Thursday, October 28, 2010

விஜய் மகேந்திரன்: சில டூவேட்கள் twitter இல் எழுதியவை..

விஜய் மகேந்திரன்: சில டூவேட்கள் twitter இல் எழுதியவை..: "கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் எங்கு பார்த்தாலும் இந்த தீபாவளிக்கு கடை போட்டு இருக்கிறது..சந்தையை பிடித்துவிட்டதோ சன் டிவி மாதிரி! கோல்கொண்டா ஒயின் ..."

சில டூவேட்கள் twitter இல் எழுதியவை..

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் எங்கு பார்த்தாலும் இந்த தீபாவளிக்கு கடை போட்டு இருக்கிறது..சந்தையை பிடித்துவிட்டதோ சன் டிவி மாதிரி!


கோல்கொண்டா ஒயின் இப்போதெல்லாம் கடைகளில் கிடைப்பதில்லை.....


தீபாவளிக்கு முன் நாள் தொடங்கிவிடும் குடிமகன்களின் கொண்டாட்டம்...இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு சரக்கை தானே காய்ச்சி கொள்வதில்..


.

சாரு சிறந்த மொழிபெயர்ப்பாளர்.என்பதில் சந்தேகமே இல்லை.நன்றாக செய்வார்.சு. ரா வே இந்த விஷயதில் பாராட்டி இருக்கிறார் என்றால் பாருங்கள்.
»
vijaymahindran
இப்படி மொழிபெயர்ப்பு போனால்,வைரமுத்துதான் நோபல் பரிசு வாங்குவார்.அவரின் நாவல்கள் செம்மையாக மொழிபெயர்க்க பட்டுள்ளன


நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்ப்பு ..அதற்காக எட்டு திக்கும் நல்லி விருது கூட பெற்றார்.
வட்டார மொழி வழக்கு இவர் கையில் பட்ட பாடு நாஞ்சிலே ரத்த கண்ணீர் விட்டார் நண்பர்களிடம்.

»
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை யில் அம்மன் கொடை என்ற பதத்திற்கு amman's umberlla என்று மொழிபெயர்ப்பு
அதை செய்தவர் இயல் விருது பெற்ற லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ரங் ..

இன்னும் சிலர், மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று புரியவே புரியாத மாதிரி சாகடிப்பார்கள் (உதா நாகார்ஜூனன், கல்குதிரை போன்ற இதழ்கள்)

follow @vijaymahindran

twitter

Friday, October 15, 2010

ஊடுருவல் நாவலின் அடுத்த பகுதி

மனோவும் மதுரையில் ஒரு வருடம் தியாகராஜா கல்லூரியில் பி.காம் படித்தான். கல்லூரியில் சில பெண்கள் நட்புடன் அவனுடன் பழகிய காலம் அது. சக மாணவர்களிடம் இருந்து தனது வசதியின்மையால் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு இருந்தான். இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன் மதியக்காட்சிக்கு மாப்பிள்ளை விநாயகருக்கோ அல்லது பிரியா காம்ப்ளெக்ஸ் தியேட்டருக்கே பைக்கில் பறப்பார்கள். கோனார் மெஸ் சென்று, பிரியாணி சாப்பிடுவார்கள். இவனை எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு வகுப்பில் உட்காரும் சில மாணவர்களில் மனோவும் ஒருவன். அதுவும், மனோவின் அமைதியும் சில பெண்களுக்கு அவன் மெது ஒரு பரிவை ஏற்படுத்தியது. நெருங்கி வந்து பேசினார். தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கீதாவுக்கு இவனைப் பிடித்துப் போனது. அவர்கள் படம் போகும் பொது இவனையும் கூட்டிச் சென்றனர். மூன்று பெண்களுடன் சேர்ந்து படம் பார்த்ததே தியேட்டரில் உட்கார்ந்த போதும் மனோவுக்கு நம்ப முடியாமல் இருந்தது.


தெப்பக்குளம் ஸ்டாப்பில் பஸ் ஏறினால் ஒரு பாலம் ஏறி இறங்கினால் அம்பிகா தியேட்டர் வந்துவிடும்...சிலசமயம் மெதுவாக கல்லூரியில் இருந்து நடந்து கூட வந்துவிடுவான்..அம்பிகா காம்ப்ளக்ஸ் இல் இரண்டு தியேட்டர்கள் அம்பிகா ,முகாம்பிகா,என்று.புதிய திரைப்படங்களில் தரமானவை இவ்வற்றில் திரையிடப்படும் .ஹிட் ஆன நல்ல பாடல்கள் கொண்ட ஹிந்தி திரைப்படங்கள் கூட திரையிடுவார்கள்.குப்த் ரங்கீலா போன்ற படங்களை இங்குதான் பார்த்து ரசித்து இருக்கிறான்.மனோ.


அன்று கீதாவின் தோழிகளுடன் பார்த்த படம் வாலி.ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டாலும் சிம்ரனை இன்னொருமுறை பார்த்து ரசிக்க முடியும் என்ற ஆசையாலும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்களுடன் வந்தான்.இரண்டாவது முறை பார்த்த போதும் அவனுக்கு போரடிக்க வில்லை.கீதா வெகுவாக ரசித்து அந்த படத்தை பார்த்தாள்.கைதட்டினாள்,நகைசுவை காட்சிகளில் சிரித்தாள்.அஜித் அசடு வழியும் காட்சிகளில் ஐயோ பாவம் என்றாள்.ஒருகணத்தில் படம் பார்ப்பதை விட்டுவிட்டு கீதாவின் முக பாவங்களை ரசிக்க தொடங்கினான்.இடைவேளையின் போது அவளின் தோழிகள் எழுந்து வெளியே சென்றனர்.கீதா மனோவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு மாறினாள்.''படம் உனக்கு எப்படி இருக்கு'' என்றாள்.''ம்ம் நல்ல இருக்கு ,போனதே தெரியலை ,உனக்கு ஐஸ் கிரீம் எதுவும் வங்கி வரவா''''நீ போகவேணாம் அவுளுக வாங்கிட்டு வருவாளுக .ஏன் உனக்கு தம் எதாவது அடிக்கணுமா!!''என்றாள் கிண்டலுடன் .''இப்ப என்ன நான் போககூடாது உனக்கு கம்பனி கொடுக்கணும் ,சரி ''என்றான்.இருக்கையின்மேல் வைத்து இருந்த அவனது கையை தட்டி ரிலாக்ஸ் என்றாள்.அண்ணா நகரில் உள்ள கல்லூரிகளில் இருந்து கூட பையன்கள்,பெண்களுடன் வந்து இருந்தனர்.அந்த மதிய காட்சிக்கு.அவர்களும் ஏகோபித்த ஆதரவுடன் அந்த படம் ஓடிக்கொண்டு இருந்தது.ராஜியும் சுகந்தியும் ஆளுக்கு இரண்டு கோன் ஐஸ் க்ரீமை பிடித்த படி வந்தனர்.ஏய்,கீதா நாங்க அங்க கூட்டத்துல இடிபட்டு ஐஸ் க்ரிமை வாங்கிவந்த நீ ஜாலியா உட்கார்ந்து கடலை போடுறீயா...என்ற படியே ஆளுக்கு ஒரு ஐஸ் க்ரிமை கொடுத்தாள்.படம் தொடங்கியது..


சிம்ரன் அதிகபடியான கவர்ச்சியுடன் நடித்து இருந்த பாடலை திரையரங்கில் நிக்கி விட்டனர்.பெண்கள் வரத்து அதிகம் இருந்ததால்.அந்த பாடலை போட சொல்லி சிலர் விசில் அடித்து கலாட்டா செய்தனர்.மனோ கீதாவை பார்த்து முழித்தான் .

ஆப்ரடர் ரூம் நோக்கி கத்தினர்.திரையரங்கு ஆட்கள் டார்ச் அடித்தபடி உள்ளே நுழைந்தனர்.

''எவன்டா கத்தறது இஷ்டம் இருந்த பாரு இல்லாட்டி வெளியே போய்க்கோ..அந்த மாதிரி பாட்டு பாக்கிறவன் வேறு இடத்திற்கு போ..

என்று பதிலுக்கு பேசியவுடன் கொஞ்சம் அரங்கு அமைதியானது.அவர்கள் தலை மறைந்தவுடன்...

''அப்புறம் எதுக்கடா இந்த படத்தை உங்க .தியேட்டடரில் போடுறீங்க ,சாமி படம் மட்டும் ஓட்ட வேண்டியதுதானா..? என்று ஒரு குரல் கேட்டது.கீதா மனோவிடம் காதோரம் கிசுகிசுத்தாள் .

''அந்த பாட்டுக்காக இன்னொரு தியேட்டர் போவியா?என்று.

ஏற்கனவே படத்தை இன்னொரு தியேட்டர் இல் பார்த்துவிட்டதாகவும் ''உனக்ககதான் வந்தேன் ''என்றும் மனோ கூற கீதாவின் முகத்தில் வெட்கமும் பூரிப்பும் கலந்த புன்னகை தோன்றியது.

கீதாவை நினைத்தவன் மெல்ல உறங்க முயன்றான்.மணி இரண்டை கடந்து இருந்தது.அந்த விபத்தால் கல்லூரி படிப்பு மட்டும் முடிவுக்கு வராமல் போயிருந்தால் வாழ்க்கை வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.என நினைத்தவன் அப்படியே உறங்கி போனான்.

காலையில் வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தவுடன் தான் காலையாகி விட்டதை உணர்ந்தான்.அடித்துப்போட்டது போல உடம்பில் வலி இருந்தது.நேற்று என்னோவோ சம்பந்தமில்லாமல் பேசி அளுவுக்கு அதிகமாக ஊற்றிகொடுத்து விட்டான் பாலா.கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்தான்.தங்கை காபியை மேஜை மேல் வைத்தவள் தட்டு போட்டு மூடிவிட்டு சென்றுவிட்டாள்.கொஞ்ச நாட்களாகவே வீட்டில் ஒருவித வெறுமை நிலவுகிறது.பேச்சு சத்தம் பெருமளவு குறைந்து இருக்கிறது.இந்த வீட்டை இரண்டு மதங்களில் காலி செய்ய சொல்லி இருகின்றனர்.வீட்டை விட்டு போனவள் சும்மா போக வில்லை குடும்ப மானத்தை போதுமான அளவு வாங்கி விட்டு போய்விட்டாள்.எதிர்படுபவர்களின் கேள்விக்கு பதில் சொல்லியே ஓய்ந்து போயிருந்தான் மனோ.இன்று ஞாயிற்று கிழமை விடுமுறைதான்.மட்டனோ சிக்கனோ வாங்கி கொடுத்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும்.என்ன கஷ்டம் வந்தாலும் இதில் மட்டும் நாம் குடும்பத்தாருக்கு குறை இருக்க கூடாது என நினைத்தான்.இன்று அசைவம் வாங்கி கொடுக்கவில்லை என்றால் அம்மா வரும் உறவினர்கள் இடமெல்லாம் புலம்பி தீர்த்து விடுவாள். பத்தாதற்கு தங்கை வேறு கணவன் வீட்டில் இருந்து ஒருவாரமாக இங்கு இருக்கிறாள்.இவள் ஏதோ அவனிடம் சொல்லபோக சோறு கூட ஒழுங்கா போடாத வீட்டிற்கு ஏன் போற?என்று நொட்டை சொளுவன்.முகம் கழுவியவன் சிக்கன் கடைக்கு கிளம்பினான்.கிழே படியிறங்கியபோது வீடு ஓனரின் மனைவி வாசலில் நின்று இருந்தாள்.இவன் அவளை பார்க்காத வாறு கடக்க முயன்றான்.சொல்லிவைத்தார் போல அவள் பேச ஆரம்பித்தாள்.


Thursday, October 14, 2010

எனக்கு பிடித்த வலைபதிவு.

பிரியா விஜயராகவன்
வலைபதிவுக்கு வந்த புதிதில் எதேட்சையாக பார்த்த வலைபதிவு ப்ரியாவினது,,பிறகு நான் நிலா ரசிகன்,உழவன் போன்ற நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன்...அவரது நீள் கவிதைகள் எனக்கு பிடிக்கும் .பிறகு கவிதைகளுக்கு அவர் போடும் படங்கள் பொருத்தமாகவும் நவீன அழகியல் தன்மை கொண்டும் இருக்கும்.அவரது கவிதைகளில் எனக்கு பிடித்த ஒன்றையும்...சில படங்களையும் இங்கு பகிர்கிறேன்..கவிதைகளை புத்தகமாக கொண்டு வர பலமுறை நான் சொல்லியும் பிரியா தயக்கம் காட்டி வருகிறார்.அவர் மருத்துவராக லண்டன் அருகே பணிபுரிகிறார்.


.உச்சத்தின் மத்தியில்..அவனும் அவளும்

சாத்திய கதவின் பின் அறையில்!

நான்கு கண்களில் நூறு கேள்விகள்....

அவன் அகராதியில்

அவள் ஒரு வீழ்ந்த தேவதை....

அவள் அகராதியில்

அவன் ஒரு புதிய சொல்...

இருவருக்கும் புதிர் இருவருமே....

அவள் கண்கள் நெருப்பு பிழம்பாய்...

அகன்ற விழிகள் கொண்டு

பார்க்கும் அவள் பார்வை

அவனுக்கு புதிய விடுகதை...

மருட்சியா.... திமிரா.....

பிடிப்படவே இல்லை!

அவள் திரண்ட தனங்கள்

அவனுக்கு நினைவில் அலையாய்

கொண்டு வரும் பல காட்சிகள்

இடையும் தொடையும் தொடக்கம் முடிவு

இல்லா சாலை!!!

அவள் அங்குலம் அங்குலமும் அவனிடம் பேசும்

கறுத்து பிளந்த அந்த பேசா இதழ்கள்

விட்டு சென்ற வார்த்தைகளை....

அவள் அவனை உற்று பார்த்து

தேடுகிறாள் ஒரு விடை....

இது வரை கண்ட ஆண்களை

கண நொடியில் கணக்கெடுத்தவள்

இவனிடம் புதிதாய் குழப்பத்தில் மருண்டு....

இது ஆசையா... காதலா... கோபமா..

இவன் எந்த ஜாதி...

கண்கள் காட்டி கொடுக்கும் ஆண்களின் மத்தியில்

இவன் கண்ணோ வேறு வகை

இவள் இதுவரை காணா புதிய இனத்தை சேர்ந்தவன்...

தாழிட்ட அறைக்குள் எது கொணர்ந்தது

அவனையும் அவளையும்

தெரியவில்லை...

தரை முழுக்க கேள்விகள்

பதில் தேடியபடி சிதறி கிடக்க!

கட்டிலில் இருவரும் பக்கம் பக்கம்!

வாக்கியங்கள் குரல்வளையை நெருக்கி நிற்க

எது தொடங்கும் இவர்களின் பயணத்தை.?

மூடி திறக்கும் விழிகளில்

பதில்களும் பசியும் ஒன்றாய் பறிமாற

தொடுகிறாள் அவள் அவனை முதன்முதல்.....

தொட்ட நிமிடம் வார்த்தைகள் இறந்தே விட்டது...

கண்களின் வழியே ததும்பும் அன்பு

நிரப்பியது அறையின் இருட்டை...

விரகம் நங்கூரம் இட்டது...

அவன் கண் வழியே வரும்

காமம் கசிந்ததில் நனைந்து

மேலும் அழகானாள்...

ப்ரபஞ்சத்தை தாண்டிய வெற்றிடமாய் மாறி!

அன்பே அன்பினால்

அன்புக்காக அன்பிடம்

அன்பாய்...

காலம் தொலைந்த தேசத்தில் கரைந்தனர் இருவரும்...

கழுத்தோரம் மெல்ல கோலமிட்டான்...

காதருகே கண் கிறங்கி மூச்சை உள்வாங்கினாள்...

அவன் தேடலில் அவள் இன்னும் மெலிந்து...

தவிக்கவிட்டான்... வரம் தந்தான்...

தவித்து போனாள்... எடுத்து கொண்டாள்...

மெல்ல தொடங்கிய அனல் தகித்தது

வியர்வை வெள்ளம் கரை புரள

அவள் அவனை உண்டாள்...

அவன் அவளை குடித்தான்...

அவள் வலைகளில் சிக்கியவள்...

சிடுக்குகளுடன் அவளை அள்ளி

ஆனந்தமாய் அணிந்தான்..

குழப்பக்குட்டையில் மிதந்த அவள்

கேட்டாள் அவனிடம்...

ஏன் நான்? என்றாள்

என்ன என்னிடம்? என்றாள்

உன் கண் அழைத்தது என்றான்...

சோகம் வழியும் இமை வழியே

எனக்கான காதலும் வழிந்து அழைத்தது என்றான்....

வளைந்து அவன் மனதில் நுழைந்ததில்

இவள் ஒலியானாள்...

நேராய் இவள் கண்ணில் நுழைந்து

அவன் ஒளியானான்...

இருப்பாயோ நீ எப்போதும் என்றாள்

என்ன நடப்பினும் உனக்கான என் காதல்

எப்போதும் உனக்கு மட்டும் தான் என்றான்...

கண் வழி சிரிப்பும் கண்ணீரும் கலந்து

உச்சத்தின் மத்தியில்...

இருவரும் இறந்து..


அவரது வலைபதிவு


http://vettipullai.blogspot.com/

சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்!!


என் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்தாலும் அவ்வப்போது எதாவது ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். அப்பாவின் பழைய கணையாழி இதழ்களை தூசி தட்டி எடுத்து படித்து கொண்டிருந்த போது தான் கிடைத்தது 'ஜே.ஜே சில குறிப்புகள்'. ஆதிமூலம் அவர்களின் ஸ்ப்ரே பெயின்டிங் வகை ஓவிய அட்டை படத்துடன், க்ரியா வெளியீடாக வந்த முதல் பதிப்பு அது. இந்தியா டுடே இலக்கிய மலரை வருடம் தவறாது என் தந்தை வாங்கி கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு உரையாடல் ஒன்றில் தமிழில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று 'ஜே.ஜே சில குறிப்புகள்' என்று குறிப்பிடபட்டு இருந்தது, கொஞ்சம் ஆவலை கிளப்பி விட்டது.


ஒரு மாலை நேரத்தில் 'ஜே.ஜே'வை வாசிக்க ஆரம்பித்தேன். அது படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் என் தந்தையின் நான்கு வருட கல்லூரி டைரிகளை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கட்டமைப்பு படி பார்த்தால் ஜே.ஜே சில குறிப்புகளும், என் தந்தையின் டைரி குறிப்புகளும் ஒன்றாக இருந்தது (என் தந்தையின் டைரி குறிப்புகள் மிக சுவாரசியமாக இருந்தது இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டது). எதையும் படித்து செரிக்கும் மனநிலையில் இருந்ததால் ஜே.ஜே சில குறிப்புகள் அத்தனை கடினமாயில்லை. கல்லூரி வந்த பின் சில இலக்கிய சிற்றிதழ்களில் ஜே.ஜே பற்றிய விவாதங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் முக்கியமாக 'வனம்' சிற்றிதழில் ஜீ.முருகனின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய கட்டுரை. முதல் பதிப்பு வெளியான போது அதை அவர் வாங்கி படித்ததையும், அந்த நாவல் தன் இலக்கிய வாசிப்பை எவ்வாறு மாற்றி அமைத்தது என்பதை குறிப்பிட்டு இருந்தார். அந்த கட்டுரை என்னை 'ஜே.ஜே'வின் மறு வாசிப்பிற்கு அழைத்து சென்றது. பல விடயங்கள் பிடிபட்டன.


ஆர்வமாகி வாடகை புத்தக நிலையத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். திருச்சியிலிருந்து, தேனிக்கு போகும் பேருந்து பயணத்தில் படித்து முடிக்கக் கூடிய எளிய நடையில் இருந்தது. ஜே.ஜே சில குறிப்புகளை காட்டிலும் மிக சுவாரசியமான நடையில் இருந்தாலும், பல கிசுகிசுக்களின் தொகுப்பாக இருந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அதை முடித்ததும் எங்கள் பல்கலையில் எம்.ஏ தமிழ் மாணவர்கள் கூட தீண்டாமல் புத்தம் பொலிவுடன் இருந்தது 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. உண்மையிலேயே சிறந்த நாவல். என் பொறியியல் புத்தகங்கள் கூட கொடுக்காத ஒரு உன்னத தூக்கத்தை 'குழந்தைகள், பெண்கள், ஆண்களின்' இரு பக்கங்கள் தந்தன. (இன்னொரு ஸ்லீப்பிங் டோஸ்: விஷ்ணுபுரம் - அது பற்றி அப்புறம்)

இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்தவர் சு.ரா என்ற சிறுகதை எழுத்தாளர் தான். (சத்தியமாக பகடி இல்லை) 1997 தினமணி பொங்கல் மலரில் வந்த 'நாடார் சார்' கதை தான் எனக்கு மிகவும் பிடித்த அவரின் கதை. அப்போதைய எனது பள்ளி சூழலும், எங்கள் பள்ளியில் இருந்து விலகிச் சென்ற ஒரு பி.டி மாஸ்டரையும் அந்த கதை எனக்கு நினைவூட்டியது. இன்னொரு பிடித்த கதை 'மேல்பார்வை'. முன்ன கதை கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டதென்றால், பின்ன கதை பெண்கள் ஆடும் கூடைபந்தாட்டத்தை பற்றியது. தனி கதைகளாக வாசித்த பின் மொத்த தொகுப்பாக அவரின் கதைகளை வாசித்த போது ஒரே பேட்டர்னுக்குள் தன் கதைகளை அடைக்கிறாரோ என்று தோன்றியது.அவரின் சிறந்த கதைகளாக கருதப்படும் 'ரத்னாபாயின் ஆங்கிலம்', 'பல்லக்கு தூக்கிகள்', 'ஆத்மராம், சோயித்ராம்' மற்றும் 'பள்ளம்' ஆகிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னமிரண்டு கதைகள். 'பல்லக்கு தூக்கிகள்' கதையின் கதைசொல்லி தான் இருக்கும் இடத்தை ஒரு அசூயையுடன் விவரிப்பதாக இருந்தது. அதே போல் எரிச்சலூட்டிய மற்றொரு கதை 'மீறல்'. பேருந்தில் அட்ஜஸ்ட் செய்ய தெரியாத ஒரு மேல்தட்டு பெரியவராகத் தான் கதைசொல்லியை உருவகப்படுத்த முடிந்தது. 'பிரசாதம்' கதையை படித்த போது ஏற்பட்ட ஒரு பரவசத்தை காட்டிலும், பாலு மகேந்திராவின் 'கதை நேரத்தில்' அது படமாக்க பட்ட போது அந்த கதைக்கு மேலும் மெருகூட்டியது போல இருந்தது.


பசவய்யா என்ற அவர் கவிமுகத்தை நான் காணவில்லை. நண்பன் ஒருவன் படிக்கக் கொடுத்த அவரின் கவிதைகளை ஒரு வருடம் கழித்து அப்படியே பாதுகாப்பாக கொடுத்தேன். கவிதைகளின் மேல் ஆர்வமில்லாத காரணத்தை தான் சாட்சி கூண்டில் ஏற்ற வேண்டும். நான் அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவரின் 'பிள்ளை கெடுத்தான் விளை' கதை வெளியானது. அதன் விளைவாக எழுந்த விவாதங்கள் இன்றும் என் மண்டையை காய வைக்கும். அதிலும் சாரு 'தீராநதி'யில் அந்த கதையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எழுதியதை படித்த போது இன்னும் அதிகமாக மண்டை காய்ந்தது. ஆனாலும், அந்த விவாதங்களை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிட்டது காலச்சுவடு. தமிழில் முதன் முதலாக ஒரு இலக்கிய சர்ச்சையையை புத்தகமாக வெளியிட்டு மார்க்கெட்டிங் செய்த பெருமை காலச்சுவட்டையே சாரும்.


சரியாக ஒரு வருடம் கழித்து சு.ரா பூவலகம் நீத்தார். என்ன தான் அவரை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தமிழ் இலக்கிய சூழலில் மறுக்க முடியாத ஆளுமை சு.ரா. அவரின் மறைவுக்கு பின் ஜெ.மோ உயிர்மையில் எழுதிய 'சு.ரா' பற்றிய ஒரு நீண்ட குறுநாவலை படிக்க நேர்ந்த போது தான், சு.ராவின் ஆளுமை புலப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள உண்மைகள் விவாதத்திற்கு உட்பட்டவை. காரணம் - ஜெ.மோ எழுதி இருந்த அந்த கட்டுரைஐஐஐ சு.ராவிற்கு பின்னான அவரின் இலக்கிய இடத்தை ஸ்தாபிப்பதாகவே இருந்தது. வஞ்ச புகழ்ச்சி அணியை ஒரு கட்டுரை முழுவதும் உருவகப் படுத்திய பெருமை ஜெ.மோவையே சாரும்.

நிற்க. சு.ராவை பற்றிய பல அவதூறுகள் வந்தாலும், மனிதர் தன்னை ஒரு நிறுவனமாக ஸ்தாபித்து கொண்டதை போன்று தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் செய்ததாக தெரியவில்லை. அந்த வகையில் அவரை பாராட்டியே ஆகவேண்டும். அவரின் நினைவு நாளான இன்று, அவரை பற்றி ஒரு நேர்மையான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பில் தான் எழுந்தன மேலிருக்கும் என்னுடைய குறிப்புகள்...


இந்த பத்தியை எழுதியவர் நண்பர் பிரசன்னா ராஜன்

Tuesday, October 12, 2010

மனுஷ்யபுத்திரன் குரலை நம்பும் ஜெயமோகன்

அக்டோபர் மாத உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கும்
'தேனீர் கோப்பையில் பெய்த மழை'
என்ற கட்டுரை தான் இம்மாதம் ஹாட் டாபிக்.வெறும் வாய்க்கு அவல் போட்டால் போல வெல்லத்தை போட்டுள்ளார்.ஜெயமோகன் குறித்த பகடிதான் கட்டுரையின் மையம்.அதனால் என்ன என்பவர்களுக்கு எனக்கு தேவையில்லாத நவீன இலக்கியத்தின் கொள்கை பரப்பு செயலாளர். என்ற பட்டத்தையும் கட்டுரையின் நடுவே கொடுத்துள்ளார்.

விஷயம் இதுதான் அடுத்த நாள் நடக்க போகும் ஷாஜியின் விமர்சன கூட்டத்திற்கு இளையராஜாவின் ரசிகர்கள் சிலர் வந்து கலாட்டா செய்ய போவதாக குறிப்பிட்டார்.அப்புறம் ரிஸ்க் எடுப்பது எல்லாம் மனுஷ்யபுத்திரனுக்கு ரஸ்க் சாப்பிடவது மாதிரி.. சண்டைகோழி விசயத்தில் இருந்து அவர்தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.சும்மா என்னை போல நண்பர்கள் சிலருக்கு சொல்லுவார் அவ்வளவுதான்...ஆக்சன் ப்ளாக் எல்லாம் அவர் முடிவுபடித்தான் நடக்கும்....

என்ன வித்தியாசமென்றால் இந்த முறை அந்த விஷயத்தை அறிவித்துள்ளார்.

ஜெயமோகன் தலைமையில் இளையராஜா ரசிகர்கள் ஷாஜியை கேரோ செய்யபோகிறார்கள்...என்றாராம்..எனக்கு அடி விழலாம் எனவே நான் வரமாட்டேன் ...என்று என்னிடம் பதற்றத்துடன் கூறியதாகவும்..ஒருமணி நேரம் கழித்து அவருக்கு வரிசையாக போன்கள் அவர் நினைத்தபடி வந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.அதற்கு முந்தைய நாள் ஷாஜி யும் ஜெயமோகனும் துளசி பார்க் ஹோட்டலில் தங்கி இருந்ததை நான் அறிவேன்.இந்த துளசி பார்க் ஹோட்டல் என் வீட்டுக்கு வெகு அருகில் உள்ளது.. ஜெயமோகன் பிரதாப் பிளாசா,துளசி பார்க் போன்ற ஹோட்டல்களில் தங்கினால் எனக்கு தகவல் வரும்...அதன் வெகு நாளைய கஸ்டமர் நான். ஜெயமோகனோடு நட்புடன் இருந்த காலங்களில் பார்த்து பேசியது உண்டு..இப்போது எந்த தொடர்பும் இல்லை.அவரும் சினிமா சம்பந்தமான நண்பர்களை பார்பதையே விரும்புகிறார்.
.
அதாவது இம்மாதிரியான விசயங்களை என்னிடம் சொன்னால் நான் நண்பர்களுக்கு எல்லாம் பரப்பி விடுவேனாம் ..அதற்குத்தான் இந்த கொள்கை பரப்பு செயலாளர் பட்டம் வேறு..அன்று என்னிடம் மனுஸ் சொன்ன மாதிரியே வேறு பலரிடமும் சொல்லி இருக்கிறார்.என்பதை பின்னால் அறிந்தேன்.இது ஒன்னும் புதிது அல்ல.அதை அவரே பொய் என்றும் அந்த கட்டுரையில் ஒத்து கொள்கிறார்.இப்போது பரப்பிலக்கிய செயலாளர் நவீன இலக்கிய உலகத்தில் யார் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்...இதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் சிலர் என்னிடம் போன் செய்து கேட்கவே இதை எழுத வேண்டியாகி விட்டது.

தொடர்பில்லாமல் இருக்கும் ஒருவரின் விசயத்தில் நம்மையும் சேர்த்து எழுதினால் என்ன ஆகும்..அவரின் தேவையில்லாத கோபத்திற்கு நம்ம பலியாக வேண்டி வரும். ஜெயமோகனை கேட்கவா வேண்டும்...பத்து வருடம் பின்னால் உருவாகும் எதிரியை இன்றே அழிக்க முயலும் வசிஷ்டர்.சரி அவருக்கு போன் செய்து நடந்ததை கூறி விடலாம் என்று போன் செய்தேன்...

என் பெயரை கேட்டதும் நீங்கள் .ஏன் எனக்கு போன் செய்ய வேண்டும் என்றார்..விஷயத்தை விளக்கும் முன்னர் non sense முதல்ல போனை வைங்க என்றார் கோபத்துடன் [அறசீற்றம் ].

இது போக ஏன் இப்படி எழுதிருக்கிறார் மனுஷ்ய புத்திரன் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா என்று பல போன் கால்கள் .பல யூகங்கள்.
சும்மா ஜாலிக்கு எழுதி இருப்பதாகவும் வேறுமாதிரி எடுத்து கொள்ள வேண்டாமென்றும் மனுஸ் எளிதாக சொல்லிவிட்டார்.
இருவரும் நாளையே இணையலாம். ஜெயமோகன் பேசியதை வைத்து பார்க்கும் போதுஅவர் மனுஷ்ய புத்திரனின் குரலையே நம்புகிறார்.என்பது தெளிவாகிறது.

என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..?.

Wednesday, October 6, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

பொய்த்தேவு க.நா.சு.

வாடிவாசல் சி.சு.செல்லப்பா

.அபிதா லா.ச.ர

.பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு

வாசவேஸ்வரம் கிருத்திகா

தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி

சுந்தர காண்டம் ஜெயகாந்தன்

புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

.நினைவு பாதை நகுலன்

ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி

கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்

.நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்

.சாயாவனம் ச,கந்தசாமி

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

.பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்

பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்

கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.

நிலக்கிளி அ.பால மனோகரன்

இடைவெளி சம்பத்

கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்

.பிறகு,வெக்கை-பூமணி.

நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்

..காகித மலர்கள் ஆதவன்

.வாடா மல்லி சு.சமுத்திரம்

.கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்வெளியீட்டகம்]

மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்

.கோவேறு கழுதைகள் இமையம்

ஜீரோ டிகிரி -சாரு நிவேதிதா.

.ஏழாம் உலகம் ஜெயமோகன்

.உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்

.கொரில்லா,ம்-ஷோபாசக்தி.

ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.

37'' M.G.சுரேஷ்.

அஞ்சலை கண்மணி குணசேகரன்

நிழல் முற்றம் பெருமாள்முருகன்

.நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்

.ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்

,புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்

வட்டத்துள் வத்சலா

மரம் ஜி.முருகன்

,துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா

.கள்ளி வாமு.கோமு

.முன்றாவது சிலுவை உமா வரதராஜன்

.கன்னி பிரான்சிஸ் கிருபா

.ரத்த உறவு யூமா.வாசுகி

.வேருலகு மெலிஞ்சி முத்தன்.