நன்றி அதிஷா,யுவகிருஷ்ணா,விரிவான நாவல்களின் பட்டியல் ஒன்று விரைவில் வெளியிடுகிறேன்,மொழிபெயர்ப்பு நாவல்கள் உட்பட.ஆரம்பகட்ட வாசகர்கள் என்பது ஆரம்பகட்ட நவீன இலக்கிய வாசகர்களுக்கான பட்டியல் இது.சுஜாதாவின் நாவல்களை இதில் சேர்க்க முடியாது.அது பெரும்பாலும் துப்பறியும் கதைகளே.சொல் என்றொரு சொல் புதினத்தை பலரும் கடினமானது என்று நினைத்து கொள்கின்றனர்.எளிதாக உள்ளே சென்று விடலாம் சிறிது முயற்சி எடுத்தால் நவீன இலக்கிய வாசகனுக்கு இந்த பயற்சி மிக முக்கியம்.
கொரில்லா நாவலை விட ம் நாவலின் கூறல் முறை எளிமை என்பதால் அதை சொல்லியிருக்கிறேன் .மற்றபடி இரண்டும் முக்கிய நாவல்கள்தான்.
ஒன்று இரண்டை தவிர அனைத்தும் கிடைக்கின்றன.
காலச்சுவடு ,கிழக்கு,மருதா,ஆகியவை கிளாச்சிக் வரிசையில் வெளியிட்டு உள்ளன.
online வாங்க http://www.newbooklands.com/new/home.php தொடர்பு கொள்ளலாம்.
சம்பத்தின் இடைவெளி இப்போது அச்சில் இல்லை.திலிப் குமார் போன்றவர்களை தொடர்பு
கொண்டால் பிரதி செய்து தருவார்கள்.விரைவில் வெளிவரவும் உள்ளது. .
புயலிலே ஒரு தோணி தமிழினி வெளியீட்டு உள்ளது கிடைக்கறது.
நல்ல புத்தகங்கள் வாங்க சிறிது முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.இதுவும் வாசகனுக்கு அவசியம் .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.
ஆரம்ப கால வாசகர், அடுத்த கால வாசகர், அட்வான்சே வாசகர்- எரிச்சலையும் மன வருத்தத்தையும் தரும் வார்த்தைகளை உள்ளன.
ReplyDeleteஅறிவின் அடிப்படையில், வாசிப்பின் அடிப்படையில் பேதம் பார்ப்பதும் சாதீயமே.
இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் ராம்ஜி?
ReplyDelete