ப்ரியாதம்பியின் மின்னுவும் அம்மாவும் புத்தகம் கயல்கவின் புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது...நேற்று புத்தக சந்தையில் வாங்கிவந்து ஒரே இரவில் முழு புத்தகத்தை படித்தேன்...கிழே வைக்க முடியவில்லை...அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் மிக நுட்பமான அவதானிப்புடன் எழுதியுள்ள புத்தகம் இது....மகள் மின்னுவை பற்றி எழுதியுள்ள பகுதிகள் அனைத்தும் கவித்துவமாக வந்துள்ளது...விபத்தில் கிடைத்த நண்பன் ,ராங் நம்பரில் அறிமுகமான நல்ல மனிதர் ,நல்ல பெண்ணிய படம் என நினைத்து மொழி புரியாமல் பலான படத்தின் டி வி டியை வாங்கியது என ஒளிவு மறைவற்ற எழுத்துக்களாய் இருக்கிறது ப்ரியாவுடையது ..எனக்கு தெரிந்து முகநூல் குறிப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறார் ..சந்திக்கும் மனிதர்களின் மீதான நேசம் புத்தகம் எங்கும் விரவி கிடைக்கிறது...ஒவ்வொரு இலக்கிய நண்பர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல ...தோழர்களுக்கும் தோழிகளுக்கும் பரிசாக வாங்கி கொடுக்க வேண்டிய புத்தகம் ''மின்னுவும் அம்மாவும் ''
No comments:
Post a Comment