ரமேஷ் பிரேதன் அவர்களை 2006 இல் ஒரு உயிர்மை கூட்டத்தில் சந்தித்தேன்.அதற்கு முன்
அவரும் பிரேமும் இணைந்து எழுதிய பல புத்தகங்களை வாசித்து இருக்கிறேன்.சந்தித்த முதல் கணமே என்னை நண்பராக வரித்து கொண்டார்.அவர் pondicherry இல் வசித்து வந்ததால் பெரும்பாலும் போனில் பேசி கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.
போன் உரையாடல் பலமணி நேரமெல்லாம் நீண்டு இருக்கிறது.என்னுடைய ஆரம்பகட்ட சந்தேகங்கள் பலவற்றை நிவர்த்தி செய்தவர் அவரே.பின் நவீனத்துவம் குறித்த எந்த கேள்விகளுக்கும் தெளிவாகவும் சுவாரஸ்யமாவும் பதில் கூறுவார்.நமது காலத்தின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் .
2007 இல் அவரும் அவது நண்பரான பிரேமும் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
மிகுந்த தனிமையில் இருந்த அவருக்கு அடிக்கடி போன் செய்தும்,உற்சாகம் ஊட்டியும்,பேசுவேன்.மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தார்.
அந்த பாதிப்பிலிருந்து மீள அவரை மீண்டும் எழுதுமாறு தூண்டினேன்.அவரும் சிறு துயில்
கலைந்து கவிதைகளாக எழுத ஆரம்பித்தார்.தெளிவான மொழியும் ,வினோதமான அனுபவங்களும் கொண்டு எழுத பட்ட அக்கவிதைகள் வாசகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டன.அக்கவிதைகளை விரைவில் தொகுப்பாகும் படி கூறினேன்.அவர் ராஜமார்தண்டனிடம் கொடுத்தார் .அவர் காலச்சுவடு பதிப்பகத்துக்கு சிபாரிசு செய்தார்.
காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பு இவ்வாறு வெளிவந்தது.தொகுப்பில் எனக்கும் நன்றி கூறியிருந்தார்.அவரது பெருந்தன்மை அது.தொகுப்பு இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது
.
அதன் பின் சாராயக்கடை என்ற தொகுப்பை ,உயிர்மை வெளியிட்டது.எனது நண்பன் அடேலேறுவுக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.இளம் வாசகர்களை அந்த தொகுப்பு கவர்தது.
சமீபமாக என்னிடம் போனில் பேசுகையில் சுஜாதா விருதுக்கு காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பை அனுப்பி இருப்பதாக கூறினார்.விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் கூறினேன்.
சில நாட்கள் முன்பு மதியம் மனுஷ்ய புத்திரனிடம் இருந்து போன் வந்தது.ரமேஷ் போன் நம்பர் இருந்தால் கொடுக்கும்படி.அப்போதே எனது மனதில் ஒரு மின்னல் விருது கிடைத்து இருக்கும் என.அவர் மாலையில் எனக்கு போன் செய்து தகவலை உறுதிபடுத்தினார்.அவர் தனித்து எழுத ஆரம்பித்த பின் பெறும் முதல் விருது இது.ஏதோ நானே விருது பெற்றது போல அக மகிழ்த்தேன்.அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
சரியான வேலையின்றி மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்தி வரும் அவருக்கு நிச்சயம் .இந்த விருது.ஒரு நல்ல தொடக்கத்தை வேலையிலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
.
Thursday, April 29, 2010
Wednesday, April 28, 2010
காந்தியை கொன்றது தவறுதான்
சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்
நூல்: காந்தியை கொன்றது தவறுதான்
தேர்வு: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் காந்தியை கொன்றது தவறுதான் என்ற ரமேஷ் பிரதேனின் கவிதைத் தொகுப்பு
அதிவிநோதமான அனுபவத்தை தருகிறது. மறுக்கவும் எதிர்க்கவும் நிராகரிக்கவும் கூறும் கவிதைகளைக் கொண்டு வாசகனின் வேடிக்கை பார்க்கும் மனசை வேறுவிதமாகச் செயல்படச் செய்கிறார் ரமேஷ் பிரதேன். தோற்றம், வாழ்க்கை மற்றும் மரணம் இவற்றின் எல்லைகளின் மீது தானும் வரைவதால் வரும் அனுபவத்தை இவர் கவிதைகள் தருகின்றன. இவருடைய கவிதைச் சுவரில் நின்ற நிலையில் சிதம்பரம் ராமலிங்கமும் இருப்பார், சாராயம் நிரப்பப்பட்ட தம்ளர்களையே நாடி வரும் பெண் பல்லிகளும் இருக்கும். காந்தி-கொலை-தவறு என்றால் காரியத்திற்குப் பலி காரியம், அதைப் பற்றிய தீர்ப்பு என்று அமைகிறது தொகுப்பின் பெயர். பழத்தைப் பார்க்க விதை சிறிதாக, ஆனால் வெளியே விளம்பரமாகத் தெரியும் ஒரு பழத்தை நினைவூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. ரமேஷ் பிரேதனின் கவிதையில் கடல், தன் அலையை வீசுகிறது. அவர் கவிதை ஒன்று Ôநீந்தி அடைய முடியாத தூரத்தில் நீ உனது கப்பலை நிறுத்தி வைக்கிறாய்’ என்கிறது. ரமேஷ் பிரேதனின் கவிதை அப்படிப்பட்டதுதான். ஒரு பொருள் உயிர்த்திருக்கிறது என்பதற்கு அடையாளம் அது ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும். இவர் கவிதையில் அப்படி ஒரு சலனம் உண்டு.
அவதானிப்பிற்குரிய விஷயம், தெளிவான நடை நவிற்சியின் சல்லாபம் முதலியவை இத்தொகுப்புக் கவிதைகளில் சிறப்படைகின்றன.
இத்தொகுப்பு நவீன கவிதையை ஒருகட்டத்தில் விளக்குவதோடு சலனம் உடையதாகவும் ஆக்குவதை உணர முடிகிறது
இருள் விலகும் கதைகள்-நிலாரசிகன் விமர்சனம்
-----------------------------------------
நூலி்ன் பெயர்: இருள் விலகும் கதைகள்
பகுப்பு: சிறுகதைகள்
புத்தகத்தின் விலை: ரூ.90
பதிப்பகம்: .தோழமை,5D,பொன்னம்பலம் சாலை,K.K நகர்,சென்னை 78.
CELL:9444302967.
தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்
-----------------------------------------
நவீன சிறுகதைகளின் காலகட்டமான இக்காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. வெவ்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள்,தனித்து நிற்கும் கதைசொல்லல்,கற்பனைவீச்சின் உச்சத்தில் நிற்கும் கதைகள் என பல சிறுகதைகள் தமிழில் வந்த வண்ணம் உள்ளன.
இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து தோழமை வெளியீடாக
வெளியிட்டிருக்கிறார் சிறுகதையாளர் விஜய் மகேந்திரன்.
வா.மு.கோமு ,சுதேசமித்திரன்,ஷாராஜ்,கே.என்.செந்தில்,ஹரன் பிரசன்னா,எஸ்.செந்தில்குமார்,பாலைநிலவன்,லஷ்மி சரவணக்குமார்,சிவக்குமார் முத்தையா,விஜய் மகேந்திரன்,புகழ் மற்றும் என்.ஸ்ரீராம்
மொத்தம் 12 சிறுகதையாளர்களின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு முகம்கொண்டவையாக இருப்பது வாசகனுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கிறது. கதை சொல்லும் உத்திகளாலும்,கதைக்களத்தின் புதுமையாலும் அனைத்து கதைகளுமே ரசிக்கும்படி இருப்பது இத்தொகுப்பின் பலம்.இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்ட கதைகள் என்பதும் கூடுதல் பலம்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் மூன்று கதைகளை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
செறவிகளின் வருகை:
சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை
செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.
நகரத்திற்கு வெளியே:
விஜய மகேந்திரன் கணையாழியில் தனது முதல் படைப்பிலேயே அதிக கவனம் பெற்றவர். நகரத்திற்கு வெளியே கதை இளம் யுவதி ஒருத்தியை பற்றியது. அவளது காதலனால் அவள் படும் தவிப்பை சொல்லியிருக்கிறார்.நகரத்தில் நடக்கும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் விவரிக்கிறது ஒவ்வொரு வரியும்.காதல் என்கிற பெயரில் நடக்கும் விஷம செயல்களை நகர பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இக்கதையின் மூலக்கருவாக உணரமுடிகிறது.
காலவாயனின் காடு:
திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர் புகழின் கதையிது. மற்ற கதைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது இதன் மொழி. சொல்கதை என்றபோதும் இதன் நுட்பமான விவரிப்பு ஆச்சர்யமூட்டுகிறது.வட்டார வழக்கில் வாசகனும் சங்கமித்துவிடுகிறான். காலவாயன் என்கிற விவசாயியின் மனவோட்டமாக கதை நீள்கிறது.நல்லதொரு கதை.
இருள் விலகும் கதைகள் நூலின் அட்டைப்படத்தின் வசீகரிப்பில்தான் இந்நூலை வாங்கினேன். இவை போன்ற தொகுப்பு நூல்கள் பல வெளிவர வேண்டும்.பல சிறுகதையாளர்களின் கதையை ஒரே நூலில் வாசிப்பது புதுவித வாசிப்பனுபவத்தை தருகிறது.ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பின்புலத்தை கொண்டிருப்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் விஜய மகேந்திரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.
Monday, April 26, 2010
தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்- ஸ்ரீபதி பத்மநாபா
தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்
கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை 'ஸ்மார்த்த விசாரம்'. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி
தண்டனை வழங்கும் ஆணாதிக்க ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது.
அந்தர்ஜனங்களின் அடுக்களை தோஷம் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெயர். பரபுருஷனிடம் ஒரு அந்தர்ஜனம் (மனைக்குள் இருக்கும் மக்கள் என்று அர்த்தம்) தொடர்பு கொண்டுவிட்டாள் என்ற சமூகத்துக்குள் ஒரு வதந்தி உருவாகும்போது இந்த ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படும்.
இந்த ஸ்மார்த்த விசாரம் 'தாசீ விசாரத்தில்' துவங்குகிறது. அதாவது அந்தர்ஜனத்தின் வேலைக்காரியை விசாரணை செய்தல். வேலைக்காரி தன் எஜமானி நடத்தை கெட்டவள் என்பதை உறுதி செய்துவிட்டால், உடனே அந்த அந்தர்ஜனம் தன் பெயரை இழக்கிறாள். தன் திணைûயுயும் இழக்கிறாள். அதாவது அஃறிணை ஆகிறாள். அதுமுதல், அவள் 'சாதனம்' என்றே அறியப்படுகிறாள்.
தாசீ விசாரம் முடிந்தவுடன் அடுத்த கட்டம் சாதனத்தை அஞ்சாம் புறையில் தள்ளுவது. அதாவது அவள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அஞ்சாம் புறை எனப்படும் தனி அறையில் தனிமைக்காவலில் வைக்கப்படுகிறாள்.
அடுத்த கட்டமாக அந்த தேசத்தின் ஆட்சியாளரிடம் (ராஜா அல்லது 'நாடுவாழி' என்று அழைக்கப்படும் பண்ணையார்) குற்ற விசாரணைக்கான அனுமதி கோரப்படுகிறது. விசாரணையை ஒரு நம்பூதிரிதான் நடத்த வேண்டும். அவருக்கு 'ஸ்மார்த்தன்' என்று பெயர். ராஜா அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு ஸ்மார்த்தனையும், இரண்டு மீமாம்சகர்களையும் ஒரு அரசப் பிரதிநிதியையும் விசாரணைக்காக நியமிக்கிறார்.
விசாரணை நடத்தி, சாதனம் குற்றம் செய்திருக்கிறது என்பதை எப்படியேனும் நிரூபித்து, சாதனத்தை 'கதவடைத்து பிண்டம் வைப்பது' வரை ஒரு மிகப்பெரிய கடமையை நிர்வகிப்பதுதான் ஒரு 'உண்மையான' ஸ்மார்த்தனின் பணி.
விசாரணை நேரத்தில் மேற்பார்வை செய்கின்ற அரசப் பிரதிநிதியை 'புறக் கோய்மை' என்றும் அந்தப் பிரதேசத்து நம்பூதிரிகளின் பிரதிநிதியை 'அகக் கோய்மை' என்று அழைப்பார்கள். அஞ்சாம்புறையின் புறத்தளத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். விருப்பமுள்ள ஊர் மக்களும் பங்குபெறலாம்.
ஸ்மார்த்தனும் இரண்டு கோய்மைகளும் சேர்ந்து உள்ளே நுழைய முற்படுகிறார்கள். அப்போது வாசலில் இருக்கும் தாசி அவர்களைத் தடுக்கிறாள். ஆண்கள் உள்ளே நுழையக் கூடாது என்கிறாள். ஏன் என்று இவர்கள் கேட்கிறார்கள். உள்ளே ஒரு சாதனம் இருக்கிறது என்று தாசி கூறுகிறாள். யார் அது என்று ஸ்மார்த்தன் கேட்கிறார். இந்த மாதிரி இந்த மாதிரி மனையின் இந்த மாதிரி இந்த மாதிரி நம்பூதிரியின் மகள் அல்லது சகோதரி அல்லது மனைவியான இந்த மாதிரி இந்த மாதிரி சாதனம் என்று அவள் பெயரைக் கூறுகிறாள் தாசி. இப்படிப்பட்ட ஒரு பெண் இந்த வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் என்று ஆச்சர்யம் அபிநயிக்கும் ஸ்மார்த்தன் கூடுதல் விவரங்களைக் கோருகிறார்.
இந்த இடத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் துவங்குகிறது ஸ்மார்த்த விசாரம். குற்றவாளியான சாதனம், கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, கண்ணையும் முகத்தையும் வெள்ளைத் துண்டால் கட்டி, ஸ்மார்த்தனின் கேள்விகளுக்கு தாசியின் மூலமாக பதில் அளிக்க வேண்டும். வேறு யாரும் பேசுவதற்கு அனுமதியில்லை. ஸ்மார்த்தனின் கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் அகக்கோய்மை தன் தலையில் கட்டியிருக்கும் துண்டை கீழே போடுவார். இதற்கு 'நாட்டாமை, கேள்வியை மாத்து' என்று அர்த்தம், ஸ்மார்த்தன் தன் கேள்வியை மாற்றிக் கேட்பார். எல்லாமே அவளை குற்றத்தை சம்மதிக்க வைப்பதற்கான வழிகள்தான்.
ஸ்மார்த்த விசாரம் அன்றைய தினம் முடியாமல் நீண்டு போகிறது என்றால் அன்றைய தினம் தனக்குக் கிடைத்த விவரங்களை சபையின் முன் அறிவிப்பார் ஸ்மார்த்தன். இதற்கு 'ஸ்வரூபம் சொல்லுதல்' என்று பெயர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்த்த விசாரம் முடிந்ததும் குற்றவாளியின் உறவினர்கள் ஜட்ஜ் டிரிப்யூனல் அங்கத்தினர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். சில ஸ்மார்த்த விசாரங்கள் மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன. (ஷோரணூருக்கு அருகில் கவளப்பாறையில் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் இந்த ஸ்மார்த்த விசாரம் 36 வருடங்கள் நீண்டது. இறுதியில் அந்த அந்தர்ஜனம் குற்றமற்றவர் என்று நிரூபணமாயிற்று. ஆனாலும்... தன யௌவனம் முழுவதும் இருளடைந்த அஞ்சாம்புறையில் கழித்ததற்கான எந்த நியாயமும் அவருக்கு வழங்கப்படவில்லை.)
சாதனம் குற்றத்தை ஒத்துக்கொண்டதும் தான் சம்போகித்த ஆள் யார், எந்த தருணத்தில் நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எவ்வளவு முறை நடைபெற்றது என்பதையெல்லாம் விவரிக்க வேண்டும். ஒரு வேளை ஒன்றிற்கு மேல் ஆட்கள் இருந்தால் ஒவ்வொருவர் பெயர் சொல்லப்படும்போதும் இந்த விவரணைகளும் தேவை. அதற்குப் பிறகு சாதனம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. அவள் மரித்துவிட்டதாகக் கருதி பிண்டம் வைக்கப்படுகிறது. பிரஷ்டம் செய்யப்பட்ட அவள் தனக்குத் தோன்றிய திசையில் செல்கிறாள்.
அவளால் சுட்டப்பட்ட ஆண்களும் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்பீலுக்குப் போகலாம். தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு நிரூபிக்கலாம். இந்த கைமுக்கல் சடங்கு நடப்பது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்தரம் கோவிலில்.
இப்படி ஆணாதிக்கம் கொடிகட்டி வாழ்ந்திருந்த அந்தக் கால நம்பூதிரி சமுதாயத்தில் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகி வீரத்துடன் எதிர்த்து நின்ற ஒரே ஒரு அந்தர்ஜனம் தாத்ரிக்குட்டி.
குன்னங்குளம் கல்பகசேரி மனையின் குறியேடத்து தாத்ரி என்ற தாத்ரிக்குட்டி, அழகாகயிருந்ததாலேயே ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானவள். சிறு வயதிலேயே தன் சொந்த தந்தையாலும் சகோதரனாலும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். திருமணம் நடந்ததும் முதலிரவில் கணவனின் மூத்த சகோதரனிடம் முதலில் தன்னைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்குப் பிறகுதான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்குகிறாள் தாத்ரிக்குட்டி. சமூகத்தின் பிரபலமானவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தி வீழ்த்துகிறாள். அவர்களுடன் சம்போகித்ததற்கான எல்லா நிரூபணங்களையும் சேகரித்து வைக்கிறாள்.
அவளிடம் ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படுகிறது.
நம்பூதிரி சமூகத்தையே நடுங்கச் செய்த இந்த ஸ்மார்த்த விசாரம் நடந்தது 1905ம் ஆண்டு. இதுவே கடைசி ஸ்மார்த்த விசாரம் என்றும் அறியப்படுகிறது.
விசாரணையில் சமூகத்தில் பிரபலமான 64 பேருடன் தான் சம்போகித்ததாக சொல்லும் தாத்ரிக்குட்டி ஒவ்வொருவரின் பெயராகச் சொல்கிறாள். 63 பெயர்களை சொல்லி முடித்தவள் ஸ்மார்த்தனை நோக்கி விரல் நீட்டி 64 வது ஆள் யாரென்று சொல்லட்டுமா என்று கம்பீரமாகக் கேட்கிறாள்.
சமூகத்திலிருந்து அந்த 64 பேரும் வெளியேற்றப்பட்டார்கள். தாத்ரிக்குட்டியும் தனக்குத் தோன்றிய திசையில் பயணத்தைத் துவங்கினாள்.
பி.கு.1
தாத்ரிக்குட்டி தமிழ்நாட்டு எல்லையில் கோவைக்கு அருகே ரயில்வே ஊழியரான ஒரு கிறிஸ்துவ இளைஞரை மணந்துகொண்டாள் என்கிறது செவி வழி வரலாறு. அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மலையாளத் திரையில் கொடிகட்டிப் பறந்த ஷீலா என்பதும் ஒரு (உறுதிப்படுத்தப்படாத) தகவல்!
பி.கு. 2
தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்.டி. வாசுதேவன் நாயரின் 'பரிணயம்', மாடம்பு குஞ்ஞக்குட்டனின் 'பிரஷ்டு', அரவிந்தனின் 'மாறாட்டம்' போன்ற படைப்புகள் வந்திருக்கின்றன.
பி.கு. 3
முக்கியமான குறிப்பு இது. தாத்ரிகுட்டியால் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்களில் மேலங்கத்து கோபால மேனனும் ஒருவர். கோழிக்கோடு அரசின் வரி வசூல் அதிகாரியாக இருந்தவர். நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு சென்ற அவர் அங்கே சத்யவதி என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார். அதில் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல்வர் சக்ரபாணி. இரண்டாமவர் ராமச்சந்திரன். இரண்டாமவர் என்றாலும் இவர்தான் முதல்வர் ஆனார். மேலங்கத்து கோபாலன் ராமச்சந்திரன் (MGR) !

Wednesday, April 21, 2010
என்.ஸ்ரீராமின் அத்திமரசாலை
என்.ஸ்ரீராமின் அத்திமரசாலை
இந்த புத்தகம் தோழமை வெளியிட்டு உள்ள குறு நாவல்.நேற்று ஒரே முச்சில் படித்து முடித்தேன்.சுருக்குமா சொன்னால் மிஷ்கின் படம் பார்த்த மாதிரி இருந்தது.
அவ்வளவு சுவாரசியம்.எளிய நடை.இங்கே அதன் கதையை சொல்லி ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை.காட்சிகளின் துல்லியமும் ,இருள் உலகின் சம்பவங்களும் நன்கு சித்தரிக்கப்பட்டு உள்ளன.
ஸ்ரீராமிடம் பேசிய போது இதை சொன்னேன்.அவரோ அட அவரல்லாம் இப்ப வந்தவரு,நான் பத்து வருசமா எழுதிட்டு இருக்கேன்.its a writer's punch.
கொசுறு.
சாரு நிவேதிதா அவர்கள் தான் இப்போதைக்கு மிஷ்கினின் நெருங்கிய நண்பர்.

Monday, April 19, 2010
லீனா மணிமேகலை கூட்டம் தொடர்பான பதிவு
லீனா மணிமேகலையின் உலகி அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பை தடை செய்யுமாறு இந்து மக்கள் கட்சி காவல் துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.மற்றும் வினவு இணைய தளம் லீனாவை பற்றி எழுதிவரும் தனி நபர் தாக்குதல்களை கண்டித்தும் எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்று 15 4 2010 அன்று எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் அ. மார்க்ஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.கிட்டத்தட்ட ஐம்பதற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தீவிர இலக்கிய தளம் முன்னெப்போதும் இல்லது அளவு கலாச்சார ஒடுக்குமுறைகளையும்,கண்காணிப்புகளையும் சந்தித்து வருகிறது.
லீனா தொடர்த்து கவிதை பரப்பில் இயங்கி வருபவர்.சமுக அக்கறையுள்ள குறும் படங்களையும் இயக்கி உள்ளார்.அவரது கவிதைகள் ஆபாசமாக உள்ளன என இதற்கு முன்னரும் சர்ச்சை எழுந்து உள்ளது .ஆனால் இந்தமுறை அளவு கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவதுறு செய்யுமளவிற்கு போய்விட்டது.
குட்டிரேவதி,சல்மா,சுகிர்தராணி, போன்றவர்களும் இந்த மாதிரி சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறனர்.
கலாச்சார காவலர்கள் சொல்லுவது கவிதைகளில் யோனி.முலை,குறி போன்ற ஆபாச சொற்கள் உள்ளன.என்று. சங்ககால பெண் கவிகளில் இருந்து இன்று வரை உடலுறவு குறித்து எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன
நவீன பெண் கவிகளின் மீது அடிக்கடி இந்த வன்முறை ஏய்யபடுகிறது.சமுக பொது புத்தியில் உரைத்துள்ள கற்பிதங்களை நீக்குவது அவ்வளவு எளிது இல்லை.
இந்த கூட்டத்தில் பேசுமாறு அழைத்த போது நான் ஏற்று கொண்டேன்
அதன் பின் பலவிதமான போன் அழைப்புகள் வந்தன நண்பர்களிடம் இருந்து.ஒரு நண்பர் பேச வீடுல உட்கார்து எதாவது கதை எழுதுங்கள் ஏன் இப்படி போய் வம்புல involve ஆகிறேன் என்றார்.அப்படடிதன் நமது பொதுபுத்தி சொல்கிறது
.இன்னோறவர் கூட்டத்தில் ம.க.இக.வினர் பிரச்னை செய்ய வாய்ப்புண்டு என்றார்.சிலர் இந்த மாதிரி வம்பு எதாவது வருமென்றே வரவில்லை என நினைக்கிறன்..கூட்டம் நடந்த அன்று சற்று தாமதமாக தான் சென்றேன்..கூட்டம் நடந்த இடமே ஏதோ போர்களம் போல காட்சியளித்தது.ம.க.இக. தோழர் ஒருவர் மைக் பிடித்து பேசி கொண்டு இருந்தார். வேறு கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என ஒரு நிமிடம் தோன்றியது.சூழல் அந்த அளவு அன்னியமாக இருந்தது.வாசலில் இரண்டு மூன்று போலீசார் நின்றனர்.சார் இரு குலுக்கலாம் அடித்து கொள்ளும் நிலையில் இருக்கிறது என்றார் ஒருவர்.
அ.மார்க்ஸ் மிக பொறுமையாக அவர்களை சமாதான படுத்த முயற்சி செய்தார்.ம.க .இக மற்றும் புரட்சி பெண்கள் அமைப்பினர் ஒரு குழுவாக வந்திருந்து லீனா எழுதிய கவிதைகளுக்கு விளக்கம் கேட்டு கூச்சல் போட்டு கொண்டு இருந்தனர்.கூட்டத்தை நடத்த விடுமாறு பலரும் கேட்டு பயனில்லை
.ஒரு மணிநேரம் இந்த நிலையே நீடித்தது.வந்து இருந்த சிலர் இனிமேல் கூட்டம் நடக்காது என்று கிளம்பி போக ஆரம்பித்தனர்.வாய்ச்சண்டை கைகலப்பாக மாறுவது மாதிரியான நிலை இருந்தது.ஒருவழியாக அ. மார்க்ஸ் அவர்களை அனுப்பிவைத்தார். ஒருவர் சேர் மேல் நின்று லீனாவுக்கு எதிராக கோசம் போட்டார்.
வசுமித்ரா மைக் பிடித்து அமைதி தோழர் என்று கேட்டு கொண்டு இருந்தார்.அவர்கள் கலைந்து சென்ற போது ஒன்றரை மணி நேரம் கழிந்து விட்டது..கூட்டம் ஆரம்பமான உடனே கூச்சல் செய்து நிறுத்தினர் என அருகே இருந்த நண்பர் ஒருவர் கூறினார்.
மாலை ஏழு மணிக்குத்தான் முறையாக ஆரம்பித்தது.
ராஜன் குறை,வ.ஐ.ச.ஜெயபாலன்,ஓவியா,சுகுணா திவாகர்,இசை,கலை,மணிமொழி ,கே.குணசேகரன்,லதா ராமகிருஷ்ணன்,வசுமித்ரா,மு.ஹரிக்ரிஷ்ணன்,லக்ஷ்மி மணிவண்ணன்.யவனிகா ஸ்ரீராம்,யூமா.வாசுகி,நிர்மலா கொற்றவை,மற்றும் பல நண்பர்கள் கலாச்சார ஒடுக்குமுறை குறித்தும்,சமூகத்தின் பொதுபுத்தியில் படிந்த்ருக்கும் பிற்போக்குதனம் பற்றியும்,பேசினார்.
மணல் வீடு ஹரி கிருஷ்ணன் லீனா இன்னும் எவ்வளவு கொச்சையாக கவிதை எழுதினாலும், வெளியேடுவேன்,அவருக்கு அவ்வாறு எழுத சுகந்திரம் உண்டு என பேசினார்.
லதா ராமகிருஷ்ணன் பெண்களின் அந்தரங்கமான கவிதை மொழி லீனாவிடம் வெளிப்பட்டு இருக்கிறது.அதற்காக அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்து கேள்விகள் எழுப்புவது அநாகரிகம் என்றார்.
கலை இதழின் ஆசிரியர் மணிமொழி ஐந்து வருடங்களுக்கு முன்னர் முப்பது பெண் கவிகளின் கவிதைகளை தொகுப்பாக கொண்டு வந்தா தகவும் இப்போது அவர்களில் இரண்டு பேர் மட்டும் தான் எழுதி கொண்டு இருக்கின்றனர்.மற்றவர்கள் இவ்விதமான அடக்கு முறைகளுக்கு பயந்து எழுதுவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.
அ.மார்க்ஸ் பேசும் போது இவ்வளவு எதிர்ப்புகள் வரும் என அறிந்துதான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார்.
ஆபாச திரைப்படங்கள் தொலைகாட்சி முலம் நமது வீட்டின் வரவேற்பறைக்கு வரும்போது,ஆயிரம் பிரதிகள் அச்சு அடிக்கும் ஒரு இலக்கிய புத்தகத்தை ஆபாசம் என கூறி தடை செய முயற்சிப்பது அபத்தமானது என நான் பேசினேன்
இவ்விதமான கலாச்சர ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இளம்படைப்பாளிகள் திரள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டேன்.
இறுதியாக லீனாவின் கணவர் ஜெரால்டு பேசும் போது,சினிமாவை விட பல மட்டரகமான செயல்கள் இலக்கிய உலகில் நடப்பதாக குறிப்பிட்டார்.
எவ்விதமான எதிர்ப்புகள் வந்தாலும் லீனாவுக்கு துணை நிற்பேன் என உறுதி பட கூறினார்..
.
Saturday, April 17, 2010
லீனா மணிமேகலை கூட்டம்
லீனா மணிமேகலை கூட்டம் தொடர்பாக பல கேள்விகளை என்னிடம் போனிலும் நேரிலும் கேட்டுவருகின்றனர்.பதிவு ஒன்று அது தொடர்பாக எழுதலாம் என்று இருக்கிறன்.அவசர கோலத்தில் அள்ளி தெள்ளிபவன் அல்ல நான்,அதை எழுதுவதற்கு ஒரு மனநிலை தேவை படுகிறது.கூட்டத்தில் கருத்து சுகந்திரம் குறித்தும் பேசினேன்..அது குறித்து விரைவாக எழுதுகிறேன் வரும் திங்கள் இரவு அது வெளிவரும்.
Tuesday, April 13, 2010
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர்
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி
பங்கேற்பாளர்கள் :
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Friday, April 9, 2010
புத்தகம் கிடைக்குமிடம்
எனது நகரத்திற்கு வெளியே சிறுகதை தொகுப்பு discovery book palace கே.கே.நகரில் கிடைக்கிறது.இதன் உரிமையாளர் வேடியப்பன் சிறந்த இலக்கிய ஆர்வம் உள்ளவர்.நல்ல இலக்கிய புத்தகங்களை சிறந்த முறையில் வரிசைபடுதிள்ளனர் .மேலும் இலக்கிய கூட்டங்களுக்கும் அதில் இடமளிக்கின்றர்.அது பாராட்டுக்குரியது.
முகவரி
dicovery book place, மகாவீர் காம்ப்ளெக்ஸ்,
முனுசாமி சாலை,பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,சென்னை-78
cell-9940446650.

Thursday, April 8, 2010
நாவல்களின் பட்டியல்
நன்றி அதிஷா,யுவகிருஷ்ணா,விரிவான நாவல்களின் பட்டியல் ஒன்று விரைவில் வெளியிடுகிறேன்,மொழிபெயர்ப்பு நாவல்கள் உட்பட.ஆரம்பகட்ட வாசகர்கள் என்பது ஆரம்பகட்ட நவீன இலக்கிய வாசகர்களுக்கான பட்டியல் இது.சுஜாதாவின் நாவல்களை இதில் சேர்க்க முடியாது.அது பெரும்பாலும் துப்பறியும் கதைகளே.சொல் என்றொரு சொல் புதினத்தை பலரும் கடினமானது என்று நினைத்து கொள்கின்றனர்.எளிதாக உள்ளே சென்று விடலாம் சிறிது முயற்சி எடுத்தால் நவீன இலக்கிய வாசகனுக்கு இந்த பயற்சி மிக முக்கியம்.
கொரில்லா நாவலை விட ம் நாவலின் கூறல் முறை எளிமை என்பதால் அதை சொல்லியிருக்கிறேன் .மற்றபடி இரண்டும் முக்கிய நாவல்கள்தான்.
ஒன்று இரண்டை தவிர அனைத்தும் கிடைக்கின்றன.
காலச்சுவடு ,கிழக்கு,மருதா,ஆகியவை கிளாச்சிக் வரிசையில் வெளியிட்டு உள்ளன.
online வாங்க http://www.newbooklands.com/new/home.php தொடர்பு கொள்ளலாம்.
சம்பத்தின் இடைவெளி இப்போது அச்சில் இல்லை.திலிப் குமார் போன்றவர்களை தொடர்பு
கொண்டால் பிரதி செய்து தருவார்கள்.விரைவில் வெளிவரவும் உள்ளது. .
புயலிலே ஒரு தோணி தமிழினி வெளியீட்டு உள்ளது கிடைக்கறது.
நல்ல புத்தகங்கள் வாங்க சிறிது முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.இதுவும் வாசகனுக்கு அவசியம் .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

ஆரம்ப கட்ட வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

காகித மலர்கள் ஆதவன்
மானசரோவர் அசோகமித்திரன்
வெக்கை பூமணி
கோபல்ல கிராமம்-கி.ராஜநாராயணன்
மற்றும் சிலர் சுப்ரபாரதிமணியன்
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்
ரப்பர் ஜெயமோகன்
மிதவை நாஞ்சில் நாடன்
கடல்புரத்தில் வண்ணநிலவன்
மரம் g முருகன்.
ம்ம் ஷோபா சக்தி
சொல் என்றொரு சொல் ரமேஷ் பிரேம்.
சாயாவனம் .சா.கந்தசாமி
புயலில் ஒரு தோணி ப.சிங்காரம்
கரையோர முதலைகள் பாலகுமாரன்
வாடா மல்லி சு.சமுத்திரம்
பள்ளிகொண்டபுரம்-நில.பத்மநாபன்,
தரை இறங்கும் விமானங்கள் இந்துமதி.
இடைவெளி சம்பத்
ராசலீலா சாரு நிவேதிதா
.
காகித மலர்கள் ஆதவன்
மானசரோவர் அசோகமித்திரன்
வெக்கை பூமணி
கோபல்ல கிராமம்-கி.ராஜநாராயணன்
மற்றும் சிலர் சுப்ரபாரதிமணியன்
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்
ரப்பர் ஜெயமோகன்
மிதவை நாஞ்சில் நாடன்
கடல்புரத்தில் வண்ணநிலவன்
மரம் g முருகன்.
ம்ம் ஷோபா சக்தி
சொல் என்றொரு சொல் ரமேஷ் பிரேம்.
சாயாவனம் .சா.கந்தசாமி
புயலில் ஒரு தோணி ப.சிங்காரம்
கரையோர முதலைகள் பாலகுமாரன்
வாடா மல்லி சு.சமுத்திரம்
பள்ளிகொண்டபுரம்-நில.பத்மநாபன்,
தரை இறங்கும் விமானங்கள் இந்துமதி.
இடைவெளி சம்பத்
ராசலீலா சாரு நிவேதிதா
.
பெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள்
வாசிப்பு பிரதி
http://www.maatrupirathi.tk/
றியாஸ் குரானா
இலக்கியம் என்பது ஒரு நிறுவனம். எழுத்துக்களில் ஒரு பகுதியை இலக்கியம் என விளிக்கும்போது இதற்குப்பின்னே ஒரு அரசியல் செயற்பாடு வந்துவிடுகிறது. இலக்கியம் அல்இலக்கியம் என்ற வகைப்படுத்தல்கள் தனிநபர்,நிறுவனங்கள்,கலாச்சாரங்கள் போன்றவற்றுக்களால் வௌ;வேறு தன்மைகளில் பிரித்துக் கருதப்படுகிறது. சிலரால் இலக்கியம் எனக்கருதப்படுவது பிறரால் அல்இலக்கியமாக கருதப்படுகிறது. குறித்த செயற்பாட்டை செய்வதுதான் இலக்கியம் என பாவிக்கும்போது வேறொரு வேலையைச் செய்வதுதான் இலக்கியமென மறுபுறத்தில் பாவிக்கப்படுகிறது.
நிலவுகிற மரபை போற்றவும் அதன் அரசியலை பரிந்துரைக்கவும் பிரதிபலிக்கவும் இலக்கியம் உதவுவதாக கருதும் அதேநேரத்தில், அந்த மரபை உடைக்கவும்,மீறவும் பயன்படும் எழுத்துச்செயற்பாடுகளும் இலக்கியம் என்றே பயிலப்படுகிறது. இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம். இலக்கியத்தன்மை என வரையறுக்க முயற்ச்சிக்கும் எழுத்துக்கள் இலக்கியமற்றது என்ற வகைகளுக்குள்ளும் இருப்பதாக பின்நவீன வாசிப்புக்கள் அறிவித்ததிலிருந்து இலக்கியம் என்ற கருத்தாக்கம் பெரும் சிக்கல் நிறைந்த ஒரு இடத்தை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது.
இலக்கியம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகம் அல்லது குழுக்கள் எதை இலக்கியம் என்று பாவிக்கிறதோ அதுதான், அதாவது இலக்கியச் செயற்பாட்டாளர்களாக தம்மை கருதும் குழுவினர் எதை இலக்கியம் என்று பரிந்துரைக்கின்றனரோ அதுதான் இலக்கியம் என்று சொல்லலாம். இந்தப் பதில் இலக்கியம் பற்றிய புரிதலை வழங்கிவிடாது என்றுதான் தெரிகிறது.
எழுத்துக்களில் ஒரு குறித்த வகையினத்தை மாத்திரம் இலக்கியம் என்று நம்மை கருத உதவுவது எது என்றுகூட யோசித்துப்பார்க்கலாம். எப்படிப்பார்த்தாலும் இலக்கியம் என்பதை அறுதியிட்டு கூற முடியாது என்பதால், அது ஒரு நிறுவனம். குறித்த காரணங்களுக்காக,குறித்த வேலையை செய்வதற்காக எழுத்தவகையில் சிலவற்றை இலக்கியமாக பாவிக்கிறோம்.
இலக்கியம்,இலக்கியத் தன்மை என்றால் இன்னதுதான் என்ற நம்மால் பொதுவாக ஏற்றுக்கொண்ட ஒரு அம்சம் இருக்கிறது.அது தொடர்பில் எல்லோரும் ஒரேவகையான புரிதலை கொண்டிருக்கிறோம்.ஆகையினால், இலக்கியம் அல்இலக்கியம் என்ற வகைப்படுத்தம் நிறவனச் செயற்பாட்டிற்கும் அதன் வன்முறைக்கும் ஆதரவாக செயற்படுகிறோம்.அதுமட்டுமல்லாமல் இலக்கியம் அல்இலக்கியம் போன்ற வகையினங்களை பிரிக்கும் அரசியல் செயற்பாடுகுறித்து பெரிதும் அக்கரையில்லாதவர்களாகவே தமிழ்சூழல் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்.
இலக்கியம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்த பொதுவான ஒரு நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற எடுகோளை முன்வைத்தே பெரும்பாலும் இலக்கியவகைகள் பற்றி பரிந்துகொண்டும் செயலாற்றியும் வருகிறோம். பிரதி என்ற சொல்லாக்கம் உண்மையில் எந்த அர்த்தத்தில் தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ளப்படுகிறதோ,புரிந்துகொள்ளும்படி கட்டமைக்கப்படுகிறதோ அதற்க்கு மாற்றமான ஒரு இடத்தில் வைத்துப்பேசவே நான் அதிகம் அக்கரைகொள்கிறேன். இலக்கியம் இலக்கியமற்றது என விளிக்கப்படும் எல்லாவகை எழுத்துக்களையும் பிரதி என்றளவில் வாசிப்பதே எனக்கு உவப்பானதாக தெரிகிறது. இப்போது பெரும் சிக்கலை எதிர்கொள்ளவேண்டியவர்களாகவம், பிறிதொரு புரிதலை அவாவி நிற்பவர்களாகவும் தோண்றுகிறது. இலக்கியம் என்று வகைப்படுத்தப்படும் பகுதிக்குள் இருக்கும் கதைகள் என்று கருதப்படும் வகை எழுத்துக்கள் பற்றி ஒரு வாசிப்புப் பிரதியை முன்வைக்க விரும்புகிறேன்.
பிரதிகள் அனைத்தும் கதைகள்தான்.வேறு வேறான கதைகளை ஒவ்வொரு கதைகளும் கொண்டிருக்கலாம். வெவ்வேறு வடிவங்களில் கதைகள் சொல்லப்படலாம். கவிதை என்று பாவிக்கும் எழுத்தக்கள்கூட கதைகள்தான்.ஒருவகை கதைசொல்லலைத்தான் செய்கிறது. நாம் கதைகளுக்குள்ளே வசிக்கிறோம்.கதைகளாகவே வசிக்கிறோம்.கதைகளாலே சிந்திக்கிறோம். அறிவு,வரலாறு,தத்துவம்,விஞ்ஞானம் எதுவாக இருந்தாலும் அவைகள் கதைகளின் பின்னே அலைகின்ற ஒரு விசயம்தான். கதை சொல்லவும் கேட்கவுமான புரிதல் செயற்பாடுதான் நமது சிந்தனையை உருவாக்கிறது.மொழியின் அடிப்படையே கதையின் வழியாக கட்டமைக்கப்பட்டதுதான்.கதைகளின் பின்னணியில் சிந்திக்கிறோம் என்பதுமட்டுமல்ல அந்த சிந்தனையே பின் கதைகளாகவும் மாறிவிடுகின்றன.
கதைகள் என்ன செய்கின்றன. அறிவையும்,அடையாளங்களையும்,அதிகாரங்களையும் கட்டமைக்கின்ற அரசியலை தன்னோடு கொன்டிருக்கின்றன. அவசியமான அல்லது சிறந்த கதைகள் என்ற ஒருபகுதியை உருவாக்கி முதன்மைப்படுத்தி வந்திருக்கிறது.அதேபோல் எதிர் நிலையில் அவசியமற்ற தீங்கான கதைகள் என்ற என்ற பிரிவையும் உருவாக்கிவந்திருக்கிறது.
ஆண்களின் நலனை முன்னிறுத்திய புரிதலை பரிந்துரைக்கும் அரசியல்பாரம்பரியத்தை சிறந்தது என்ற பொதுப்பத்தியாக வளர்த்து வந்திருக்கிறது. இற்றைவரையான பிரதிகள் தம்மிடம் வைத்திருக்கும் கதைகளில், ஆண்வாசகனை முதன்மைப்படுத்திய பேசும் குரலையே உருவாக்கியுள்ளது. பெண்களை வாசகப்புரிதல் நிலையில் உருவாக்கும் பேசும்குரல்களைக் கொண்ட பிரதிகளை கதைகள் கொண்டிருக்கவில்லை. தமிழில் இன்றுள்ள அதிகம் பிரதிகள் ஏன் ஒரு தினசரிப்பத்திரிகையின் செய்திகூட ஆண்வாசகனுக்காகவே தயாரிக்கப்படுகிறது.
நவீனத்துவ,பின்நவீனத்துவ இலக்கிய,அரசியல் செயற்பாடுகளைக் கதையாடுவதாக தம்மை அறிவித்து செயற்படும் பிரதிகள்கூட ஆண்வாசகனுக்காகவே உருவாக்கப்படுகிறது.அதுபோலதான் விஜய் மகேந்திரனின் கதைப்பிரதிகளும் ஆண்வாசகனுக்காகவே தயாரிக்கப்பட்ட கதைகள். ஆண் வாசகனுக்காக கட்டப்படும் கதைகள் இலக்கியமாக பாவிக்கப்படும்போது பெண்கள்,விளிம்பு நிலையினர் போன்றவர்களுக்காக உருவாக்கப்படும் பிரதிகளும் இலக்கியமாகவே பாவிக்கப்படுகிறது. இது இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம் என்பதையே மேலும் பேசவைக்கிறது.
விஜய் மகேந்திரனுடைய கதைப்பிரதிகள் நகரத்தின் வாதைகளையும், உள்ளியக்கங்களையும் அதிகமாக அக்கரைகொண்டிருப்பதாக வாசிக்கப்பட்டது. இது நகரம் என்ற பொதுப்புத்தியை முன்னிறுத்திய கூற்று என்பதை இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அந்த வகையான வாசிப்பக்கள் காலாவதியாகிப்போன ஒன்று. நகரங்கள் எல்லாம் ஒரேமாதிரி இருப்பதில்லை. என்பது அடி;படையான ஒரு புரிதல் என்றவகையில் இவரின் கதைப்பிரதிகளை நகரம் சார்ந்த புரிதல்களை ஏற்றி வாசிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவரின் கதைசொல்லலில் பயன்படுத்தப்படும் மொழி மிக எளிமையானது. நாம் ஏலவே புரிந்துகொண்ட ஒன்றை நினைவூட்டவது போன்ற உயர்வை உடனடியாக பிறப்பிக்கக்கூடியது. ஒரு நதி இடைநடுவே தேங்கிவிடாமல் நகர்ந்து செல்லுவதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தும் எடுத்துரைப்பு. அடுத்தடுத்து கதைச்சம்பவங்களை உருவாக்கும் விதத்தில் அமையும் நேர்த்தியும், அதைக் கதையாடுவதில் உருவாகும் நேர்த்தியும் அலாதியான இன்பத்தை பிறப்பித்துக்கொண்டே செல்கிறது. கதை மனிதர்களை அதிகம் உரையாட வைக்காமலும், அவர்களுக்குள் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் வாசகர்களை முன்னிலையில் எதிர்கொள்வது போன்ற கதைசொல்லிகளையே இவரதுகதைகள் உருவாக்குகின்றன. அதனூடு கதை சொல்லிக்கான அடையாளம் துல்லியமாக கட்டமைக்கப்படுவதும், கதைமனிதர்கள் சில சொற்களாலும், சில சம்பவங்களாலும் மாத்திரமே அவர்களுக்கான அடையாளங்களை உருவாக்கும்படியான கதைச் சூழலை முன்வைப்பவை இவரின் கதைகள்.
இவரின் அதிகமான கதைகள் மரபான கதைசொல்லல் என்ற முறையில் பேசும் குரல்களைக் கொண்டிருக்கின்றன. மரபான கதைசொல்லல் உத்திகளால் கதைக்குள் மிக இலகுவாக நுழைந்துவிடும் வழிகளை உருவாக்க முயற்ச்சித்திருப்பது இவரின் கதைசொல்லல் தனித்துவத்தை முன்வைக்கிறது. அதேநேரம் கதைவரைதல் முறைமையில் கட்டமைக்கப்பட்ட கதைப்பிரதி ஒன்றும் இருக்கிறது.அந்தப்பிரதி இவரின் கதைசொல்லலின் அசாத்தியங்களை முயற்ச்சிக்கும் அவாவுதலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதாவது (ழெn கiஉவழைn) புனைவற்ற எழுத்து என நம்பப்படும் கடிதம் என்ற வடிவத்தில் புனைவுத்திகளை உருவாக்கி கதையை நிகழ்த்திக் காட்டும் செயற்பாட்டை கவனிக்கலாம்.தமிழில் கதைவரைபவர்கள் குறைவு என்பதால், கதைவரைதல் பரீட்ச்சயம் தமிழில் கவனத்தை பெறவில்லை.
கதைப்பிரதிகளுக்கு பலவகை வாசிப்புக்கள் சாத்தியம் என்பதாலும், குறித்த வாசிப்பு ஒன்றே பிரதியை அமைதிப்படுத்திவிடும் என்பதாலும் இவரின் கதைப்பிரதிகள் உருவாக்கும் பல இலக்கிய அரசியல் கதையாடல்களில் ஒன்றை மட்டும் வாசிப்பச்செய்ய விரும்புகிறேன்.
இவரின் கதைப்பிரதிகளினுள் நம்மை சந்திக்கும் மனிதர்களில் ஆண்கள் மிக முக்கியமானவர்களாக இருத்திவைக்கப்பட்டுள்ளார்கள்.கதைப்பிரதி கொண்டிருக்கும் இந்த அரசியல் விமர்சனத்தக்குரியது. பெண்கள் கதைப்பிரதி எங்கும் இரண்டாம் நிலையிலே நிறத்தப்படுகிறார்கள்.
சனிப்பெயர்ச்சி என்ற கதைப்பிரதியில், படித்த குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் விரிவுரையாளர் கதைசொல்லியாக உருவாக்கப்படுகிறார். அவர் குடும்பம் என்ற நிறுவனத்தை அனுசரித்து வாழ முயற்சிப்பவர். இது ஒரு உறவின் அடையாளம் தொடர்பான கதையாடலை முன்வைக்கும் பிரதி.நண்பனின் காதலிகள். கதைசொல்லியின் மனைவி,அம்மா போன்ற பெண்கள் கதையின் ஏதோ ஒரு வெளியில் நம்மை சந்திக்கிரார்கள். அம்மா என்ற பெண் பிற்போக்கானவளாகவும்,மனைவி என்ற பெண் சந்தேகம் நிறைந்தவளாகவும்,சில காதலிகள் என்ற பெண்கள் இன்னொருவரின் கணவனைக்கவரும் செயற்பாடுடையவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளார்கள். பெண் என்பது இப்படியான அடையளத்தை கொண்டவளாகவே இவரின் பிரதிகள் கதையாடலை முன்வைக்கின்றன.
இவரின் இருத்தலின் விதிகள் என்ற கதைப்பிரதியில், குறைந்த சம்பளத்தில் தொழில் புரிபவர் என்பதால் குடும்பம் என்ற நிறுவனம் தூரப்படுத்தும் ஒரு ஆண் கதைசொல்லியாக உருவாக்கப்படுகிறார். பொருளாதாரத்தை மய்யப்படுத்தி ஆண்களுடனான உறவை உருவாக்கும் ஒரு மோசமான பெண்ணை மனைவியாக உருவாக்குகிறது. சீரியல் பார்க்கும் கீழ்த்தரமான ரசனை அவருக்கு வழங்கப்படுகிறது. இப்படித்திணிக்கப்படும் அடையாளங்கள் நிரம்பிய கதை இது. இலக்கியச் செயற்பாட்டிற்கு எதிரான பெண்ணடையாளமும் அவளுக்கு வழங்கப்படுகிறது.
// நேரத்தோடு வீட்டுக்கு வாங்க// என்ற அழைப்பு எச்சரிக்கை செய்வதான கதையடலாக பிரதியில் செயற்படும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கதைசொல்லியை ஏமாத்துகிறார்.அதற்க்கான காரணத்தை ஆசிரியரின் மனைவி என்ற பெண்ணின்மீது திணிக்கிறது இந்தப்பிரதி.///நவீன இலக்கியப் புத்தகங்கள்// என்ற கருத்தாக்கம் இந்தப்பிரதியில் பேசும் குரல் இலக்கியம் ஒரு நிறுவனம் என்பதை பரிந்துரைக்கும் கதைச் சம்பவம்.
இவரின் சிரிப்பு என்ற கதைப்பிரதியில், தகுதி இருந்தும் வேலையின்றி அலையும் இளைஞன் கதை சொல்லியாக கட்டமைக்கப்படுகிறான்.கஞ்சா குடிப்பவர்களை ஒரு கேஸாக புரிந்துகொள்கிறான். தொழில் மற்றும் வசதிவாய்ப்பு இல்லாமையால் தன்னைப்பார்த்து முகத்தை சுழிக்கும் பக்கத்துவீட்டு பெண் உருவாக்கப்படுகிறாள். வசைபாடும் அம்மாவாக ஒரு பெண் வந்து போகிறாள். பலாத்காரமாக ஒரு பெண்ணை தனது ஆசைக்கிழத்தியாக்க அவாவும் கதைசொல்லி அப்பா என்ற ஆணை இரக்கமுள்ளவராகவும், புரிந்துகொள்ளக்கூடியவராகவும் உருவாக்கப்படுகிறார்.
இதுபோல்தான் மழை புயல் சின்னம் என்ற கதைப்பிரதியிலும் ஜெனீலா என்ற கதைப்பெண் கதைசொல்லியை ஏமாற்றுவதும்,வேறொருவரின் காதலியாக இருந்த சர்மிளா என்ற கதைப்பெண் ஒரு சில நிமிடங்களில் எதுவித அறிவிப்புக்களுமின்றி கதைசொல்லி என்ற ஆணை கட்டிப்பிடிக்கும் (ஒழுக்கமற்ற அல்லது பெண்ணே முதலில் ஆரம்பிப்பவள் என்ற கதை) பெண்ணாக உருவாக்கப்படுவதும் நடந்தேறுகிறது. அவைகள் போலவேதான் கடத்தல், போன்ற சமூகவிரோத செயற்பாடுகளாக நம்பப்படும் பொதுப்புத்தியை முஸ்லிம்கள்மீது திணிக்கும் சினமாக்கள் போல விஜய் மகேந்திரனின் கதைப் பிரதிகளும் பாவிக்கின்றன.
விஜய் மகேந்திரனின் கதைப் பிரதிகள், தமிழின் பொதுப்புத்தியில் அறியப்படும் உளவியல் மரபுகளில் கொண்டாடப்படும் அரசியல் தன்மைகளைக் கையேற்று,கதைப்பிரதிகளும் தமது கதையாடலை நிகழ்த்துகின்றன. பொதுப்புத்தியை புரிந்துகொள்ளும் வாசகர்களையும், அந்தக் கதையாடல்களை ஏற்று இன்பங்கொள்ளும் வாசகர்களையும் கவனத்தில்கொண்டு தமது கதையாடலை நிகழ்த்துகின்றன. சற்று வெளிப்படையாகவே ஆண்வாசகர்களை (தமிழில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களும் ஆண் வாசகர்களை கவனத்தில் கொண்டே எழுதப்படுகின்றன.) தமக்கான வாசக எல்லைக்குள் அழைக்கும் கதைக்குரலை உரத்துப்பேசுகிறது என்றும் சொல்லலாம்.
பெண்கள். கஞ்சாக்குடிப்பவர்கள்,தாதாக்களின் உருவாக்கம், மஸ்லிம்களின்மீது கட்டமைக்கப்படும் அடையளம் போன்றவை தமிழ் மொழியின் பொதுப்புத்தியில் எந்தவகையான புரிதலோடு(இழிவான) பராமரிக்கப்படுகிறதோ அந்தவகைச் சிந்தனைகளையே இவருடைய கதைப்பிரதிகள் கொண்டாடுகின்றன. இந்தப் புரிதலை ஏற்கும் அறிவியல்வெளியில் பெரிதும் கவனிக்கப்படக்கூடிய கதைப்பிரதிகள் இவருடையது. இந்தவகையில் அதிக வாசகப்பரப்பை உருவாக்கும் ஆற்றல் இவருடைய கதைகளுக்கு இருக்கின்றன.
பொதுப்புத்தியைப் பரிந்துரைக்கும் கதைகளுக்கும் குறித்த சமூகச் செயற்பாடு இருக்கிறது. அந்தவகைச் சமூகச் செயற்பாடுகள் அவசியம் எனில், இவருடைய கதைகளும் தமிழ் பரப்பில் மிக அவசியமானவையே. அதற்க்கு ஆற்றல்மிக்க பங்களிப்புக்களைச் செய்யக்கூடியவையே.
ஆனாலும். இவருடைய கதைப்பிரதிகளில் தமிழ் நாட்டின் பொதுப்பத்தியில் அதிகம் மதிக்கப்படும் இந்துத்துவ அரசியலின்பக்கம் சாய்வுடைய கதைச் சம்பவங்களோ, கதையாடல்களோ பிரதிக்குள் இல்hமலிருப்பது மிக முக்கியமான ஒரு விசயமாகவே எனக்குப்படுகிறது. மரபான பொதுப்புத்திக்கு சாய்வாக கதையாடலை முன்வைப்பதும்,அதற்க்கு எதிரான கலகங்களை எழுதுவதும் என இரண்டும் இலக்கியம் என்றுதான் பாவிக்கப்படுகிறது. ஆம் இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம். அது குறித்த ஒரு அரசியல் நோக்கத்தை பரிந்துரைக்கிறது. அந்த அரசியலின் பிரதிச் சாய்வுநிலையை வாசித்துக் காட்டுவதுதான் திறனாய்வு வாசிப்புப் பிரதி என்றால், இதுவும் கதைகள் பற்றிய ஒரு வாசிப்புப் பிரதிதான்.
நகரத்திற்கு வெளியே
சிறுகதை தொகுப்பு
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்.

Friday, April 2, 2010
எனது அடுத்த நாவல் ஊடுருவல்
நண்பர்களே உங்களுக்கு முதலில் நன்றி சொல்லுகிறேன்.எனது முதல் சிறுகதை தொகுப்பான நகரத்திற்கு வெளியேவை வெற்றிபெற வைத்ததற்கு.வெளிவந்த முன்று மாதங்களில் கணிசமான பிரதிகள் விற்று தீர்த்துள்ளன..உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்த ஊக்கத்தில் எனது நாவலை எழுத ஆரம்பித்துள்ளேன்.''ஊடுருவல்'' நாவலின் தலைப்பு.
நாவல் நடைபெறும் காலம் 1999 முதல் 2008 வரை.வாழ்வில் வெற்றிபெற துடிக்கும் இளம் தலை முறையின் கதை மட்டுமில்ல நகரத்தின் மாற்று பாதைகளும் ஒதுக்கப்பட்ட பெண்களும் கூட இதில் முக்கியம் இடம் பிடிக்கின்றனர்.சென்னையின் வேறு தரிசனத்தை நீங்கள் இதில் பார்க்கலாம்.துக்கத்தை மட்டுமில்லாமல் நகரத்தின் கொண்டடங்களையும் இதில் விவரித்திருக்கிறேன்.
இந்த நேரத்தில் என் தொகுப்பு பற்றி எழுதி கவனம் பெற செய்த நிலாரசிகன்,வா.மு.கோமு,உழவன்,பொன்.வாசுதேவன் ,ஆகிய நண்பர்களுக்கும்,மற்ற இணைய நண்பர்களுக்கும் நன்றி.
எழுதி முடித்ததும் சில பகுதிகளை வலைப்பூவில் வெளியிடுகிறேன்

Subscribe to:
Posts (Atom)