Tuesday, December 21, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


நாஞ்சில் நாடனுக்கு இந்தமுறை சாஹித்ய அகதமி விருது சூடிய பூ சூடற்க தொகுப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.அவர் என்னோடைய முன்னோடி மட்டுமல்ல ,என் தந்தையை போன்று என்னிடம் அன்பு செலுத்தி ஊக்கப்படுத்தி வருபவர் .எனக்கே கிடைத்தது போல மகிழ்வில் உள்ளேன்.தமிழில் தொடர்ந்து தகுதியற்றவர்களே சமீபத்தில் சாகித்ய அகாதமி வாங்கியிருக்கும் நிலையில் நாஞ்சில்நாடனுக்கான இந்த அங்கீகாரம் ஒரு தொடக்கம்...நாஞ்சில் நாடன் மிக அரிய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்... மிதவை, என்பிலதனை வெயில் காயும், எட்டுத்திக்கும் மதயானை போன்ற முக்கியமான நாவல்களை எழுதியிருக்கிறார்.



கேள்விப்பட்டு அவரை போனில் முயற்சி செய்தேன்.மதியம் மூன்று மணியில் இருந்தே அவரது போன்..பிஸியாக இருந்தது.இரவு ஒன்பது மணி வரை இதே நிலை.சரி பெரிய மனிதர்கள் ,எழுத்தாளர்கள் பலர் பேசுவார்கள் என விட்டுவிட்டேன்.இரவு பதினொன்று இருக்கும் .நாஞ்சிலே அழைத்தார்.இந்த விருது நான்கு வருடங்களாக இதோ அதோ என்று போக்கு காட்டி வந்ததால் செய்தி வந்தபோது நம்பவில்லை .என்று குறிப்பிட்டார்.இது தானே தமிழ் எழுத்தாளனின் நிலை.பிறகு சாஹித்ய அகடாமி இல் இருந்து அதிகாரபூர்வமாக தெரிவித்த பின் தான் நம்பியதாக குறிப்பிட்டார்.பேசி கொண்டு இருக்கும் போதே அவர் வீட்டின் போன் அடித்துக்கொண்டே இருந்தது.விடைபெற்றேன் பிறகு தொடர்புகொள்வதாக சொல்லி...ஒரே கொண்டாட்ட மனநிலையில்.

3 comments:

  1. தகுதியுள்ளவர்களுக்குக் கிட்டுகையில் அந்த விருதையும் கூட மதிக்கத் தோன்றுகிறது.

    உங்களைப்போல் மெனக்கெடவில்லை. 'வாழ்த்துகள்' என்றோரு SMS இரவு மூன்று மணிக்குக் கொடுத்தேன். மறுநாள் காலை ஆறு மணிக்கு, 'நன்றி நண்பரே' என்று மறுபடி வந்துவிட்டது. மதிப்பிறகு உரியவர்; எல்லாரையும் மதிக்க மறக்காதவரும் கூட. நாஞ்சில் நாடன் நீடூழி வாழ்க!

    ReplyDelete
  2. நன்றி ராஜ சுந்தர்ராஜன் சார்.உங்களை சந்திக்க விரும்புகிறேன்.எனது எண் 9444658131.இயலும் போது தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete