Tuesday, September 7, 2010

எடிட்டர் லெனின் .


எடிட்டர் லெனின் . நிறைய படங்கள் கையில் இருந்த போது கூட இனிமே வணிக படங்களுக்கு எடிட் செய்வதில்லை...என ஒதுங்கினார் அதன் பிறகு தான் பல எடிடோர்களுக்கு வேலை கிடைத்தது...இருந்தவரை இவர்தான் அதில முடிசூடா மன்னர்....லெனின் விஜயன் இருவருமே எடிட்டர் பால் துரை சிங்கத்திடம்...வேலை பார்த்தார்கள்...பிறகு லெனின் தனியா எடிட் செய்ய ஆரம்பித்தார்

..ஒரு காலகட்டத்தில் அவரால் மட்டும் செய்ய முடியாத அளவு படங்கள் குவிந்தன...அப்போது விஜயனையும் இணைத்துக்கொண்டார்...பொதுவாக வன்முறை அதிகமான படங்களை எடிட் செய்ய லெனின் விரும்புவதில்லை...அதற்கு விஜயன் தான் எடிட் செய்வர்..மேற்பார்வை லெனின் என்று வரும்.உதாரணம் விஜயகாந்தின் பலபடங்கள்...எடிடிங்கில் பெயரை கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது லெனின்தான்...ஆண்டனி எல்லாம் கையில் கருவிகளை வைத்து கொண்டு வித்தை காட்டுகிறவர் இதல்லாம் இல்லாத காலத்தில் வித்தை காட்டியவர் லெனின்.கரகாட்டக்காரன் வெற்றிக்கு இளையராஜா, நகைச்சுவை போலவே லெனினின் தொகுப்பு மிக முக்கிய காரணம் இதை கங்கை அமரனே ஒத்துக்கொண்டார்..குப்பை படங்களுக்கு கூட லெனின் எடிட் செய்தால் ஓரளவு தேறிவிடும் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதையும் நானறிவேன்..

.ஜெய்சங்கர்,வாசு-சலீம்,சாய்-சுரேஷ் போன்றவர்கள் லெனினுக்கு வெகு பிந்தி வந்தவர்கள்..தொன்னுறுகளின் இறுதியில் கிட்ட தட்ட வணிக படங்களுக்கு எடிட் செய்வதை குறைத்து விட்டார்...லெனின் அதன் பிருகுதான் இவர்களுக்கு படம் கிடைத்தது...லெனின் இயங்கிய காலத்தில் அவருக்கு இணையாக கோலேசிய எடிட்டர் சுரேஷ் அர்ஸ் மட்டும் தான்


.எடிட்டர் லெனின் மணிரத்னத்தின் நாயகன் படத்தை எடிட் செய்ய மறுத்து விட்டார்...பிறகு கமல் சமரசம் பண்ணி கூட்டி வந்தது தனிகதை.

எடிட்டர் லெனின்
மலையாள இயக்குனர் பத்மராஜனுடன் வேலை பார்த்த படங்கள் அவருக்கு திருப்தியை கொடுத்தது.
அது பற்றி லெனின் ,பத்மராஜனின் திரைக்கதை புத்தகத்தின் முன்னுரையில் இருவருக்கும் இடையே இருந்த உறவை விரிவாக எழுதி இருக்கிறார்.''பெருவழியம்பலம்''(தமிழில் -மீரா கதிரவன்)கனவுப்பட்டறை வெளியீடு


.அந்த மகத்தான கலைஞன் பற்றி இத்தனை விஷயங்கள் இங்கே நினைவு கூற முடிந்தது பெரும் மனதிருப்தியை அளிக்கிறது.
பின் குறிப்பு


அவர் எடுத்த குறும்படம் பெயர் நாக் அவுட் ...ஒரு முன்னாள் பாக்சரை பற்றியது..அவர் அனாதை பிணமாக குப்பை தொட்டி அருகே கிடப்பார்...அதை பற்றியது அந்த குறும்படம்...அதற்காக 1992 இல் சிறந்த குறும்படமாக தேர்வு பெற்று ஜனாதிபதி பரிசும் பெற்றார். இது ஒரு சிறிய அறிமுகமே அவரை பற்றி எழுதுவதற்கு இதை போல் இன்னும் எத்தனையோ விசயங்கள் உள்ளன...ஒரு புத்தகமே எழுதலாம்...

2 comments:

  1. பாக்ஸர் என்ற குறும்படத்தை பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே விஜய்.

    சின்ன வயதில் அப்பாவுடன் ஒரு நிகழ்ச்சியில் இவரை சந்தித்தேன். திரைப்படம் எடுப்பதற்காக பணம் திரட்டிக்கொண்டிருந்தார். ரொம்ப வேக் நினைவு.

    ReplyDelete
  2. அந்த குறும்படம் பெயர் நாக் அவுட் ...ஒரு முன்னாள் பாக்சரை பற்றியது..அவர் அனாதை பிணமாக குப்பை தொட்டி அருகே கிடப்பார்...அதை பற்றியது அந்த குறும்படம்...அதற்காக 1992 இல் சிறந்த குறும்படமாக தேர்வு பெற்று ஜனாதிபதி பரிசும் பெற்றார்.விழியன் இது ஒரு சிறிய அறிமுகமே அவரை பற்றி எழுதுவதற்கு இதை போல் இன்னும் எத்தனையோ விசயங்கள் உள்ளன...ஒரு புத்தகமே எழுதலாம்....

    ReplyDelete