Saturday, March 5, 2011
அய்யப்ப மாதவனின் ''நதியோடிய கவிதாவின் முகம் ''
இரவு
சுமார் 2.00 மணி முன்புவரை
கவிதா விழித்துக்கொண்டிருந்தாள்
நிம்மதி இழந்திருந்த பாபு
குடித்து முடித்து வாந்தியெடுத்து தூங்கிவிட்டான்.
ஆட்டியவளின் இதயத்துடன்,
தொட்டிலில் குழந்தை அசைந்தது பலவாறு
துணியை நீக்கியவள்
குழந்தையை ஆசை தீர பார்த்துக்கொண்டாள்
சண்டைபோட்டு குடித்து தூங்கிய பாபுவையும்
வானத்துள் இடிமின்னல்
அவளுக்குள்ளும் மழை
வாழ்ந்திருந்த வீட்டைப் பார்க்கிறாள்
சத்தமிட்டு அழமுடியதாவள்
உள்ளுக்குள் குமுறிச் சிதறினாள்
நதியோடிய முகத்தை துடைத்தவள்
சப்தமிழந்த நாற்காலியில் ஏறினாள்
நிறுத்தப்பட்ட மின்விசிறியில்
உடலைச் சுற்றியிருந்த சேலை
குரல்வளைக்குள் ஒளிந்திருந்த
கவிதாவின் உயிர்
தொங்கவிட்ட நாக்கின் வழியே ]
போய்விட்டது
கண்கள் வெளிவந்த
கவிதாவின் தலைமாட்டில்
மூர்ச்சையற்று கிடந்த பாபு
கவிதா என்ற பெயரையே
முணுமுணுத்தான்
குழந்தை
புரியாத மரணத்தில்
விளையாடிகொண்டிருந்தது.
நன்றி நவீன விருட்சம்.ஜூலை 2007.இதழ்.
அய்யப்ப மாதவனின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கவிதை.துரதிஸ்டவசமாக இந்த கவிதையை அவர் எந்த தொகுப்பிலும் சேர்க்காமல் விட்டு இருக்கிறார்.அப்போது அவர் அறைக்கு பக்கம் உள்ள வீட்டில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாள்.அது அவரை மிகவும் பாதித்தது.அதன் விளைவே இந்த கவிதை.இந்த கவிதையின் முதல் வாசகனும் நான்தான்.இந்த கவிதை நன்றாக இருக்கிறது என விருட்சம் அழகிய சிங்கரிடம் கொடுத்தேன்.இம்மாதம் உயிர்மையில் வந்த வா.மணிகண்டனின் கவிதை எனக்கு அய்யப்பமாதவனின் இந்த கவிதையை நினைவுபடுத்தியது.இந்த கவிதை முடியும் இடத்தில மணிகண்டனின் கவிதை ஆரம்பிக்கிறது.கவிஞர்களுக்குள் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்ச்சி நடந்து வருவதை நான் அறிந்தேன்.இருவருக்கும் என் நன்றி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment