சிவக்குமார் முத்தையாவின் குறுநாவல் தொகுப்பு
“ஆத்தோர கிராமம்”. அவரது சொந்த முயற்சியால் புத்தகமாக கொண்டுவரப்பட்டு
சரியாக விநியோகப்படாமல் முடங்கி இருந்தது. இதன் சில பிரதிகளை சிவக்குமார்
எனக்கு அனுப்பி இருந்தார் . முழுமையாக படித்துமுடித்தேன். கிராமம்
சார்ந்த அற்புதமான பதிவுகளைக்கொண்ட குறுநாவல்கள் அடங்கிய நல்ல புத்தகமான,
இதுபோன்ற புத்தகங்கள் வாசகர்களை சென்றடையாமல் இருக்கிறதே என்று நண்பர்
வேடியப்பனிடம் Vediyappan Discovery Book Palace கவலைப்பட்டேன். உடனே அந்த
கவலையை என்னிடம் விடுங்கள் என்று அவர் புத்தகத்தை அதிகமான பிரதிகள்
வாங்கிக் கொண்டதோடு , அவற்றை விற்பனை செய்துகொடுக்கும் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற கவனிக்காமல் கிடக்கும், சிறிய பதிப்பகங்களின்
நல்ல புத்தகங்களை கண்டுபிடித்துக் கொண்டுவந்தால் அவற்றை டிஸ்கவரி புக்
பேலஸ் விற்பனை செய்துகொடுக்க தேவையான உதவியை செய்யுமென்று சொன்னார்.
நண்பர்கள் இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொள்ளவும். குறிப்பு : நல்ல
புத்தகங்கள் மட்டும்
“ஆற்றோர கிராமம்” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
http://discoverybookpalace.com/products.php?product=ஆற்றோர-கிராமம்
“ஆற்றோர கிராமம்” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
http://discoverybookpalace.com/products.php?product=ஆற்றோர-கிராமம்
No comments:
Post a Comment