நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி பார்த்தேன் ...சார் இவன் யாருன்னே தெரியாது டெய்லி என்னை பாலோ பண்ணி தொல்லை கொடுக்கிறான் என்றாள் ..அவ பொய் சொல்ற என்றான்...நண்பர் கொஞ்சம் கை நீளம் அவனை அடிக்க போய் விட்டார்...அவனை செல்போனில் போட்டோ எடுத்து கொள்ள நண்பரிடம் சொன்னேன்...வண்டி நம்பரை நோட் பண்ண சொன்னேன்...என் சார் இதெல்லாம் பண்றிங்க என்றான்...நாங்க மீடியா உன் போட்டோ நாளைக்கு பேப்பர்ல வரும் என்றேன்..ஐயோ சார் இவ பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் என்று ஓடிவிட்டான் அவன்...அவளிடம் ஏம்மா இந்த பிரச்சினையை வீட்டில் உள்ளவங்க கிட்ட சொன்னாயா என்றேன்...பயந்து கொண்டு சொல்ல வில்லை என்றாள் ...அதுதான் பிரச்சினையே என்று அவள் வீடு வரை நானும் நண்பரும் சென்று கொஞ்ச நாட்களுக்கு யாராவது கூட போங்கள் என்ற விஷயத்தை விளக்கி விட்டு வந்தோம் ....நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!
No comments:
Post a Comment