மனோவும் மதுரையில் ஒரு வருடம் தியாகராஜா கல்லூரியில் பி.காம் படித்தான். கல்லூரியில் சில பெண்கள் நட்புடன் அவனுடன் பழகிய காலம் அது. சக மாணவர்களிடம் இருந்து தனது வசதியின்மையால் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு இருந்தான். இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன் மதியக்காட்சிக்கு மாப்பிள்ளை விநாயகருக்கோ அல்லது பிரியா காம்ப்ளெக்ஸ் தியேட்டருக்கே பைக்கில் பறப்பார்கள். கோனார் மெஸ் சென்று, பிரியாணி சாப்பிடுவார்கள். இவனை எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு வகுப்பில் உட்காரும் சில மாணவர்களில் மனோவும் ஒருவன். அதுவும், மனோவின் அமைதியும் சில பெண்களுக்கு அவன் மெது ஒரு பரிவை ஏற்படுத்தியது. நெருங்கி வந்து பேசினார். தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கீதாவுக்கு இவனைப் பிடித்துப் போனது. அவர்கள் படம் போகும் பொது இவனையும் கூட்டிச் சென்றனர். மூன்று பெண்களுடன் சேர்ந்து படம் பார்த்ததே தியேட்டரில் உட்கார்ந்த போதும் மனோவுக்கு நம்ப முடியாமல் இருந்தது.
தெப்பக்குளம் ஸ்டாப்பில் பஸ் ஏறினால் ஒரு பாலம் ஏறி இறங்கினால் அம்பிகா தியேட்டர் வந்துவிடும்...சிலசமயம் மெதுவாக கல்லூரியில் இருந்து நடந்து கூட வந்துவிடுவான்..அம்பிகா காம்ப்ளக்ஸ் இல் இரண்டு தியேட்டர்கள் அம்பிகா ,முகாம்பிகா,என்று.புதிய திரைப்படங்களில் தரமானவை இவ்வற்றில் திரையிடப்படும் .ஹிட் ஆன நல்ல பாடல்கள் கொண்ட ஹிந்தி திரைப்படங்கள் கூட திரையிடுவார்கள்.குப்த் ரங்கீலா போன்ற படங்களை இங்குதான் பார்த்து ரசித்து இருக்கிறான்.மனோ.
அன்று கீதாவின் தோழிகளுடன் பார்த்த படம் வாலி.ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டாலும் சிம்ரனை இன்னொருமுறை பார்த்து ரசிக்க முடியும் என்ற ஆசையாலும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்களுடன் வந்தான்.இரண்டாவது முறை பார்த்த போதும் அவனுக்கு போரடிக்க வில்லை.கீதா வெகுவாக ரசித்து அந்த படத்தை பார்த்தாள்.கைதட்டினாள்,நகைசுவை காட்சிகளில் சிரித்தாள்.அஜித் அசடு வழியும் காட்சிகளில் ஐயோ பாவம் என்றாள்.ஒருகணத்தில் படம் பார்ப்பதை விட்டுவிட்டு கீதாவின் முக பாவங்களை ரசிக்க தொடங்கினான்.இடைவேளையின் போது அவளின் தோழிகள் எழுந்து வெளியே சென்றனர்.கீதா மனோவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு மாறினாள்.''படம் உனக்கு எப்படி இருக்கு'' என்றாள்.''ம்ம் நல்ல இருக்கு ,போனதே தெரியலை ,உனக்கு ஐஸ் கிரீம் எதுவும் வங்கி வரவா''''நீ போகவேணாம் அவுளுக வாங்கிட்டு வருவாளுக .ஏன் உனக்கு தம் எதாவது அடிக்கணுமா!!''என்றாள் கிண்டலுடன் .''இப்ப என்ன நான் போககூடாது உனக்கு கம்பனி கொடுக்கணும் ,சரி ''என்றான்.இருக்கையின்மேல் வைத்து இருந்த அவனது கையை தட்டி ரிலாக்ஸ் என்றாள்.அண்ணா நகரில் உள்ள கல்லூரிகளில் இருந்து கூட பையன்கள்,பெண்களுடன் வந்து இருந்தனர்.அந்த மதிய காட்சிக்கு.அவர்களும் ஏகோபித்த ஆதரவுடன் அந்த படம் ஓடிக்கொண்டு இருந்தது.ராஜியும் சுகந்தியும் ஆளுக்கு இரண்டு கோன் ஐஸ் க்ரீமை பிடித்த படி வந்தனர்.ஏய்,கீதா நாங்க அங்க கூட்டத்துல இடிபட்டு ஐஸ் க்ரிமை வாங்கிவந்த நீ ஜாலியா உட்கார்ந்து கடலை போடுறீயா...என்ற படியே ஆளுக்கு ஒரு ஐஸ் க்ரிமை கொடுத்தாள்.படம் தொடங்கியது..
சிம்ரன் அதிகபடியான கவர்ச்சியுடன் நடித்து இருந்த பாடலை திரையரங்கில் நிக்கி விட்டனர்.பெண்கள் வரத்து அதிகம் இருந்ததால்.அந்த பாடலை போட சொல்லி சிலர் விசில் அடித்து கலாட்டா செய்தனர்.மனோ கீதாவை பார்த்து முழித்தான் .
ஆப்ரடர் ரூம் நோக்கி கத்தினர்.திரையரங்கு ஆட்கள் டார்ச் அடித்தபடி உள்ளே நுழைந்தனர்.
''எவன்டா கத்தறது இஷ்டம் இருந்த பாரு இல்லாட்டி வெளியே போய்க்கோ..அந்த மாதிரி பாட்டு பாக்கிறவன் வேறு இடத்திற்கு போ..
என்று பதிலுக்கு பேசியவுடன் கொஞ்சம் அரங்கு அமைதியானது.அவர்கள் தலை மறைந்தவுடன்...
''அப்புறம் எதுக்கடா இந்த படத்தை உங்க .தியேட்டடரில் போடுறீங்க ,சாமி படம் மட்டும் ஓட்ட வேண்டியதுதானா..? என்று ஒரு குரல் கேட்டது.கீதா மனோவிடம் காதோரம் கிசுகிசுத்தாள் .
''அந்த பாட்டுக்காக இன்னொரு தியேட்டர் போவியா?என்று.
ஏற்கனவே படத்தை இன்னொரு தியேட்டர் இல் பார்த்துவிட்டதாகவும் ''உனக்ககதான் வந்தேன் ''என்றும் மனோ கூற கீதாவின் முகத்தில் வெட்கமும் பூரிப்பும் கலந்த புன்னகை தோன்றியது.
கீதாவை நினைத்தவன் மெல்ல உறங்க முயன்றான்.மணி இரண்டை கடந்து இருந்தது.அந்த விபத்தால் கல்லூரி படிப்பு மட்டும் முடிவுக்கு வராமல் போயிருந்தால் வாழ்க்கை வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.என நினைத்தவன் அப்படியே உறங்கி போனான்.
காலையில் வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தவுடன் தான் காலையாகி விட்டதை உணர்ந்தான்.அடித்துப்போட்டது போல உடம்பில் வலி இருந்தது.நேற்று என்னோவோ சம்பந்தமில்லாமல் பேசி அளுவுக்கு அதிகமாக ஊற்றிகொடுத்து விட்டான் பாலா.கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்தான்.தங்கை காபியை மேஜை மேல் வைத்தவள் தட்டு போட்டு மூடிவிட்டு சென்றுவிட்டாள்.கொஞ்ச நாட்களாகவே வீட்டில் ஒருவித வெறுமை நிலவுகிறது.பேச்சு சத்தம் பெருமளவு குறைந்து இருக்கிறது.இந்த வீட்டை இரண்டு மதங்களில் காலி செய்ய சொல்லி இருகின்றனர்.வீட்டை விட்டு போனவள் சும்மா போக வில்லை குடும்ப மானத்தை போதுமான அளவு வாங்கி விட்டு போய்விட்டாள்.எதிர்படுபவர்களின் கேள்விக்கு பதில் சொல்லியே ஓய்ந்து போயிருந்தான் மனோ.இன்று ஞாயிற்று கிழமை விடுமுறைதான்.மட்டனோ சிக்கனோ வாங்கி கொடுத்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும்.என்ன கஷ்டம் வந்தாலும் இதில் மட்டும் நாம் குடும்பத்தாருக்கு குறை இருக்க கூடாது என நினைத்தான்.இன்று அசைவம் வாங்கி கொடுக்கவில்லை என்றால் அம்மா வரும் உறவினர்கள் இடமெல்லாம் புலம்பி தீர்த்து விடுவாள். பத்தாதற்கு தங்கை வேறு கணவன் வீட்டில் இருந்து ஒருவாரமாக இங்கு இருக்கிறாள்.இவள் ஏதோ அவனிடம் சொல்லபோக சோறு கூட ஒழுங்கா போடாத வீட்டிற்கு ஏன் போற?என்று நொட்டை சொளுவன்.முகம் கழுவியவன் சிக்கன் கடைக்கு கிளம்பினான்.கிழே படியிறங்கியபோது வீடு ஓனரின் மனைவி வாசலில் நின்று இருந்தாள்.இவன் அவளை பார்க்காத வாறு கடக்க முயன்றான்.சொல்லிவைத்தார் போல அவள் பேச ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment