மனோவுக்கு வீடு திரும்ப இன்று வழக்கத்தை விட வெகு நேரமாகிறது. சனிக்கிழமை இப்படி நடக்க வாய்ப்புண்டுதான். இப்பொது 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நாளில் இரண்டு மருத்துவமனைகளில் வேலைப்பார்க்கும் பொருளாதார சுழலில் இது சத்தியம்தான். இன்று பாலா மருத்துவமனைக்கே வந்து கொத்திக் கொண்டு போவான் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்துதான் ஒரு காரியமும் அவன் வாழ்க்கையில் நடக்கவில்லையே. எல்லாமே எதிர்பார்க்காதவை தான்.
கோடம்பாக்கத்தில் இருந்து விஜயராகவபுரம் நோக்கி அவனது டி.வீ.எஸ் சேம்ப் சென்று கொண்டிருந்தது. சோடியம் விளக்குகளின் சுடரொலியில் சாலை கழுவி விட்டாற் போல பளபளத்தது. தேர்தல் நேரம் நெருங்குவதால் சாலையை புதிதாக போட்டிருந்தார்கள். போன வருடம் பெய்த தொடர் மழையால் இந்த சாலை அரிப்பு கண்டு ஆங்காங்கே பெயர்ந்து, குண்டு, குழியாகி, குழிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அவனது டி.வீ.எஸ் சேம்ப் பள்ளத்தில் எல்லாம் எகிறிக் குதித்து எழுப்பும் சத்தத்தை பார்த்தால் முன் சக்கரம் கழண்டு உருண்டோடி விடுமோ! என்றெல்லாம் பயந்து ஒட்டிஎருக்கிறான் . பொழுதுக்கும் மெக்கானிக் ஷாப்
மெக்கானிக்தான் எதாவது இரக்கப்படுகிறனா? அடிக்கடி கொண்டு வருகிறானே! கொஞ்சமாக பில் போடுவோம் என்று இருநூறு ஆகும் செலவிற்கு நானூறு பில் தீட்டுகிறான். சனியன் பிடித்த வண்டியை, விற்றுவிடலாமென்றால் ஓசியாய் கொடுத்தால்தான் உண்டு. கொள்முதல் செய்வார் இல்லை. அவனது மனைவிக்கும், இவனுக்கும் முதல் பிரச்சனை இந்த வண்டியால்தான் வந்தது. இருந்தாலும் பல சொந்தங்கள் அவனை விட்டு பிரிந்தாலும் இது மட்டும் உற்ற நண்பனாக ஒட்டிக்கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் தனக்கு உண்மையாக இருக்கும் ஒரே உடமை இந்த வண்டி மட்டும் தான் என்று நம்ப ஆரம்பித்துவிட்டான். வீடு சமீபத்து விட்டது. ஏரியா முழுவதும் "கப்சிப்" என்றிருந்தது பத்து மணிக்கே சென்னை பாதி செத்துவிடுகிறது.
இரும்பு கோட்டை திறந்து, மாடிப்படியின் ஓரத்தில் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி பூட்டினான் மூன்றாவது மாடியில் பாதி மொட்டையகவும், மீதமுள்ள இடம் வீடாகவும் இருந்தது. இரண்டு படுக்கையறைகள், ஒரு முன் ஹால், சமையலறை உள்ள வீடு அது. அப்பா மொட்டைமாடியிலேயே விரித்துப் படுத்து இருந்தார். பலகாலமாக அப்படிதான் செய்து வருகிறார். கதவு பேருக்கு பூட்டியிருந்தது லேசாக திறந்தான். அம்மாவும், தங்கையும் சமையலறை ஒட்டியுள்ள படுக்கை அறையில் தூங்கினர். எப்படியும் வரத்தாமதமாகும் என வெளி குமிழ் விளக்கை மட்டும் போட்டுவிட்டு கதவை, பூட்டாமல் படுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அவன் அறைக்குச் சென்றான் இருவர் படுக்கும் கட்டில். புதிதான மெத்தை விரிப்புடன் இருந்தது. கதவை சாத்தி தாழிட்டான். உடைகளை கழற்றி, கைகால் கழுவி கயிலிக்கு மாறியவன், மெத்தையை மீண்டும் ஒரு முறைப்பார்தான். அவனது மனைவி ஒருக்களித்து படுத்திருப்பது போல பிரமை ஏற்பட்டது.
சற்று அளவிற்கு அதிகமாக தண்ணி அடிதிருந்ததால் ஏற்படுவதுதான் எல்லாம் விஸ்கியின் வேலை.
அவன் கடந்து வந்த பெண்கள் அனைவரும் ஒருகணம் நினைவுக்கு வந்தனர். மெத்தையில் ஏறிப்படுத்தான். பால இரண்டு நீல பட சீ.டிக்களை கொடுத்து சென்றிருந்தான். அதைப்பார்கலாம என நினைத்தான். இப்போதிருக்கும் வேட்கையை இன்னும் அதிகப்படுத்தும் "வேண்டாம்" என நினைத்தான்.
நல்லாருக்கு பாஸ்.. சீக்கிரம் எழுதி முடிங்க
ReplyDeleteUngaloda Ooduruval Naavalin muthal aththiyaayam padithen swarasyamaaka irukkirathu
ReplyDelete