Monday, February 10, 2014

செறவிகளின் வருகை

சிவகுமார் முத்தையா இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர்...சில வருடங்களுக்கு முன்பு தோழமை வெளியீடாக நான் கொண்டு வந்த இருள் விலகும் கதைகள் தொகுப்பில் அவரது செறவிகளின் வருகை கதையை வாங்கி சேர்த்தேன்...அந்த கதைக்கு பரவலான கவனத்தை பெற்றார் ...அவரது 17 கதைகளின் தொகுப்பு
செறவிகளின் வருகை என்ற தலைப்பில் தோழமை வெளியீடாக வருகிறது....நண்பர்கள் ஆதரிக்கவும்...சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை

செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.
.அவர் கதை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியவை .....

சிவக்குமார்முத்தையா தீராநதி, புதிய பார்வை இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். செறவிகளின் வருகை என்ற இவரது கதை இந்த தொகுப்பில் உள்ள கதைகளின் தொனியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிக அற்புதமாக எழுதப்பட்ட சிறுகதையிது. நெல் முற்றிய வயலில் வந்திறங்கி நெல்மணியை தின்று போகும் செறவி எனும்பறவைகளின் வருகையை பற்றி விரியும் இக்கதை இயற்கையின் விசித்திரத்தையும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தையும் விவரிக்கிறது. இது போன்ற சம்பவம் ஒன்றை நானே நேரில் கண்டிருக்கிறேன். பறவைகளின் கூட்டம் மொத்தமாக வயலை அழிப்பதும் அதை தாளமுடியாமல் மனிதர்கள் உக்கிரம் கொள்வதும் சிறப்பாக கதையாக்கபட்டிருக்கிறது.

2 comments:

  1. சிவகுமார் முத்தையா பற்றிய அறிமுகத்துக்கு நன்றி,நேரம் கிடைக்கையில் எழுத்தை தொடருங்கள்

    ReplyDelete
  2. சிவகுமார் முத்தையா அவர்களின் படைப்புகள் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete