அதிகாலையில் வரும் காதலியின் அலைபேசி அழைப்பு
மெல்லிய சிணுங்கலுடன் கொஞ்சுகிறது சிலசமயம் கெஞ்சுகிறது
அகாலத்தில் வரும் மனம் கலங்கிய நண்பனின் அழைப்பு
துயர் கொள்ள வைக்கிறது ஒரு முழு பொழுதையும்
கடன் கொடுத்த நண்பனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பண்பலை வானொலி போல் ஒரே பாடலை திரும்ப திரும்ப போடுகிறது.
தற்கொலைக்கு முயல்பவனின் கடைசி அழைப்பு யாராலும்
நீண்ட நேரத்திற்கு எடுக்கப்படுவதில்லை .
முன்னாள் காதலனின் அழைப்பை நிராகரிக்கும் காதலி
ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்கிறாள் .
தொடர்ந்து அடிக்கும் அழைப்புகள் உங்கள் மீதும் என் மீதும்
வீண் அதிகாரத்தையே கட்டமைகின்றன .
மிரட்டல் அழைப்புக்கள் பெரும்பாலும் ஒரு ரூபாய்
போன் பூத்துகளில் இருந்தே வருகின்றன
அரிதாக வேலை பற்றிய அழைப்புகள் மதிய நேர
தூக்கத்திலேயே வருகிறது .
எப்போதாவது இனிய செய்தியை கொண்டுவரும்
மாலைநேர அழைப்புகள் சூழலை ரம்மியமாக்குகின்றன .
இரவு நேர மனைவியின் அழைப்புக்கு , கோடம்பாக்கம் மேம்பாலம்
தாண்டிவிட்டேன் என கே கே நகரிலேயே நிற்கிறேன்
ஆகவே அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது
ரசிக்க வைக்கும் உண்மைகள்...
ReplyDeleteதினம் தினம் எதிர்கொள்ளும் அழைப்புகள்தான் என்றாலும், கவிதையாக - ஒரு கோர்வையாக படிக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
ReplyDeleteதினம் தினம் எதிர்கொள்ளும் அழைப்புகள்தான் என்றாலும், கவிதையாக - ஒரு கோர்வையாக படிக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
ReplyDelete