Monday, April 6, 2015
Sunday, February 1, 2015
செவ்வி இலக்கிய அமைப்பு
செவ்வி - அறிவிப்பு
------------------------------
நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து "செவ்வி" என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளோம். "செவ்வி" அமைப்பின் சார்பாக அவ்வளவாக கவனம் பெறாத ஆனால் சிறந்த நூல்களை ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்கிறோம். பெரும்பாலும் இளம் எழுத்தாளர்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு நூல்கள் அல்லது தமிழில் அவ்வளவாக கவனம்பெறாத உலக புனைவு எழுத்தாளர்களை மட்டும் முதன்மைப்படுத்த போகிறோம்.
முதல் கூட்டம் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும். முதல் கூட்டத்தில் மூன்று நூல்களை பற்றி வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். மூன்று நூல்களை பற்றி சிறு அறிமுகத்தை இங்கு தருகிறோம்.

நாவல்:- சூர்ய ரத்னாவின் "பரமபதம்" என்ற நாவல் - அறிமுகப்படுத்தி பேசுபவர்
விஜய் மகேந்திரன். சிங்கப்பூரின் பப் கலாச்சாரம் பற்றியும் ஆண் பெண்
உறவின் நுட்பங்களையும் விவரிக்கிறது இந்த நாவல்
கட்டுரைத்தொகுப்பு:- வெ. நீலகண்டனின் "எமக்குத் தொழில் எழுத்து" - அறிமுகப்படுத்தி கே.என் .சிவராமன். எழுத்தை தொழிலாக கொள்ளாமல் உயிராக நினைக்கும் எழுத்தாளர்களை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக் Stefan Zweig எழுதிய Royal Game என்ற நாவல் தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிப்பெயர்ப்பில்ராஜ விளையாட்டு என்று வெளிவந்துள்ளது. - அறிமுகப்படுத்தி பேசுபவர் விநாயக முருகன். அரசியல் ,அதிகாரம் நெருக்கடிக்குள்ளாகும்போது ஒரு மனிதன் எப்படி தனிமைச்சிறையில் தனக்கான ஒரு புனைவு உலகை சித்தரித்து கற்பனையில் வாழுகிறான் என்பதையும், புனைவுக்கும், அசலுக்குமான போராட்டங்களையும் நுட்பமாக சித்தரித்து எழுதப்பட்ட ஒரு நவீனத்துவ நாவல்.
செவ்வி இலக்கிய அமைப்பு
இடம் டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் 8/2/2015 ஞாயிறு நேரம் மாலை 4 மணி
அமைப்பை துவக்கி
வாழ்த்துரை
திரு. ரவி சுப்பிரமணியன்,கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
திரு இந்திரன்,கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்
அறிமுக உரை
விஜய் மகேந்திரன் -விநாயக முருகன்
விவாதிக்கப்படும் நூல்கள்
பரமபதம் - நாவல் - சூர்ய ரத்னா (தங்கமீன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விஜய் மகேந்திரன்
எமக்குத் தொழில் எழுத்து -கட்டுரைகள் -வெ.நீலகண்டன்(சூரியன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் - கே.என்.சிவராமன்
ராஜ விளையாட்டு -மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக்(புதுப்புனல் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விநாயக முருகன்
நூல் அறிமுகம் முடிந்தவுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு - மு.வேடியப்பன்

Monday, January 12, 2015
அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்
நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின்
மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத
ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும்
வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின்
டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட
பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன்
வந்திருக்கிறார்.
வனதேவதைக்கதைகள்,
மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய
முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது
இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய
மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி,
ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள்
நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள்
நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில்
வாசகனை பிரமிக்க வைக்கிறது.
எனக்கு
இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக்
கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள்
பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.
அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக
இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக்
கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை
எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து
தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்
படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்' என்று
கவித்துவத்துடன் ஆரம்பித்து மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது
என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும்
இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக
முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல
இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.
"கேவல்"
என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல
எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது.
இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு
கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.
பாலியல்
அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி
யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி"
சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள்
முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு
பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை
தெளிவாக காட்டுகிறது.
தொகுப்பில்
முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப்
பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது
பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும்
வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு.
அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி.
"தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.
"குறளியின்
டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண்,
குன்றாத இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும்
இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை
நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.
"ஜூலியட்சி"
தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில்
அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய
உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு
அனுபவங்கள் உண்டு.
அதை
இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி
இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய
வாழ்த்துகள்.
நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.htmlSaturday, January 10, 2015
சாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள்
எனது நண்பரும், தமிழின் தற்கால கவிஞர்களில் முக்கியமானவருமான இளங்கோ
கிருஷ்ணனுக்கு சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின்சார்பில் 2014 ஆம்
ஆண்டுக்கான சிறந்த இளம் எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. நடுவர்களாக
இருந்து ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் மிகச்சரியாக தேர்வு
செய்துள்ளனர்.
எனக்கு தெரிந்து 2005 ஆம் ஆண்டு முதல் இளங்கோவின் கவிதைகளை சிற்றிதழ்களில் படிக்க ஆரம்பித்தேன். இன்று பெரிய இதழ்கள், இணைய இதழ்கள் என்று பரவலாக இயங்கிவருகிறார் இளங்கோ. கவிதைகள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் சென்று இலக்கிய கூட்டங்களில் விமர்சன உரைகளும் ஆற்றியுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது அவசியம். நாவல், சிறுகதை, கவிதை, பத்திகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்கள் பற்றி இளங்கோ எழுதியுள்ளவை இலக்கிய ரசனையையும், புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாசகர்களுக்கு உதவும். இளங்கோ கிருஷ்ணனின் கவிதை குறுங்கதைகள் அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் அதிகம் கவர்பவை. அவர் கவிதை தவிர்த்து சிறுகதைகளும் வருங்காலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இளங்கோவின் கவிதைகள் உரைநடைக்கு அருகில் இயங்குபவை. அடர்த்தியான கவித்துவ மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதிகாரத்தை எண்ணி பகடி செய்யும் கவிதைகளும் அவரிடம் அதிகமுண்டு. அவரது காயச்சண்டிகை தொகுப்பில் உள்ள ஹிட்லர் கவிதை இதற்கு சிறந்த உதாரணம். ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஹிட்லரின் முகம் ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும் போது பார்த்தவுடன் சிரிக்கத்தூண்டும் சாப்ளினின் முகமாக மாறிப்போகிறது. நான் தான் ஹிட்லர் என்று சொல்லியும் கேளாமல் மக்களும், குழந்தைகளும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கேலியும்,கிண்டலும் தாங்க முடியாமல் ஹிட்லர் ஓட ஆரம்பிக்கிறார். அப்போது அவரது நடை சாப்ளினைப் போலவே மாறிப்போயிருந்தது என கவிதையை முடிக்கிறார் இளங்கோ. ஒரு அதி நவீனக் கதை போல தோன்றும் விஷயத்தை அற்புதமான கவிதையாகவே எழுதியிருக்கிறார். பட்சியன் சரிதம் தொகுப்பில் உள்ள முதல் கவிதையான 'ஆர்க்கிமிடிஸ் பூமியை படித்துக்கொண்டிருக்கிறான்' சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதை. நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும், அரசியல் வன்முறைகளையும் நினைவுப்படுத்தி படிப்பவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. இளங்கோவின் கவிதைகளில் தத்துவங்களும் அதிகமாக தென்படும். சமகால கவிஞர்களில் பலவேறு தத்துவ சிக்கல்கள், பின்நவீனத்துவ பகடி, கவிதையை வழக்கமான தொனியில் இருந்து கலைத்துப்போட்டு புதிய மொழியில் கவிதையை எழுப்ப முனைவது போன்ற சிறந்த நவீனக் கவிஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இவருக்கு இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், வாழ்க்கை பாடங்களும் அதற்கு துணை நிற்கிறது.' ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும்? கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன் கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும்? உன் இனம் நசுக்கப்படுவதை, உன் கடவுள்கள் கொல்லப்படுவதை , உன் நிலம் சிதைக்கபடுவதை ,போ போய் வேலையைப் பார், பொருளீட்டு, புணர், சிரி,மரி கவிதையாம் மயிராம்...என்று எழுத முடிகிறது.
இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ள இளங்கோ விரைவில் தனது நாவலையும் முடித்து வெளியிடுவார் என்று நினைக்கிறேன். பொருளாதார நிர்பந்தங்கள் அற்ற வாழ்வு அவருக்கு அமைந்தால் அவரது எழுத்துக்களின் அளவையும் கூட்டும். தற்போது சென்னையில் பத்திரிக்கை பணியை துவங்கியுள்ள இளங்கோ கிருஷ்ணனுக்கு இது மிகவும் உகந்த நேரம். ஆட்டத்தின் விதிமுறைகள் அவருக்கு தெரியும். ஆடுகளமும் தயாராக உள்ளது. அவர் சிறப்புடன் ஆடி இதில் ஜெயிக்க வேண்டும். இந்த உரைக்கு தார்மீக பலமாக இருந்த நண்பர்கள் கவின் மலர், சாம்ராஜ் இருவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, July 9, 2014
அவன் அவள் மற்றும் மணற்குன்று
ஜப்பானிய எழுத்தாளரான கோபோ ஏப் எழுதிய'' மணற்குன்று பெண் ''உலகம் முழுவதும் பிரபலமான செவ்வியல்தன்மையுள்ள நாவல் .தற்போது அதன் தமிழ் பதிப்பை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது .தொடர்ந்து உலகமொழிகளில் உள்ள செவ்வியல் நாவல்களை தரமாக வெளியிட்டு வருகிறது.இப்பதிப்பகம்.அவ்வகையி
தற்சமயம் தமிழில் வெளிவரும் சில நாவல்களுக்கே தமிழ்-தமிழ் மொழிப்பெயர்ப்பு வேண்டியிருக்கிறது.ஆனால் ஜப்பானிய நாவலான மணற்குன்று பெண்ணை அதன் கவித்துவம் குறையாமல் சரளமான மொழிநடையில் மொழிப்பெயர்த்து உள்ளார்.மிகுந்த உயிரோட்டத்துடன் மொழிநடை உள்ளதால் எவ்வித தங்கு தடையின்றி நாவலை படிக்க முடிகிறது.இத்தகைய மொழியாக்கம் செய்துள்ள விஜயபத்மா பாராட்டிற்கு உரியவர்.
நாவலாசிரியர் கோபோ ஏப் அடிப்படையில் மருத்துவப்பட்டதாரி.நாவல் ,திரைப்படம் ,நாடகம் ,இசை ,புகைப்படம் என்று பன்முகத்தளத்தில் இயங்கியவர். 1962ல் வெளியான இந்நாவல் 'ஹிரோஷி தோரிகாஹா' எனும் ஜப்பானிய திரைப்பட இயக்குனரால் படமாக எடுக்கப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.20 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் பென்சில்வேனிய பல்கலைகழகத்தின் ஜப்பானிய மொழி ஆராய்ச்சித்துறைக்கான பேராசிரியர் 'ஈடேல் சாண்டர்ஸ்' சால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஜப்பானின் மிகப்பின்தங்கிய கடற்கரையோரம் மணற்குன்றுகள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு பூச்சியியல் ஆய்வாளன் புதுவிதமான பூச்சிகள் கிடைக்கும் என ஆர்வத்துடன் செல்கிறான்.அந்த கிராமம் அளிக்கும் வியப்பில் களத்தை மறந்து கடைசி பேருந்தை தவறவிடுகிறான் .அந்த கிராமத்திலேயே இரவு தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அங்கு இருக்கும் முதியவன் ஒருவனின் உதவியால்ஒரு பெரிய மணற்குன்றுக்கு கிழே உள்ள வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.ஒரு இரவைக் கழித்துவிட்டு அந்த கிராமத்தில் இருந்து சென்று விடுவதுதான் ஆய்வாளனின் திட்டம். காலத்தின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது.அவன் தங்க வைக்கப்படும் மணற்குன்றுக்கு அடியில் உள்ள வீட்டிலேயே நிரந்தரமாக சிறைவைத்து விடுகிறார்கள் அந்த கிராமவாசிகள் .அவனால் அங்கிருந்து வெளியேற முடியாதபடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சூழ்நிலைக்கைதியாக இருக்க நேருகிறது.அன்றாடம் அவன் மணல் தூர் வாரும் பணியை செய்யவேண்டும்.அப்போது தான் அவனுக்கு உணவும் ,தண்ணீரும் வழங்கப்படும்.வேலை செய்யவில்லை எனில் தண்ணிர் கூட தராமல் அவனை கொடுமைப்படுத்துவார்கள்.அவன் தங்கவைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் ஏற்கனவே முப்பது வயது மதிக்கத்தக்க விதவைப்பெண் ஒருத்தியும் ஏற்கனவே வாழ்ந்துவருகிறாள்.கணவனையும் ,தனது ஒரே மகளையும் ஒரு மணல் புயலில் இழந்தவள் அவள்.அவள் வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிர்கதியான நிலையில் இருக்கிறாள். மணற்குன்றுகளை தூர் வாரும் பணிகளையும் ,அவள் குடியிருக்கும் வீட்டில் அன்றாடம் படியும் மணற்துகள்களையும் அகற்றுவதிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறாள்.
அவனும் அவளும் இனி அந்த சிறிய வீட்டினுள் தான் வாழ்ந்தாக வேண்டும்.அவனுக்கு அவள் செய்யும் அன்பான பணிவிடைகளும் ,அருமையான இயற்கை சமையலும் திருப்தியடையச் செய்கிறது.இருப்பினும் அவன் தன்னை முற்றிலும் சுகந்திரம் இழந்தவனாக உணர்கிறான். பலமுறை தப்பிக்க முயல்கிறான்..ஆனால் அந்த கிராமத்தின் சூழலியல் மாறுபடும்,பரந்து கிடக்கும் மணற்குன்றுகளும் ,உக்கிரமான வெயிலும் அவனது முயற்சிகளை நிலைகுலையச் செய்கிறது.ஒரு வெம்மையான நாளில் அவனுக்கும் அவளுக்கும் உள்ள ஈர்ப்பு இறுகி உடல்ரீதியான பங்களிப்பை அவனுக்கு அளிக்கிறாள்.ஆனாலும் அவன் தொடர்ந்து தப்பிப்பதற்கு காரணத்தைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். எளிய சிரிப்புடன் ஒரு நாள் அவனிடம் சொல்கிறாள்.''இங்கிருந்து யாராலும் தப்பிக்க முடியாது,
தப்பித்து யாராலும் போகவும் முடியவில்லை ''என இது அவனை மேலும் அமைதியிழக்கச் செய்கிறது.நாவலின் இறுதியில் அவள் கர்ப்பம் அடைகிறாள்..அவன் அவளுடனே வாழ முடிவு செய்ய ,கிராமவாசிகள் அவளை பிரசவத்திற்கு அருகே உள்ள ஒரு நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.தனிமையில் அவனை நினைத்து அவன் ஏங்குவதோடு நாவல் முடிகிறது.
மணற்குன்றுகள் நிறைந்த கிராமத்தை ,இயற்கையின் சீற்றத்தை ,சுழற்றி அடிக்கும் மணல்துகள்களை ,மாறுபடும் காலநிலை மாற்றத்தை மிகுந்த துல்லியத்துடன் சித்தரிக்கிறார் கோபோ ஏப்.இருத்தல் சார்ந்த பல கேள்விகளையும் ,ஆண் பெண் உறவின் உச்சபட்ச நுட்பங்களையும் ,சூழலுக்கு ஏற்ப மாறும் மனிதமனகளையும் வெகுநுட்பமாக முன்வைக்கிறார் ஏப்.
கோபோ ஏப்பின் மொழி எளிமையோடு அடர்த்தியான மௌனங்களை கொண்டிருக்கிறது .மணல் குறித்து அவர் விவரிக்கும் இடங்கள் அசாத்தியமான கவித்துவ மொழியை கொண்டிருக்கிறது.பெண் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தாலும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் அவள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறாள்,காலம்கா
அவ்வகையில் இந்நாவல் பல தீர்க்கமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.இதில் வரும் சம்பவங்கள் நம் மனத்தை கனக்கச் செய்து இருத்தலியல் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுகிறது.
''மணற்குன்று பெண் ''தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான செவ்வியல் நாவல் ஆகும்.
மணற்குன்று பெண்
பக்:351 | விலை:220/-
வெளியீடு:எதிர் வெளியீடு.
கோபோ ஏப்
தமிழில்: ஜி.விஜயபத்மா
பக்:351 | விலை:220/-
வெளியீடு:எதிர் வெளியீடு.
நன்றி தீராநதி ஜூலை 2014
Tuesday, July 1, 2014
அதிகாரத்திற்கு எதிராக செலுத்தப்படும் அழுத்துவிசை
''கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைகளுக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென''
வளரும் நாடுகளின் ஆயுதப்போட்டியை ,போரின் போது அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்படுவதன் வலிமிகு உணர்வை இந்தக்கவிதையில் நுட்பமாக முன்வைக்கிறார்.இவரது கவிதையின் பாடுபொருட்கள் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது ,நிலங்கள் தவறான முறையில் கையகப்படுத்தப் படுவது ,கனிமவளங்கள் திருட்டுப்போவது ,கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரல் ,கருத்துரிமையை சிதைக்கும் காரணிகள் என பின் காலனிய நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அத்தனை அபத்தங்களையும் பகடி செய்வதாக அமைந்திருக்கிறது.
சூழலியல் சார்ந்து மிகுந்த அக்கறை கொண்டவாராக தெரிகிறார் நரன்.'' மஞ்சள்நிற கோதுமை'' என்ற கவிதையில்
''இவ்விகார குழந்தையை
நேற்று அணுக்கழிவாகக் கூடத்தான் கண்டேன்.
இனிப்பு பாலைத்தான் இன்று தயிராய் அருந்தினீர் புளிப்பு மனிதரே
போபாலில் ஓராயிரம் மண்டைஓட்டை அடுக்கி வைத்தீரே
விருந்து ஓடும்.தென்கோடிக்கரைக்கு சாக்குப்பையோடு.''
சூழலியல் சார்ந்த பயத்தையும் அவரது அக்கறையை வலுவாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.இன்னொரு கவிதையான ''பக்க விளைவுகள் '' கருத்து சுகந்திரம் அரசு இயந்திரத்தால் நசுக்கப்படுவதை மிகவும் பகடி செய்யும் கவிதையாக இருக்கிறது.
''இந்நிலத்திற்கும் அதன் மேல் வாழும் மக்களுக்கும்
வழங்கவென சில ஆன்டி பயாடிக் மாத்திரைகள்
பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கும்
எதிராய் வேலை செய்யுமாம்
ஆலோசனையும் மாத்திரையும் ஆரம்ப சுகாதார மையங்களில்
இலவசமாக அரசு வழங்குகிறது ''
என்று ஆரம்பிக்கும் கவிதை ''பக்க விளைவுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யுமாம் ''என பகடியுடன் முடிகிறது.பின் நவீனத்துவ கவிதைகளுக்கு இருக்கும் பொதுவான கூரான பகடியை (satire),அதிகாரமையங்களை கேள்விக்குள்ளாக்க பயன்படுத்துகிறார் நரன் .இவ்வகை பகடியின் உச்சமாக ''2 பாயிண்ட் தீவிரம் ''கவிதை அமைந்திருக்கிறது.இக்கவிதையில் வரும் திரு.எம் அடையாளச்சிக்கலினால் அல்லல்படும் நபராகவே இருக்கிறார்.என்னவாவது செய்து புகழ் பெற வேண்டும் எனநினைக்கும் பொதுப்புத்தியினரின் அடையாளச்சிக்கலை பகடி செய்வதாக கவிதை உள்ளது.
''விற்பனைப் பிரதிநிதி நண்பனொருவன்
தன் கழுத்து டையினாலேயே கழுதை இறுக்கி
சுய கொலை செய்து பிரபலமானதை
செய்திதாள்களில் படித்த நாள் முதல்
தானும் டை அணிய பழகிக் கொண்டிருக்கிறார்.''
என்ற வரிகளில்
பொதுப்புத்தியினரின்''போலச்செய்
''அங்கே பாருங்கள் ,சில கரையான்கள் அவள் உதட்டிலிருந்து
அழுகையை மட்டும்தனியே பிரித்துப் போய்
உண்டு கொண்டிருக்கின்றன ''
இவ்வரிகளில் இருப்பது ஓவிய விவரிப்பு முறை கவித்துவ கட்டமைப்புக்களே ,இவ்வகைகட்டமைப்புகளை தொகுப்பில் பலவேறு இடங்களில் சிறப்பாய் பயன்படுத்தி இருக்கிறார் நரன். அதே போல ''லீ கூப்பர் ஷூ ''என்னும் படிமத்தை கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலாக பயன்படுத்தி இருக்கிறார் தொகுப்பில் சில இடங்களில்.உலகமய மாதலின் விளைவாக நடைபெறும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளர்களை கிட்டத்தட்ட அடிமை முறையில் வேலை வாங்கி விட்டு அதை நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாக அரசு நம்பிக்கை தருவதையே ''இங்கே ''என்னும் கவிதை கலைத்துப் போட்டு மறு பரிசிலனை செய்ய சொல்கிறது.ஆற்று மணலும் மலைகளும் டெண்டர் விடப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிரான அரசியலை ''காதை மூடிக் கொள் '' கவிதை முன் வைக்கிறது.
இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.
தனித்துவமான மொழி கட்டமைப்பு,அபூர்வமான பகடிகள் ,புதிய பாடுப் பொருட்கள் ,என நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சிறப்பாக வந்துள்ளது.கொம்பு பதிப்பகம்,புத்தகத்தை அழகான முறையில் பொருத்தமான ஓவியங்களுடன் கொண்டுவந்து இருக்கிறது.கவிதைகளின் உள்ளடக்கத்தை இவ் ஓவியங்கள் இன்னும் ஒருபடி தீவிரப்படுத்துகின்றன.
நன்றி தீராநதி ஜூலை 2014
கொம்பு பதிப்பகம்,
எண் 11.பப்ளிக் ஆபிஸ் ரோடு ,
தேவி திரையரங்கு அருகில்,நாகப்பட்டினம் 611001
போன் 9952326742
விலை ரூபாய் 60
Friday, June 6, 2014
இயற்கையை கண்டடையும் கவிதைகள் – நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”
பெருகிவரும் கவிதைத் தொகுப்புகளில் எது நல்ல தொகுப்பு எனத் தேடிப்பிடிப்பதற்குள் பெரும் ஆயாசம் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ்க்கவிதைகள் ஆயிரக்கணக்கானவை ஆண்டுதோறும் சிற்றிதழ்கள் தவிர வார,மாத இதழ்களிலும் வெளியாகின்றன.இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 30 கவிதைத்தொகுப்புகள் தீவிர இலக்கியதளத்தில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிக்க கிடைத்த தொகுப்புதான் நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”. இவர் ஏற்கனவே “வெயில் தின்ற மழை”,”மீன்கள் துள்ளும் நிசி” என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டு கவனம் பெற்றவர்.
இவரது முந்தைய தொகுப்பான “மீன்கள் துள்ளும் நிசி”யில் பல கவிதைகளை அடர்த்தியான படிம மொழியில் எழுதியிருந்தார். அதில் ஜூலி என்னும் சிறுமியை உருவகமாக கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் பெரும்பான்மையான கவனத்திற்குள்ளானது.
“கடலில் வசிக்கும் பறவை” கவிதைத் தொகுப்பு முந்தையை தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிய மொழியில் குறைந்த வரிகளில் மிக அடர்த்தியான உருவகங்களுடன் பன்முக அர்த்தங்களை பேசுவதாக இருக்கிறது.
இத்தொகுப்பு முழுவதும் இயற்கை பொருட்களான நீர்நிலைகள்,பறவைகள்,மறைந்து போன விலங்குகள் என இயற்கை புறகாரணிகளால் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதை எவ்வித பிரச்சாரமுமின்றி படிமமொழியில் சிறந்த உருவகங்களைப் பயன்படுத்தி இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதியிருக்கிறார் நிலாரசிகன். “ஜென்” மனநிலையும் இவர் கவிதைகளில் தென்படுவதாக தோன்றினாலும் அதுவும் இவரது புதுமையான உருவகத்தால் தனக்கென்று ஒரு தனி இயல்பை உருவாக்கி தனித்து நிற்கிறது. இதை இவரது தனிச்சிறப்பென்று கூறுவேன்.
“கிணற்றுக்குள் மறைந்துகொள்வது
எவ்வளவு எளிதானது.
அதற்கு முன் செய்யவேண்டியது
ஒன்றே ஒன்றுதான்.
பழுத்த இலையாக மாறும்
வித்தை தெரிந்திருக்கவேண்டும்.“
ஜென் மனநிலையை கட்டாயமாக கவிதைக்குள் புகுத்துவதில்லை. கோட்பாடாக விளக்குவதில்லை.வாழ்ந்து காட்டுவது அதைக் கடைபிடிப்பது எனும் முடிவில் இருப்பவர்களால்தான் இத்தகைய கவிதைகளை எழுத முடியும். அதனால்தான் நிலாரசிகனால்,
“கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் ஈரச்சிறகின் மேலமர்ந்து
இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.“
என மிகுபுனைவில் கரையும் மனம் வாய்த்திருக்கிறது. கவிதையின் மறை பொருளாக அவர் அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தைப் பற்றிய இரண்டு கவிதைகளில் மிக அழகாய் எழுதிச்செல்கிறார்.
“மிக அழகான தீவு.
அதன் கரைகளை தின்று தீர்க்கும்
மீன்களிடையே நான்.
எவ்வளவு நீந்தியும் மாறவில்லை
கடல் நீலமும்
வான் நீலமும்.
”
இவ்வாறு அஃறிணைப் பொருட்கள் மூலம் நடப்பு காலத்தில் அழியும் இயற்கையை அற்புதமாக காட்சிப்படுத்துகிறார் நிலாரசிகன். அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்கள் பற்றி இன்னொரு கவிதையும் சிறப்பான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதன் சிலவரிகள்,
“மிக அருகிலிருக்கிறது
தீவு.
அங்கே குறைந்துகொண்டே இருக்கிறார்கள்
குழந்தைகள்”
என ஒரு கவிஞனின் ஏக்கம் அழிதல் குறித்து மிக நுட்பமாய் வந்திருக்கிறது. கடினமான சொற்களை பயன்படுத்தாமல் முடிந்தவரை இலகுவான மொழியில் அனைத்து கவிதைகளையும் எழுதியிருப்பது தொகுப்பின் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கூட்டி நல்லதொரு மனநிலையைத் தருகிறது. சிறு சொற்கள் மூலம் பன்முக அர்த்தம் கொடுக்கும் ஒரு பரப்பை உருவாக்கும் வித்தை எல்லோர்க்கும் அமைவதல்ல. கவிதையின் பாடுபொருட்கள் இயற்கையை கண்டடைவதிலும், இயற்கை அழிவதை மீள் உருவாக்கம் செய்து கவிதைக்குள் கொண்டு வருவதிலும் பெரிதும் வெற்றி அடைந்திருக்கிறது நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”.
நவீன வாழ்க்கையின் மூலம் நாம் இழந்துபோன சுத்தமான காற்று, நீர், அதனால் மறையும் சிறு உயிரினங்கள் என்றுமே கவிஞனை அலைக்கழிப்பவை.
“கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன் பிள்ளைகள்.
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது வேகமாய்”
என்று பதைப்புடன் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
சூழலியல் மாசுபடுவதற்கு மறைமுக காரணிகளாக இருப்பவர்களை குற்றவுணர்வு அடையவைக்கும் கவிதையாகவும் இது இருக்கிறது. கூடங்குளம் அணுமின்நிலைய தடுப்புப் போராட்டம், திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகள் நதி சென்று சேருவதால் நீராதாரம் பாதிக்கப்படுவது தொடர்பான நிகழ்வுகளை நினைவுப்படுத்தி சூழலியலுக்கு பலமான ஓர் ஆதரவுக் குரலை இவரின் பல கவிதைகள் அடங்கிய தொனியில் கொடுக்கின்றன.
இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே சிட்டுக்குருவி,தவிட்டுக்குருவி,தூக்கணாங் குருவி போன்றவற்றைக் காண முடியும். இப்போது சென்னையை தாண்டியுள்ள சிறுகிராமங்களில் கூட இக்குருவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அலைபேசி கதிர்வீச்சின் பெருக்கம் குருவி இனத்தையே அரிய இனமாக்கிவிட்டது.இத்தகைய அரிய பறவையினங்கள் அழிவதை மிகச்சிறிய கவிதையின் மூலம் அற்புதமாகச் சொல்கிறார் நிலாரசிகன்.
“கடலருகே விரிந்திருக்கும்
பாறைகளில் வந்து விழுகிறது
கடைசிப் பறவை.
மனிதர்கள் மனிதர்களென்று
முனகியபடி.
”
இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்களின் அழிதலுக்கு மனிதனே காரணம் என்று பறவை முனகுவதாக இக்கவிதை இருக்கிறது.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த இக்கவிதைத் தொகுப்பு இலக்கிய வாசகர்களின் மத்தியில் நல்ல பெயரையே நிலாரசிகனுக்கு கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் தரமான கவிதைகளை,கவிதையின் உச்ச சாத்தியங்களை இனிவரும் தொகுப்புகளில் நிலாரசிகனிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
-
கடலில் வசிக்கும் பறவை. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம் – 635 112. விலை.ரூ.60)
நன்றி மலைகள் .காம்
Subscribe to:
Posts (Atom)

.jpg)