Thursday, April 8, 2010

ஆரம்ப கட்ட வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

ஆரம்ப கட்ட வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்
காகித மலர்கள் ஆதவன்
மானசரோவர் அசோகமித்திரன்
வெக்கை பூமணி
கோபல்ல கிராமம்-கி.ராஜநாராயணன்
மற்றும் சிலர் சுப்ரபாரதிமணியன்
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்
ரப்பர் ஜெயமோகன்
மிதவை நாஞ்சில் நாடன்
கடல்புரத்தில் வண்ணநிலவன்
மரம் g முருகன்.
ம்ம் ஷோபா சக்தி
சொல் என்றொரு சொல் ரமேஷ் பிரேம்.
சாயாவனம் .சா.கந்தசாமி
புயலில் ஒரு தோணி ப.சிங்காரம்
கரையோர முதலைகள் பாலகுமாரன்
வாடா மல்லி சு.சமுத்திரம்
பள்ளிகொண்டபுரம்-நில.பத்மநாபன்,
தரை இறங்கும் விமானங்கள் இந்துமதி.
இடைவெளி சம்பத்
ராசலீலா சாரு நிவேதிதா
.

15 comments:

 1. சொல் என்றோரு சொல், ம், புயலிலே ஒரு தோணி போன்றவைகள் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு சரியாக இருக்கும் என் தோன்றவில்லை, ஆனாலும் நல்ல தொகுப்புதான்.

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம், எல்லாப் புத்தகங்களும் சொல்லப்படவில்லை என்றாலும் சொன்னவை முக்கியமானவி.

  எனது கருத்தில், ஷோபா சக்தியின் ம் ஐ விட அவரது கொரில்லா மிக முக்கியமானது

  ReplyDelete
 3. //வாட மல்லி//

  வாடா மல்லி.

  ஸ்பெல்லிங் மிஸ்டேக். சரி பண்ணிடுங்க.

  ReplyDelete
 4. பட்டியலுக்கு நன்றி விஜய்!

  கிட்டத்தட்ட அனைத்தையுமே படித்துவிட்டேன். இருந்தாலும் இன்னும் ஆரம்பநிலை வாசகனாகவே இருக்கிறேன் :-(

  ReplyDelete
 5. இவையெல்லாம் சந்தையில் கிடைக்கிறதா?

  முக்கியமாக புயலில் ஒரு தோணி

  ReplyDelete
 6. பாதிக்கு மேல் படித்த நாவல்கள். உபயோகமான பட்டியல் நண்பா. தொடர்ந்து இதுபோன்ற பட்டியல்களை வெளியிடவும்.

  ReplyDelete
 7. சொல் என்றோரு சொல் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு சரியாக இருக்கும் என் தோன்றவில்லை. ஆரம்பகட்ட வாசகன் எ‌ன்று சொல்லிவிட்டு சுஜாதா எங்கு ?

  ReplyDelete
 8. அது என்ன ஆரம்ப நிலை, அடுத்த நிலை.

  வாசிப்பதிலும் வர்க்க பேதம், பாகுபாடா.

  ReplyDelete
 9. நன்றி அதிஷா,யுவக்ருஷ்ணா,விரிவான நாவல்களின் பட்டியல் ஒன்று விரைவில் வெளியிடுகிறேன்,மொழிபெயர்ப்பு நாவல்கள் உட்பட.ஆரம்பகட்ட வாசகர்கள் என்பது ஆரம்பகட்ட நவீன இலக்கிய வாசகர்களுக்கான பட்டியல் இது.சுஜாதாவின் நாவல்களை இதில் சேர்க்க முடியாது.அது பெரும்பாலும் துப்பறியும் கதைகளே.சொல் என்றொரு சொல் புதினத்தை பலரும் கடினமானது என்று நினைத்து கொள்கின்றனர்.எளிதாக உள்ளே சென்று விடலாம் சிறிது முயற்சி எடுத்தால் நவீன இலக்கிய வாசகனுக்கு இந்த பயற்சி மிக முக்கியம்.
  கொரில்லா நாவலை விட ம் நாவலின் கூறல் முறை எளிமை என்பதால் அதை சொல்லியிருக்கிறேன் .மற்றபடி இரண்டும் முக்கிய நாவல்கள்தான்.
  ஒன்று இரண்டை தவிர அனைத்தும் கிடைக்கின்றன.
  காலச்சுவடு ,கிழக்கு,மருதா,ஆகியவை கிளாச்சிக் வரிசையில் வெளியிட்டு உள்ளன.
  online வாங்க http://www.newbooklands.com/new/home.php தொடர்பு கொள்ளலாம்.
  சம்பத்தின் இடைவெளி இப்போது அச்சில் இல்லை.திலிப் குமார் போன்றவர்களை தொடர்பு
  கொண்டால் பிரதி செய்து தருவார்கள்.விரைவில் வெளிவரவும் உள்ளது. .
  புயலிலே ஒரு தோணி தமிழினி வெளியீட்டு உள்ளது கிடைக்கறது.
  நல்ல புத்தகங்கள் வாங்க சிறிது முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.இதுவும் வாசகனுக்கு அவசியம் .
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. ராசலீலா ஒரு கவுச்சி,குப்பை.அதையும் ஆரம்ப கட்ட வாசகர்கள் படிச்சா வெளங்கிரும். இம்மாதிரி பதிவு போடும்போது கவனம் தேவை.நன்றி

  ReplyDelete
 12. குப்பை எது என தெரியவவது படிக்க வேண்டும் அல்லவா,பல இசங்கள்,இலக்கிய செய்திகள்,சமகால தன்மை என அனைத்தையும் சாரு நாவலில் ஏற்றி இருக்கிறார்.வாசகர்கள் படிக்க வேண்டிய பிரதிதான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.ஒருவரை நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவரின் படைப்புகளை ஒதுக்க கூடாது.நண்பரே.

  ReplyDelete
 13. தம்பிங்களா கீழ்கண்ட நாவல்களையும் படித்து பாருங்கள் ஒன்றும் தப்பாயிடாது.கம்பா நதி-வண்ண நிலவன்,நதி மூலம்-விட்டால் ராவ்,கரைந்த நிழல்கள்-அசோகமித்திரன்,தலைமுறைகள்-நீல.பத்மநாபன்.

  ReplyDelete
 14. நன்றி நண்பரே ,விரிவான பட்டியல் ஒன்று விரைவில் வெளியேடுகிறேன் அதில் இந்த நாவல்கள் கண்டிப்பாக இடம் பெறும்.இது முழுமையான பட்டியல் இல்லை

  ReplyDelete