Thursday, July 29, 2010

சாருவால் வந்த நற்பலன்கள்


சாருவால் வந்த நற்பலன்கள்

பொதுவாக என் மனைவி எனது எந்த எழுத்துகளையும் படித்ததில்லை.திருமணமான புதிதில் ராமநேசன் எனது நண்பன் கதையை மட்டும் படித்து இருக்கிறாள்.பொதுவாக அவளுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை.அப்புறம் அவள் ஒரு mnc கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டதால் நேரம் கிடைப்பதும் அரிதாகி விட்டது.எனது சம்பாத்தியத்தில் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என அவளுக்கு நன்கு தெரிந்து விட்டது.நானும் மர்மமாக இலக்கியம் ,எழுத்து என்று என்னால் முடிந்த வரை இயங்கி கொண்டு இருக்கிறேன்.இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காக சம்பாதிக்கும் வழியை பார்க்குமாறு பலமுறை என்னை எச்சரித்தும் கேட்கவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் எப்படியோ கூகுளில் எனது ப்ளோக்கை கண்டுபிடித்து உடன்வேளைபார்க்கும் தோழிகளிடம் காட்டும்போதுதான் சாருவுக்கு நான் எழுதிய பதிலை படித்து விட்டாள். வீடு வந்தவள் என்னை விசாரிக்க தொடங்கினாள்.
உண்மையை சொல்லு சாயங்காலம் நீ வேலைக்கு போறியா இல்லை அவர் சொல்ற மாதிரி உயிர்மை ஆபீஸ் போய் கதை அடிச்சிட்டு இருக்கியா?இது முதல் கேள்வி.இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் நான் அல்லாடிவிட்டேன்.அவர் சும்மா ஜாலிக்கு சொல்றார் என்றேன்.அவர் பெரிய எழுத்தாளர் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்றாள்.
அடுத்த கேள்வி டென் டி மற்றும் பெண்கள் பற்றியது...உனக்கு இன்னும் அந்த ஆசையெல்லாம் இருக்கா,பிச்சு போடுவேன்.
அப்புறம் அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு உன்னையல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?எழுதுறத விட்டு தொலைனாலும் கேட்கமட்டேன்னு சொல்ற?.நான் வாய் திறக்கவே முடியவில்லை.....

வீட்டில் இப்படி என்றால் நண்பர் கே.ஜே.அசோக்குமார் புனேயில் இருந்து போன் போட்டு சாயங்காலம் ஆனால் உயிர்ம்மையில் போய் சிரிச்சிட்டு இருக்கிங்கலாமே ? ஏன் என்று கேட்டு துயரபடுதுகிறார்.

ஏதோ துக்கம் விசாரிப்பது போல் சில நண்பர்கள் இதை எல்லாம் பாசிடிவாக எடுத்துகங்க ?என்று ஆறுதல் சொல்கின்றனர்...
இதற்கு நடுவே எனக்கு உண்மையான மன ஆறுதலாக இருந்த நண்பர்கள் இரண்டு பேர்.மாமல்லன் கார்த்தி,ஷங்கர்ராமசுப்ரமணியன்,
இருவரும்தான் தற்சமயம் விடுமுறை நாட்களில் அவர்கள் அறையில் இடம் அளித்து எனது புலம்பல்களை கேட்டு வருகின்றனர்.. அவர்களுக்கு நன்றி....

நண்பர் மாமல்லன் கார்த்தி சமீபமாக எனக்கும் நண்பர்கள் அபிலாஷ்,செல்வ.புவியரசன் எல்லோரையும் அழைத்து நல்ல விருந்து ஒன்றை அளித்தார்...மனம் விட்டு பலநாட்களுக்கு பிறகு பேசினோம்.
அவரது அறை குறித்து இங்கே சொல்ல வேண்டும்.அது ஒரு பின்நவினத்துவ அறை.முன்றாவது மாடியில் பாதி மொட்டைமாடி,பாதிஅறை. பத்துக்கு பதினைந்து இருக்கும் அவ்வறையில் குளிர்சாதன வசதி,மங்கலான விளக்குகள் ,ஸ்லொ ராக் இசை,கணினி வசதி என சூட் ரூம் போல வைத்துள்ளார் மாமல்லன்.நண்பர்களுக்காக தான் வாழ்நாளில் பாதியை அவர் செலவு செய்து இருக்க வேண்டும்.

என்ன சாருவை பற்றி பேச வந்து அவர் போலவே பேச ஆரம்பிக்கிறேன்.....இப்போதைக்கு விடைபெறுகிறேன் அதுதான் நல்லது எனக்கும் உங்களுக்கும்.....

3 comments:

  1. நன்றி விஜய்..
    நல்ல வேளையாக என் மனைவி ஊரில் இல்லை.. அவள் இருக்கும் இடத்தில இணைய வசதியில்லை.. அவள் வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும்..இல்லையென்றால் என் கதி என்ன?
    "அது என்ன பின்நவீனத்துவ அறை? அய்யோ! இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதே..அந்த அறையை ஆபீஸ் என்று தானே சொன்னாய்.. என்னை ஏமாற்றிவிட்டாய் !!..நண்பர்களுக்காக பாதி வாழ்வை செலவழித்தாயாமே?.. எனக்காக என்ன செய்தாய்? " என்று உங்கள் கதை ஒன்றில் வரும் ஆர்.சிவராஜா'வின் மனைவியைப் போல் சாமி ஆடியிருப்பாள்... தப்பித்தேன்..:-)

    ReplyDelete
  2. சாரு பிசைந்திருக்கிறீர்கள் மகேந்திரன்.

    ReplyDelete
  3. ஏதோ அவரால முடிஞ்சத (ஒரு குடும்பத்துல குண்டு வைக்கிறத) செஞ்சுருக்காரு...நீங்க ரொம்ப நல்லவரு சாரு...

    //ஏதோ துக்கம் விசாரிப்பது போல் சில நண்பர்கள் இதை எல்லாம் பாசிடிவாக எடுத்துகங்க ?என்று ஆறுதல் சொல்கின்றனர்...//
    விஜய், உங்கள விசாரிச்ச எல்லாருமே, ஒன்னு உங்க நலம் விரும்பியாவோ இல்ல சாருவ நல்லா தெரிஞ்சவங்களாவோ இருப்பாங்க. இதுக்காக நீங்க வருத்தப்படுறீங்களா? (மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு).

    ReplyDelete