Friday, January 28, 2011

இருள் விலகும் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)


நன்றி உயிரோசை இணைய இதழ்
இன்று எழுதிவரும் இளம் சிறுகதையாளர்களை மையப்படுத்தி, கொண்டு வந்த தொகுப்பு இது.

இத்தொகுப்பின் முக்கியச் சிறப்பு என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் இத்தொகுப்புக்கெனவே எழுதப்பட்ட சிறுகதைகள். வேறு எந்தப் பத்திரிகைகளிலும் (இணையத் தளங்களில்கூட) வெளிவராதவை.

வடிவம், உள்ளடக்கம், கதை சொல்லல் முறை, ஆகிய அனைத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகள் இக்கதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வா.மு.கோமு, சுதேசமித்திரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ்.செந்தில்குமார், பாலை நிலவன், லஷ்மி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய் மகேந்திரன், புகழ், என்.ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

படைப்பாளிகளின் பிரபலத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் படைப்புகளுக்கே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.

இக்காலகட்டத்தின் சிறந்த பதிவாகவும், சிறுகதையாளர்கள் எதிர்காலத்தில் சிறுகதைகளின் திசைகளை தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதையும் இத்தொகுப்பைப் படிக்கும் நீங்கள் உணர்வீர்கள்.

இத்தகைய புதிய முயற்சிகள் தொடர்வது தமிழுக்கு நல்லது.

பாண்டியன்

நூல் : இருள் விலகும் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

தொகுப்பாசிரியர் : விஜய் மகேந்திரன்

வெளியீடு : சோழன் படைப்பகம்,
5-டி, பொன்னம்பலம் சாலை,
கே,கே.நகர், சென்னை-78.
கைப்பேசி: 9444302967, 9940165767

பக்கங்கள் : 144 விலை : ரூ.90

3 comments:

  1. இத்தகைய புதிய முயற்சிகள் தொடர்வது தமிழுக்கு நல்லது.//
    தொடருங்கள் எங்கள் வாழ்த்து என்றும் உண்டு

    ReplyDelete
  2. இது இருள்வெளிச் சித்திரங்கள் மாதிரி இருக்காதில்ல..?

    ReplyDelete