Wednesday, April 28, 2010

காந்தியை கொன்றது தவறுதான்





சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்

நூல்: காந்தியை கொன்றது தவறுதான்

தேர்வு: ஞானக்கூத்தன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் காந்தியை கொன்றது தவறுதான் என்ற ரமேஷ் பிரதேனின் கவிதைத் தொகுப்பு

அதிவிநோதமான அனுபவத்தை தருகிறது. மறுக்கவும் எதிர்க்கவும் நிராகரிக்கவும் கூறும் கவிதைகளைக் கொண்டு வாசகனின் வேடிக்கை பார்க்கும் மனசை வேறுவிதமாகச் செயல்படச் செய்கிறார் ரமேஷ் பிரதேன். தோற்றம், வாழ்க்கை மற்றும் மரணம் இவற்றின் எல்லைகளின் மீது தானும் வரைவதால் வரும் அனுபவத்தை இவர் கவிதைகள் தருகின்றன. இவருடைய கவிதைச் சுவரில் நின்ற நிலையில் சிதம்பரம் ராமலிங்கமும் இருப்பார், சாராயம் நிரப்பப்பட்ட தம்ளர்களையே நாடி வரும் பெண் பல்லிகளும் இருக்கும். காந்தி-கொலை-தவறு என்றால் காரியத்திற்குப் பலி காரியம், அதைப் பற்றிய தீர்ப்பு என்று அமைகிறது தொகுப்பின் பெயர். பழத்தைப் பார்க்க விதை சிறிதாக, ஆனால் வெளியே விளம்பரமாகத் தெரியும் ஒரு பழத்தை நினைவூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. ரமேஷ் பிரேதனின் கவிதையில் கடல், தன் அலையை வீசுகிறது. அவர் கவிதை ஒன்று Ôநீந்தி அடைய முடியாத தூரத்தில் நீ உனது கப்பலை நிறுத்தி வைக்கிறாய்’ என்கிறது. ரமேஷ் பிரேதனின் கவிதை அப்படிப்பட்டதுதான். ஒரு பொருள் உயிர்த்திருக்கிறது என்பதற்கு அடையாளம் அது ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும். இவர் கவிதையில் அப்படி ஒரு சலனம் உண்டு.
அவதானிப்பிற்குரிய விஷயம், தெளிவான நடை நவிற்சியின் சல்லாபம் முதலியவை இத்தொகுப்புக் கவிதைகளில் சிறப்படைகின்றன.

இத்தொகுப்பு நவீன கவிதையை ஒருகட்டத்தில் விளக்குவதோடு சலனம் உடையதாகவும் ஆக்குவதை உணர முடிகிறது

No comments:

Post a Comment