Tuesday, May 11, 2010

லும்பினி இணைய தளம்


சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது :http://www.lumpini.in/

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

http://www.lumpini.in/

4 comments:

  1. புதிய இணைய தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
    அந்த நிறப்பிரிகை இதழ்கள் எங்களிடம் இருக்கின்றன.

    நன்றி.

    ReplyDelete
  2. பின்னூட்டத்தை பிரசுரிக்க அதில் வசதி இல்லையே... ஏன்... ஜனநாயகமா...

    ReplyDelete
  3. நல்ல அறிமுகம் நண்பரே, நானும் அவசியம் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete