Thursday, April 29, 2010

ரமேஷ் பிரேதன் என்ற எனது நண்பர்

ரமேஷ் பிரேதன் அவர்களை 2006 இல் ஒரு உயிர்மை கூட்டத்தில் சந்தித்தேன்.அதற்கு முன்

அவரும் பிரேமும் இணைந்து எழுதிய பல புத்தகங்களை வாசித்து இருக்கிறேன்.சந்தித்த முதல் கணமே என்னை நண்பராக வரித்து கொண்டார்.அவர் pondicherry இல் வசித்து வந்ததால் பெரும்பாலும் போனில் பேசி கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.

போன் உரையாடல் பலமணி நேரமெல்லாம் நீண்டு இருக்கிறது.என்னுடைய ஆரம்பகட்ட சந்தேகங்கள் பலவற்றை நிவர்த்தி செய்தவர் அவரே.பின் நவீனத்துவம் குறித்த எந்த கேள்விகளுக்கும் தெளிவாகவும் சுவாரஸ்யமாவும் பதில் கூறுவார்.நமது காலத்தின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் .

2007 இல் அவரும் அவது நண்பரான பிரேமும் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
மிகுந்த தனிமையில் இருந்த அவருக்கு அடிக்கடி போன் செய்தும்,உற்சாகம் ஊட்டியும்,பேசுவேன்.மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அந்த பாதிப்பிலிருந்து மீள அவரை மீண்டும் எழுதுமாறு தூண்டினேன்.அவரும் சிறு துயில்
கலைந்து கவிதைகளாக எழுத ஆரம்பித்தார்.தெளிவான மொழியும் ,வினோதமான அனுபவங்களும் கொண்டு எழுத பட்ட அக்கவிதைகள் வாசகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டன.அக்கவிதைகளை விரைவில் தொகுப்பாகும் படி கூறினேன்.அவர் ராஜமார்தண்டனிடம் கொடுத்தார் .அவர் காலச்சுவடு பதிப்பகத்துக்கு சிபாரிசு செய்தார்.

காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பு இவ்வாறு வெளிவந்தது.தொகுப்பில் எனக்கும் நன்றி கூறியிருந்தார்.அவரது பெருந்தன்மை அது.தொகுப்பு இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது
.
அதன் பின் சாராயக்கடை என்ற தொகுப்பை ,உயிர்மை வெளியிட்டது.எனது நண்பன் அடேலேறுவுக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.இளம் வாசகர்களை அந்த தொகுப்பு கவர்தது.

சமீபமாக என்னிடம் போனில் பேசுகையில் சுஜாதா விருதுக்கு காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பை அனுப்பி இருப்பதாக கூறினார்.விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் கூறினேன்.

சில நாட்கள் முன்பு மதியம் மனுஷ்ய புத்திரனிடம் இருந்து போன் வந்தது.ரமேஷ் போன் நம்பர் இருந்தால் கொடுக்கும்படி.அப்போதே எனது மனதில் ஒரு மின்னல் விருது கிடைத்து இருக்கும் என.அவர் மாலையில் எனக்கு போன் செய்து தகவலை உறுதிபடுத்தினார்.அவர் தனித்து எழுத ஆரம்பித்த பின் பெறும் முதல் விருது இது.ஏதோ நானே விருது பெற்றது போல அக மகிழ்த்தேன்.அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

சரியான வேலையின்றி மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்தி வரும் அவருக்கு நிச்சயம் .இந்த விருது.ஒரு நல்ல தொடக்கத்தை வேலையிலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
.

1 comment:

  1. வாழ்த்துக்கள் உங்களுக்கும் ரமேஷ் பிரேதனுக்கும்.ஆமாம் சாரயக்கடை தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எப்போதோ கூறியதை இன்னும் நினைவில் வைத்து எழுதியது என்னை பரவசபடுத்தியது. நன்றிங்க விஜய்

    ReplyDelete