்டுகிறது.

<><><>

4. யுரேகா என்றொரு நகரம்

சரித்திரத்துக்கு எப்போதுமே ஒரு புனைவின் கவர்ச்சி இருக்கிறது.காரணம் அதில் கலந்திருக்கும் பொய்யின் விகிதம்தான். எல்லாக் காலங்களிலுமே, சரித்திரம் என்பது அந்தந்த அதிகார வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு ருசிகரமான பொய்கள் கலந்து எழுதப்பட்டவையே. அப்படிப்பட்ட ஒரு சுவையான நிகழ்வைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இதில் ஆதிமனிதன் வடக்கிலிருந்து தெற்கே புலம் பெயர்ந்து வரவில்லை; தெற்கிலிருந்துதான் வடக்கே பரவினான் என்றொரு புதிய கண்டுபிடிப்பு முன் வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்படும் பரபரப்பும், இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளும், இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் (History) புனைவைப் (Lies) பற்றிய, புனைவு(Fiction) எனலாம்.

<><><>

5. 37

அறிவியல் புனைகதையான இந்த நாவலில், தொடக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உரையாட ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து, அந்த அறையில் உள்ள புகைப்படம், கணினி சிப்பம், படுக்கையறை போன்ற அஃறிணைப் பொருட்களும், சென் குப்தா, நரேஷ் போன்ற உயர்திணை கதாபாத்திரங்களும் பண்டைய விக்கிரமாதித்தன், மதன காமராஜன் போன்ற கதை மரபில் கதையை மேற்கொண்டு தொடர்கின்றன. அந்த விவரணையில், கனவும், நனவும், உண்மையும், நகல் உண்மையும் இன்னதென்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன. இதனால், இந்த நாவல் பண்டைய வாய்மொழிக்கதை மரபையும், நவீன அறிவியல் புனைகதை மரபையும் ஒன்றிணைத்து ஒரு பலகுரல் பிரதியாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.

<><><>




6. இஸங்கள் ஆயிரம்

’இஸங்கள்’ என்று அறியப்படும் கோட்பாடுகள் பற்றிப் போதிய நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. உலகக் கலை இலக்கிய வரலாற்றின் முதல் கோட்பாடான கிளாஸிஸம் முதல் இன்றையத் தேதியில் கடைசி இஸ்மாக வந்திருக்கும் போஸ்ட்-போஸ்ட்மாடர்னிஸம் வரையிலான ஏராளமான கோட்பாடுகள் குறித்து ஒரே கூரையின் கீழ் வைத்து இந்நூல் விவாதிக்கிறது. ’இஸம்’ என்றால் என்ன? அது ஏன் முளைக்கிறது என்பது குறித்துத் தீவிரமாக ஆராயும் இந்த நூல், கலை இலக்கியப் பரப்பில் இது வரை வெளி வந்திருக்கும் எல்லா முக்கியமான இஸங்கள் பற்றியும் அவற்றின் சுருக்கமான வரலாறு பற்றியும் எடுத்துரைக்கும் முதல் தமிழ் நூலாக வெளி வந்திருக்கிறது.

<><><>

for contact..

info@adaiyaalam.net

Sunday, December 12, 2010

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்

வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்

தேகம்

நாவல்

ரூ.90

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.

சரசம் சல்லாபம் சாமியார்

நித்யானந்தர் குறித்து

ரூ.85

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.

குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சிறுகதைகள்

ரூ.60

சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.

கலையும் காமமும்

விவாதங்கள்

ரூ.100

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்

மழையா பெய்கிறது

சர்ச்சைகள்

ரூ.95

சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.

கடவுளும் சைத்தானும்

கட்டுரைகள்

ரூ.60

சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.

கனவுகளின் நடனம்

சினிமா பார்வைகள்

ரூ.110

இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.

சாரு நிவேதிதா

(முன்னுரையிலிருந்து)


Wednesday, December 8, 2010

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா


Dear All,


It takes immense pleasure in inviting you to my book release function on 13th December 2010 at காமராஜர் அரங்கம் between 6:00 pm to 10 p.m. Seven new books published by Uyirmmai Publications is being released in the event. The event will be honored by esteemed guests whom includes


Ms. கனிமொழி , MP

மிஷ்கின்

எஸ் . ராமகிருஷ்ணன்

Dr. நல்லி குப்புசாமி செட்டியார்

அ . நடராஜன்

ரவிக்குமார் M.L.A

குஷ்பூ

மனுஷ்ய புத்திரன்

தமிழச்சி

மதன் (கார்டூனிஸ்ட்)


I solicit your gracious presence on the occasion and request you to make it convenient to attend the function and make it a grand success.

I request you to kindly forward the Invitation online to our friends and well wishers.

Charu Nivedita

Address of the Venue :

Kamaraj Arangam

492, Anna Salai

Teynampet

Chennai

சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு

நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :

  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)


Thursday, December 2, 2010

நந்தலாலா ஒரு விவாதம்


“It’s not where you take things from — it’s where you take them to.”

-Jean Luc Godard-

இரண்டு நாள் தூக்கம் பிடிக்காமல் தமிழ் படமொன்றை கட்டிக்கொண்டு அழுதிட எனக்கும் ஆசை தான்.. (ஆனால்..)
நான் போற்றும் உன்னத படைப்புகளோடு சேர்த்துக்கொண்டு உச்சி முகர்ந்து கொண்டாடிட எனக்கும் ஆவல் தான்..(ஆனால்..)..இந்த 'ஆனால்' என்பதை என்ன செய்வது!!...?

நல்ல முயற்சி தான் ஆனால்...compromise இல்லை தான் ஆனால்.. இந்த 'ஆனால்' இல்லாமல் சமீபத்தில் வந்த ஏதேனும் தமிழ் படத்தை முழுமனதோடு பாராட்ட முடியுமா என்ன? அப்படியே 'போய் தொலையட்டும்!' என்று பாராட்டினாலும்..அதை 'கலை படம்', பல திரை மேதைகளின் சிரிஷ்டிகளுக்கு ஒப்பானது என்று பலர் உளறிகொண்டிருக்கும் போது சும்மா இருக்க முடியுமா? மனசாட்சிக்கு உண்மையாய் இருப்பதற்கும், தொழில் என்று கருதி பிழைப்பதற்கும் வித்யாசம் இல்லையா?
காப்பி அடிப்பது புதிதல்ல..இதற்கு ஏன் இத்தனை குமைச்சல் உங்களுக்கு? என்று கேட்கலாம்.. சமீபத்தில் வந்த 'கஜினி' , 'எந்திரன்' போன்ற படங்கள் ஒட்டுமொத்தமான வணிக சரக்குகள்.. அது போன்ற சரக்குகளை நாம் தவிர்க்க இயலாது.. அது வேறு..வணிகசினிமாவில் காப்பி அடிபவர்களுகென்று ஒரு பாரம்பரியமே உள்ளது.. பாலசந்தர் தொடங்கி.. கமல்ஹாசன், மணிரத்தினம் என்று நீளும் லிஸ்டில் இப்போது மிஷ்க்கின்..மிஷ்க்கின் ஒரு படி மேலே போய், கமர்ஷியல் கூறுகள் ஏதுமில்லாமல் "கலை சேவை" செய்திருக்கிறார்..முன்னவர்களாவது தங்கள் குருநாதர்களுக்கு சமர்பணங்கள் இடவில்லை.. மிஷ்க்கின் அதையும் தைரியமாக செய்துள்ளார்.. ஒரு முறை Memento'வின் இயக்குனரான christopher nolan'னிடம் அணில் கபூர் 'கஜினி' பற்றி சொல்லியிருக்கிறார்.. Nolan அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்.. நன்றாக வாய்விட்டு சிரித்திருக்கிறார்.. அவ்வளவு தான் மரியாதை..

மக்களை "மேல்நிலைக்கு" கொண்டுசெல்ல வந்திருப்பதாக சொல்லப்படும் ஒரு படத்தை பற்றியும் அதன் படைப்பாளியை பற்றியும், படைப்பிற்கும் படைப்பாளிக்கும் இடையே உள்ள யோக்கியதையை (legitimacy) பற்றியும் உரையாடித் தானே ஆக வேண்டும்..?...' இது ஒரு 'கலைப்படைப்பு', வியாபார நோக்கத்தில் இருந்து விலகி நிற்கிறது என்று கூச்சலிடும் போது, கேள்விகளை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்..கலையின் அடிப்படை யோகியதைகளில் இருந்து விலகி நிற்கும் படத்தை பற்றி அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் ஆளுமைகள் பெருவாரியானோர், உணர்ச்சிவசப்பட்டு கண்மூடித்தனமாக பாராட்டிக் கொண்டிருப்பதை கண்டு சகிக்க முடியவில்லை..ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு திரைப்படம் பயிலும் மாணவன், ஒரு மாஸ்டரின் உத்திகளை imitate செய்வதை ஆதரிக்கலாம்.. அதை கலை என்று சொல்லப்போவதில்லை, அவனுடைய வேலையிலும் தந்திரங்கள் இருக்கப்போவதில்லை, அது வெளிப்படையானது..இந்த அடிப்படை அம்சம் கூட மிஷ்க்கினிடம் இல்லை.. craft, style, content எதுவுமே அவருடையதல்ல.. இந்த மூன்றையும் தனது மேதாவித்தனத்தின் தலைவீங்கிய தன்மையுடன் காட்சிக்கு காட்சி இணைக்கும் சாமர்த்தியம் அவருடையது..இது போன்ற பண்புடைய படங்கள் தமிழின் கிளிஷேக்களை உடைகிறேன் பேர்விழி என்று ஆபத்தான முன்மாதிரிகளை உருவாக்கும் வாய்ப்புண்டு..மிஷ்க்கின் காப்பி அடித்துவிட்டார் நானும் செய்கிறேன் என்று கைக்காட்டிவிட்டு மொன்னையான போலிகளை உருவாக்க கிளம்புவார்கள்..அல்லது படம் ஓடவில்லை என்று மீண்டும் அதே கிளிஷேக்களை தான் செய்வார்கள்..

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் 'மிஷ்க்கின்' என்ற பெயரை கேட்டதும் அவர் ஒரு ரஷியர் என்று நினைத்தேன், பின்பு அவரது படங்களை பார்க்கும் போது அவர் ஒரு கொரியரோ அல்லது சீனரோ என்ற ஐயத்தில் இருந்தேன்.. நந்தலாலா பார்த்தபின்பு தான் அவர் ஒரு ஜப்பானியர் என்று உணர்ந்தேன்.. எப்போதுமே அவர் படங்களில் எனக்கு ஒரு 'UTOPIAN' தன்மை தெரியும்.. இந்த கதை மாந்தர்கள் சென்னையில் தான் வசிக்கிறார்களா? இந்த கதை எங்கே நடக்கிறது? உண்மையில் இப்படி எல்லாம் ஆட்கள் உள்ளார்களா? என்று. உங்கள் படம் செவ்வாய் கிரகத்தில் கூட நடக்கலாம் ஆனால் ஒரு நல்ல படைப்பில் இது போன்ற அடிப்படை கேள்விகள் எழாது. அவர் தமிழ் இலக்கியங்களையோ, தமிழ் திரைப்படங்களையோ, தமிழ் வாழ்க்கையையோ பொருட்படுத்துவதில்லை என்று தோன்றும்...எனக்கு ஆறுதல் செய்யும் வண்ணம் மிஷ்க்கின் 'item' songs (வாலமீனுக்கும், கத்தாழக் கண்ணால) செய்யும் போது மட்டும் local'லாக இறங்குவார்.. கற்பனை திறனும் தனித்துவங்களும் அந்த பாடல்களின் நேர்த்தியில் தெரிந்தது.. 'நந்தலாலா'வில் அதுவும் இல்லை.. ஏனென்றால் அவர் கலைப் படம் எடுக்கிறார்..

'நந்தலாலா'வின் மூலமான 'கிகுஜிரோ'வில் தகேஷி கிட்டநோவின் craft அவர் கதைக்கும், அதன் அடிப்படை சாரம்சதிற்க்கும் துணை நிற்கும்.. அதற்கு வலு சேர்க்கும்..அந்த craft ஜப்பானியர்களின் கலை, வரலாறு, போன்ற வாழ்வியல் கூறுகளில் இருந்து தன்னுணர்வுடன் முதிர்ந்து எழுந்ததாக இருக்கும்..நந்தலாலா'வில் மிஷ்க்கின் பல இடங்களில் இருந்து உருவிய craft'டை வைத்துக்கொண்டு நம்மை எளிமை என்கிற பெயரில் பிரமிப்புக்குள் தள்ளுவதிலேயே இருப்பார்.. படத்தின் அடிப்படை அம்சமான Innocence என்பதை காலி செய்திருப்பார்...படத்தில் வரும் சிறுவனில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் மிஷ்க்கி'னின் கைப்பாவைகளை போல் தான் உள்ளார்கள்.. அவருக்கு இருப்பது ஒரு cinematic obsession.. ஒரு மாஸ்டராக மாறிவிட வேண்டும் என்ற obsession..மனித வாழ்வில் அவலங்களை சொல்வதெல்லாம் படத்திற்குள் வைக்கும் சமாச்சாரம்.. அவ்வளவு தான்.. அது வாழ்வாக இல்லை..இந்த மாதிரி ஒரு படம் எடுப்பது அவரது கனவு.. கனவை நிறைவேற்றிவிட்டார்.. தயாரிப்பாளரையும், பார்வையாளர்களையும் 'நல்ல படம்' என்கிற பெயரில் ஏமாற்றிவிட்டார்.. அதை விட கொடுமை அவர் மூல படைப்பிற்கு செய்திருக்கும் துரோகம்.. ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது " 'பொல்லாதவன்', 'பைசைகில் தீவ்ஸின்' இன்ஸ்பிரேஷனா?' .. அதற்கு அவர் அளித்த பதில் "பைசைகில் தீவ்ஸ் படம் பார்த்திருக்கிறேன்..தயவு செய்து அந்த படத்தோடு என் படத்தை ஒப்பிட வேண்டாம்.. அது ஒரு கலை படைப்பு.. எனக்கு அதை என் படத்தோடு ஒப்பிட்டு உரையாட சங்கடமாக இருக்கிறது. அதற்கு எனக்கு தகுதி இல்லை" இது போன்ற தெளிவுள்ள இயக்குனர்களே பார்வையாளர்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள்...

'பதேர் பாஞ்சாலி' செய்வதற்கு 'பைசைகில் தீவ்ஸ்' பெரும் உந்துதலாக (Inspiration) இருந்தது என்று சத்யஜித் ரே சொன்னதை அறிந்திருப்பீர்கள்.. ஆனால் இரண்டு படங்களுக்கும் நேரடியான சம்பந்தம் ஏதுமில்லை..ரே'வின் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த பார்வையும் (personal vision) ஊடகம் சார்ந்த தொலைநோக்கும் (cinematic vision) பெரும் அலையை ஏற்படுத்தும் அளவிற்கு எழுச்சியோடு இணைந்திருக்கும்..அது கலை..அது சிருஷ்டி..
தார்கோவ்ஸ்கி mirror படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு காட்சி அப்படியே பெர்க்மெனின் 'persona' படத்தை நினைவுபடுத்துவதை உணர்ந்திருக்கிறார்.. இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்..mirror படத்தில் அந்த காட்சியை பார்தீர்களேன்றால் தார்கோவ்ஸ்கி எவ்வளவு ஆன்மரீதியாக இணைந்திருக்கிறார் என்பதை உணரலாம்..அந்த காட்சி பெர்கம்னுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.. அதுவல்லவோ சமர்ப்பணம் என்பது!
காலப்போக்கில் 'நந்தலாலா' பற்றிய பிரமிப்பு என்னும் கானல் நீர் விலகிய பிறகு, அதன் 'மைல் கல்' தோற்றமும் விலகிவிடும்..

(பேஸ் புக்கில் நந்தலாலா பற்றிய விவாதங்களில் நான் எழுதியவைகள் இங்கே தொகுக்க்கப்பட்டிருக்கிறது.. இது விமர்சனம் அல்ல..)

-மாமல்லன் கார்த்தி-

Wednesday, November 24, 2010

தேனீர் கோப்பையில் பெய்த மழை





மதுரை புத்தகத் திருவிழாவிற்குப் போவது என்பது உண்மையில் ஊர்த்திருவிழாவிற்கு போவது போன்ற உற்சாகம் தரும் எண்ணமாகவே கடந்த 4-5 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அழகிரி மற்றும் பூப்புனித விழா கட்- அவுட்டுகள் மதுரையின் நிலக்காட்சியின் ஒரு பகுதியாக மாறிவிட்ட போதும். நுண்மையான கலை இலக்கியச் செயல்பாடுகள் கொண்ட வாசகர்கள், எழுத்தாளர்களின் கேந்திரமாக மதுரை வளர்ந்து வருவதும் அதன் வசீகரங்களில் ஒன்று. கழுத்திலும் கையிலும் ஏராளமான நகை அணிந்த ஆண்களுடன் நவநாகரிக யுவதிகளின் நகரமாகவும் மதுரை மாறிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ‘பாரிÕல் அமர்ந்திருந்தபோது அங்கு பெண்களே இல்லையே என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் சொன்னார், ‘இதன் நவநாகரிக மாற்றங்கள் ஒரு தோற்றம் மட்டுமே. ஆணாதிக்க சாதிய சமூகப் பண்பாட்டின் மூர்க்கம் கொஞ்சம்கூட குறையாத ஊர் இது’ என்று.

புத்தகக் கண்காட்சிகள் எத்தனை எத்தனை வினோதமான வாசகர்களை, மனிதர்களைக் கொண்டுவருகிறது என்பது பார்த்து தீராத வினோதம். ஒருவர் Òஎனக்கு பழனி பாரதி ரொம்ப ‘க்ளோஸ்’ என்று என்னிடமும், ‘மனுஷ்ய புத்திரன் எனக்கு ரொம்ப க்ளோஸ்’ என்று பழனி பாரதியிடமும் வந்து மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார். நானும் சாருவும் உயிர்மை ஸ்டாலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா வந்தார்.

சாருவிடம் ‘நீங்கள் சாருநிவேதிதா தானே.”

‘ஆமா. . .’

‘சார். . . உங்க ஓ. . . பக்கங்கள் சூப்பர்!’

‘அது நான் இல்லை. ஞானி.’

‘ஓ. . . அப்ப ஞானபானு ஸ்டால்ல இருந்த அவர்தான் நீங்கன்னு நினைச்சுட்டேன்.’’

அந்த அம்மா என் பக்கம் திரும்பி ‘மனுஷ்ய புத்திரன் சார் வணக்கம்’ என்றார். சரியான பேர் சொன்னதால் நான் சாருவை நோக்கி ‘உங்களைவிட நான்தான் பாப்புலர்’ என்றேன். அந்த அம்மா அதைக் கவனிக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். ‘ஆனா, உங்க ஒரிஜினல் நேம் நம்பிராஜன் தானே?’ முத்துக்கிருஷ்ணன் சொன்னார், ‘நவீன எழுத்தாளர்களுக்கு கிடைக்கத் துவங்கியிருக்கும் திடீர் பாப்புலாரிட்டி நிறையப் பேரை பதற்றமடைய வைத்திருக்கிறது. நானும் எழுதணும்னா என்ன செய்யணும்னு நிறையப் பேர் கேட்கிறாங்க. . . நம்மளையெலாம் பார்த்தவுடன் இவனே எழுத்தாளன் ஆயிட்டான், நாம ஆக முடியாதா என்று யோசிக்கிறாங்க’ என்றார் விசனத்துடன்.

மதுரை புத்தகக் கண்காட்சியின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளில் ஒன்று கவிதை வாசிப்பு. தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெறும் அந்த நிகழ்வு ‘நவீன கவிதை மொழிக்கு ஆற்றி வரும் பங்களிப்பு’ குறித்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கிறேன். தமுக்கம் மைதானத்தில் நானும் தேவதச்சனும் சமயவேலும் கொட்டுகிற மழையில் டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் நின்றிருந்த கூரை ஒழுகி தேநீர் கோப்பையில் மழை பெய்ய ஆரம்பித்தது (ஜென்). வேறு வழியில்லாமல் கவிதை வாசிப்பு அரங்கிற்குள் ஒதுங்கினோம். ஆனால் அப்படி ஒதுங்கியபோது மழையைப் பார்க்காமல் மேடையைப் பார்ப்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தோம். அப்போது தான் மேடையில் சிறப்புரையாற்றிவிட்டு இறங்கி வந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பிரியத்துடன் வந்து பேசிவிட்டு அவசரமாக விமானத்தைப் பிடிக்க விரைந்தார் (அந்த அவசரத்திலும் உயிர்மை நூல் வெளியீட்டு விழா தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு புகைப்படத்தைப் பற்றி அங்கதம் மிகுந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லி விட்டுச் சென்றார்). கவிதை வாசிப்பில் ஒருவர் தனது சொந்தக் கவிதை, பிடித்த தமிழ்க் கவிஞர் கவிதை, பிடித்த பிறமொழிக் கவிஞர்கள் கவிதை என்று வாசிக்க வேண்டும். உமா மகேஸ்வரி வந்தார், என் கவிதையை வாசித்தார். சக்தி ஜோதி வந்தார், என் கவிதையை வாசித்தார். இந்திரா பிரியதர்ஷினி வந்தார், ‘மூத்த கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கங்கள்’ என்றார். அருகில் இருந்த சமயவேல் ‘போன வருஷமும் இதுதான் நடந்தது’ என்றார். விடுவாரா பூபதி, Ôஎங்கள் மூத்த முன்னோடி கவிஞர்கள் தேவதச்சன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்று சொல்லி மூன்று பேரின் கவிதைகளையும் வாசித்தார். ஒருகணம் நரைகூடி கிழப்பருவமெய்தி கொடுங் கூற்றுக்கிரையென பின்மாயும் உணர்வில் துவண்டேன். தேவதச்சன் அருகில் இருந்து நான் திடீரென அடைந்த முதுமையை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்து அருகில் அமர்ந்துகொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணக்கமான ஒரு மன நிலையில் இருந்த தருணம் அது.

கைலாஷ் சிவன் ததும்பிக்கொண்டிருந்தார். ‘டேய். . . பிரமிள் பேரைச் சொல்லுங்கடா. . . அவன ஏண்டா மறைக்கப் பார்க்கிறீங்க’ என்று இடையிடையே சப்தமிட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் அதைக் கவனிக்காத மாதிரி பாவனை செய்தபடி கவிதைகளில் கவனம் செலுத்த முயன்றது. சுகிர்தராணி கவிதை வாசிக்கத் தொடங்கியபோது, கைலாஷ் சிவனின் குரல் அதிகரித்தது. தன்னுடைய செருப்புகளைக் கழற்றி மேடையை நோக்கி நடந்து செல்லும் பாதையில் எறிந்தார். எனக்குப் பதற்றம் அதிகரித்தது. நான் அருகில் இருந்ததால் என்னுடைய தூண்டுதல் என்று நினைக்க அதிகம் வாய்ப்பிருந்ததால் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடலாம் என்று பார்த்தால் வெளியே ஒரே மழை. நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் கடைசியில் இருந்த கவிஞர் சின்னச்சாமியின் (துணை ஆணையர், சட்டம், ஒழுங்கு, மதுரை மாநகர்) முகத்தை பரிதாபமாகப் பார்த்தேன். அவர் எல்லா எழுத்தாளர்களிடமும் பிரியமும் இணக்கமும் கொண்ட அருமையான மனிதர். யூனிஃபார்மில் காவலர் புடைசூழ பயமுறுத்தும் தோரணையில் இருந்தாலும் குதூகலமான மனநிலையில் இருந்தார். கைலாஷ் சிவனைச் சமாதானப்படுத்த முயன்றார். கைலாஷ், பிரமிள் பெயரை யாரும் சொல்லாதது பற்றி டெபுடி கமிஷனரிடம் தொடர்ந்து புகார் செய்துகொண்டேயிருந்தார். சின்னச்சாமி மேலேயே அவர் தடுமாறி விழுந்தபோது காவலர்கள் பதற்றத்துடன் ஓடி வருவதும் சின்னச்சாமி அவர்களைப் போகச் சொல்லிவிட்டு கைலாஷை சமாதானப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கூட்டம் முடிந்ததும் சின்னச்சாமியிடம், ‘என்ன சார், போலீஸ் பாதுகாப்புடன் புரட்டஸ்டா” என்றேன். ‘இவனோட லெவல் தெரியாம அளவுக்கு மீறி வாங்கிக் கொடுக்கிறானுங்கள்ல.. அவனுங்கள உள்ள போடணும்’ என்றார் சிரிப்பு மாறாமல்.

மதுரை புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் உயிர்மை ஏற்பாடு செய்து வரும் கூட்டங்களின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஹோட்டல் சுப்ரீமில் எஸ். ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்களின் வெளியீட்டுக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். செகாவின் மீது பனி பெய்கிறது, காண் என்றது இயற்கை, குறத்தி முடுக்கின் கனவுகள், இருள் இனிது ஒளி இனிது ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற புதிய சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. பிரபஞ்சன், சாரு நிவேதிதா, பாரதி கிருஷ்ணகுமார், கலாப்ரியா, அருணன் ஆகியோர் நூல்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினர். அருணன் ஆய்வாளருக்கு உரிய பாங்கில் தன் கருத்துகளை முன்வைத்தார். கலாப்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவம் மிகுந்த வரிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பாரதி கிருஷ்ணகுமார் பேசியபோது 2 நிமிடங்களுக்கு ஒருமுறை அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவை வெறுமனே நகைச்சுவை துணுக்குகளால் அல்ல. மிக நுட்பமான வாசிப்பிலிருந்து பெருகும் இன்பத்தை அவர் தனது பேச்சு முழுக்க வாசகர்களிடம் பரவச் செய்தார். பிரபஞ்சன் ஒரு எழுத்தாளனின் கதையைச் சொல்லும்போது அவனுக்கே அதைப் புதிதாகத் தோன்றச் செய்வார். அன்றும் அவரது பேச்சு அத்தனை புத்துணர்ச்சி மிகுந்ததாக இருந்தது. சாரு நிவேதிதா பேசத் தொடங்கிய முதல் கணமே பார்வையாளர்களிடம் மிக நெருக்கமான உறவை உருவாக்கிக் கொள்பவர். அதற்குப் பிறகு அது பேச்சு அல்ல, மனப்பூர்வமான அந்தரங்கமான ஒரு உரையாடல். எஸ். ராம கிருஷ்ணன் ஆன்டன் செகாவைப் பற்றி அன்று நிகழ்த்திய சிறப்புரை அவரது மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்று. செகாவின் நூற்றி ஐம்பதாம் ஆண்டில் மதுரை என்ற ஊரில் அவரைப் பற்றிய பேச்சை மன நெகிழ்ச்சியுடன் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்த காட்சி இலக்கியத்தின் எல்லையற்ற நிலப்பரப்பினை ஒருகணம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

மதுரைக் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் என்னை மட்டுமல்ல, கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரையுமே வியப்பிலாழ்த்தியது. ஏராளமானோர் நின்றுகொண்டும் அரங்கிற்குள் நுழைய இடமில்லாமலும் வெளியிலும் இருந்தார்கள். தொலைதூரங்களில் இருந்தெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். எம்.எஸ். நாகர்கோயிலில் இருந்து வந்திருந்தார். சுரேஷ்குமார இந்திரஜித் சொன்னார், ‘இவர்களில் 90 சதவிகிதம் பேரை மதுரையில் நடக்கும் எந்தக் கூட்டத்திலும் நான் பார்த்ததில்லை. எவ்வளவு இளைஞர்கள், புதிய முகங்கள்... ஒரு புதிய வாசகப் பரப்பு இது.’’ என்று. இந்தக் கூட்டம் நடத்தியதன் மிகப்பெரிய அங்கீகாரமாக, பாராட்டாக இதையே நினைக்கிறேன்.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து சென்னையில் இன்னொரு கூட்டத்தை உயிர்மை ஏற்பாடு செய்திருந்தது. செப்டம்பர் 18 ஷாஜியின் இசையின் தனிமை நூல் குறித்து ஒரு விமர்சன அரங்கினை நடத்தினோம். மதுரைக் கூட்டம் பற்றி சுரேஷ்குமார இந்திரஜித் கூறிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக்கொள்ளும் விதமாக ஃபிலிம் சேம்பர் அரங்கம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறு விதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி Òகவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக... மனுஷ்ய புத்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை’’ என்று வாக்குறுதி அளித்துக்கொண்டிருந்தார் (அருண்மொழி நங்கைக்கு அடுத்த படியாக எனக்கும் ஜெயமோகன் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுரம் இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று. ஜெயமோகன் விளக்கங்களால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சமாதானம் அடைந்திருப்பார்களோ இல்லையோ, உயிர்மையின் எழுத்தாளர்களை அகோரப் பசியுடன் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது புதிய பதிப்பாளர் சிறிய நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். மேலும் மதுரைப் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் என்னிடம் கை குலுக்கியதையெல்லாம் தனது நல்லியல்பின் அடையாளம் என்று வேறு எழுதியிருந்தார் (கடவுளே, அவருக்குத்தான் ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிய எவ்வளவு பெருமைகளை அவர் மனதில் பூக்கச் செய்கிறாய் நீ?). சாரு நிவேதிதா அவருடைய புத்தகத்தைக் கிழித்ததற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்பது ஜெயமோகனுக்கு நன்கு தெரியும். ஜெயமோகனின் தொண்டர்களைப்போல ஜெயமோகன் முட்டாள் அல்ல. ஆனாலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏதாவது ஒரு கற்பனை எதிரி வேண்டுமே. மேலும் அவர் என்னுடன் உறவை முறித்துக்கொள்வதாகத் திரும்பத் திரும்ப அறிவிப்பது அந்த முடிவின் மீதான அவரது தடுமாற்றத்தையே காட்டுகிறது. அந்த முடிவை நானும் அவரு மாகச் சேர்ந்துதான் எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். வாழ்க்கையில் இடம் பெற்ற ஒருவரை எப்படி ஒரு தரப்பாக டைவர்ஸ் செய்யமுடியும்? இதற்கு முன்பும் அவர் பல முறை உறவை முறித்துக்கொண்டிருக்கிறார். நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. இப்போதும் பொருட்படுத்தவில்லை (அவரும் கொஞ்ச நாளில் அதை மறந்துவிடுவார். இப்போது அதை நினைவில் வைத்திருக்கும்படி அவரது தொண்டர்களால் வற்புறுத்தப்படுவதால் சங்கடப்படுகிறார். தொண்டர்கள் விஷயத்தில் ரஜினி எப்படி நடந்துகொள்கிறாரோ அதே விவேகத்துடன் ஜெயமோகனும் நடந்துகொள்வது நல்லது).

மேலும் ஜெயமோகன் ‘நான் இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன்’ என்று வேறு தன் வலைப்பதிவில் அறிவித்தார். நான் ஜெயமோகனின் தீவிர ரசிகன் என்பதால் அவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக நவீன இலக்கிய உலகின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நண்பர் விஜய மகேந்திரனுக்கு போன் செய்தேன். ‘விஜய்... ஒரு முக்கியமான விஷயம்... நாளைக் கூட்டத்தில் ஒரு பெரிய ரகளை நடக்கப்போவதாகத் தகவல். . . இளையராஜா ரசிகர்கள் ஜெயமோகன் தலைமையில் நாளை ஷாஜியை கேரோ செய்யப் போகிறார்களாம்... இதற்கான பிளான் ஊட்டிக் கூட்டத்திலேயே தயார் செய்யப்பட்டு விட்டதாம். அனேகமாக ஷாஜிக்கும் எனக்கும் அடி விழலாம் என்று தோன்றுகிறது. எனவே நான் கூட்டத்திற்கு வரமாட்டேன். எனவே எனக்குப் பதில் சாருவை வரவேற்புரை நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் கேரளாவில் இருந்து விமானத்தைப் பிடித்து வந்துகொண்டிருக்கிறார்’ என்றேன் பதற்றமான குரலில்.

நான் நினைத்தது நடந்தது. அடுத்த 1 மணி நேரத்தில் தொடர்ச்சியாகத் தொலை பேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. Ôநாளைக்குக் கூட்டத்தில் ஏதோ பிரச்சினையாமே’ என்று தொடர்ந்து விசாரிப்புகள். ஷாஜியே லைனில் வந்தார்.

‘என்ன சார்... ஏதோ கேள்விப்பட்டேன்.’

‘ஆமா ஷாஜி, ரொம்ப பதற்றமா இருக்கு.’

‘சார், போலீஸ் புரடக்ஷன் கேட்கலாமா?’

‘கேட்கலாம்.. ஆனா என்னன்னு கேட்குறது?’

‘இந்த மாதிரி இளையராஜா பிரச்சினைன்னு...’

‘ஷாஜி, இளையராஜா பத்தி நீங்க எழுதின கட்டுரை..ஜெயமோகன் கூட்டம் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகள் என எல்லாத்தையும் போலீஸ்கிட்ட எப்படி எக்ஸ்ப்ளெய்ன் பண்றது? அவனுங்க கடுப்பாகி நம்ம மேலயே ஆக்ஷன் எடுக்க வாய்ப்பிருக்கு.’’

‘சார் இந்த கனிமொழி, தமிழச்சி கிட்டயெலாம் ஏதாவது சொல்லி ஏற்பாடு பண்ண முடியாதா?’

‘அதெல்லாம் சரி வராது ஷாஜி. எனக்கு நிறைய டாக்டர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் கூட்டத்துக்கு வரச் சொல்லிடலாம். நமக்கு என்ன நடந்தாலும் அவங்க உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடுவாங்க.’

ஷாஜி போனை வைத்துவிட்டார்.

கூட்டம் மலேசியா வாசுதேவனுக்கு சிறப்புரை செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அவரை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். அவர் பாடிக் கேட்டு என் இளமைக் காலத்தை நிறைத்த எண்ணற்ற பாடல்கள் அந்தக் காலகட்ட நினைவுகளுடன் நெஞ்சில் அலைமோதின. மேடையில் ஜெயமோகன் எனக்குப் பக்கத்தில் தான் அமரவேண்டியிருந்தது. எனக்கு அவரது பெருந்தன்மைக்கு கிடைக்கும் இன்னொரு சந்தர்ப்பம் பற்றி எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது (விதி வலியது என்பதையும், இந்த உறவை முறிக்கும் விவகாரம் எல்லாம் ரொம்ப சிக்கலானது என்பதையும் அவரது தொண்டர்கள் இன்னொரு முறை உணர்ந்துகொண்டிருப்பார்கள்).

பிரபஞ்சன் தனது உரையை ஆரம்பித்தார், ‘தமிழனுக்கு எப்போதும் தொழுவதற்கு ஒரு கால் வேண்டும்.’ கூட்டத்திலிருந்து பெரும் கரகோஷம் எழுந்தது. ஒரு விமர்சகனின் பரிசீலனைகள் நமது கலையனுபவம் குறித்த பொதுவான முடிவுகளை எவ்வாறு மாற்றக்கூடியது என்பதை நௌஷாத் அலி, மதன்மோகன் என்ற தனது அனுபவங்கள் வழியே விவரித்தார். கலை விமர்சனங்களின் வழியே உருவாகி வளர்கிறது என்பதையும் வெறுமனே தொழுபவர்கள் கலைக்கு வெளியே இருப்பவர்கள் என்பதையும் தனக்கே உரித்தான மிக கம்பீரமான குரலில் அவர் அந்த அரங்கத்தில் பரவச் செய்தார். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தப் பேச்சு கூட்டத்தின் மொத்த பாதையையும் தீர்மானித்தது. அடுத்துப் பேச வந்த ஜெயமோகன், மலேசியா வாசுதேவனின் கால்களை தொட்டு வணங்குவதாகக் கூறி தனது உரையை ஆரம்பித்தார். வெகுசன கலையை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஒரு கோட்பாட்டுரீதியான தரப்பினை முன்வைத்து விரிவாகப் பேசிய ஜெயமோகன் மக்களின் உணர்வுகளின் வழியாகத்தான் அக்கலைஞர்களை மதிப்பிட வேண்டும் என்றார். (இளையராஜாவுக்குப் பொருந்தும் இதே விதி வெகுஜன கலைஞர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பொருந்தும்.) இறுதியில் ஷாஜி முன் முடிவுகளற்று தனது கட்டுரைகளை எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேச்சினிடையே, ‘இளையராஜா... இளையராஜா’ என்று பெயர் மட்டும் தொடர்பில்லாமல் அடிக்கடி வந்து போனது. எதற்காக அந்தப் பெயர் சொல்லப்படுகிறது என்று யாருக்கும் புரியவில்லை. (கூட்டம் முடிந்ததும் ஒரு வாசகர் சொன்னார்: இளையராஜாவுக்கு ஜெயமோகன் எவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்று எப்படித் தெரியாதோ அதேபோல ஜெயமோகனுக்கும் இளையராஜா எந்த காரணங்களுக்காக அற்புதமான இசையமைப்பாளர் என்பதும் தெரியாது. இந்தக் கூட்டணியின் பலமே இதுதான்).

அடுத்துப் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், “எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டு மட்டும்தான்” என்று தொடங்கி ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கையை இசை எப்படி இட்டு நிரப்புகிறது என்பதையும் இசை நமக்கு உருவாக்கும் உணர்ச்சிகளையும் மனச்சித்திரங்களையும் பற்றி ஒரு துல்லியமான படிமத்தை தனது பேச்சின் வழியாக உருவாக்கினார்

முத்தாய்ப்பாக இயக்குனர் மணிரத்னம் உரையாற்றினார். இன்று இணையம் எல்லோரும் விமர்சகர்களாகும் ஒரு சூழலையும் வாய்ப்பையும் அளித்திருக்கிறது. இந்தச் சூழலில் கலையைக் கறாராக மதிப்பிடக் கூடிய ஷாஜி போன்ற விமர்சகர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றார்.

ஷாஜி தனது ஏற்புரையில் இசை தொடர்பான தனது செயல்பாடுகள், அணுகுமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தேன். முதன் முதலாக ஷாஜியின் குழந்தையைப் பார்த்தேன். சட்டெனத் தூக்கி அணைத்துக் கொண்டபோது அத்தனை களைப்பும் நீங்கியதுபோல இருந்தது.