Monday, April 19, 2010

லீனா மணிமேகலை கூட்டம் தொடர்பான பதிவு





லீனா மணிமேகலையின் உலகி அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பை தடை செய்யுமாறு இந்து மக்கள் கட்சி காவல் துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.மற்றும் வினவு இணைய தளம் லீனாவை பற்றி எழுதிவரும் தனி நபர் தாக்குதல்களை கண்டித்தும் எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்று 15 4 2010 அன்று எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் அ. மார்க்ஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.கிட்டத்தட்ட ஐம்பதற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தீவிர இலக்கிய தளம் முன்னெப்போதும் இல்லது அளவு கலாச்சார ஒடுக்குமுறைகளையும்,கண்காணிப்புகளையும் சந்தித்து வருகிறது.
லீனா தொடர்த்து கவிதை பரப்பில் இயங்கி வருபவர்.சமுக அக்கறையுள்ள குறும் படங்களையும் இயக்கி உள்ளார்.அவரது கவிதைகள் ஆபாசமாக உள்ளன என இதற்கு முன்னரும் சர்ச்சை எழுந்து உள்ளது .ஆனால் இந்தமுறை அளவு கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவதுறு செய்யுமளவிற்கு போய்விட்டது.
குட்டிரேவதி,சல்மா,சுகிர்தராணி, போன்றவர்களும் இந்த மாதிரி சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறனர்.


கலாச்சார காவலர்கள் சொல்லுவது கவிதைகளில் யோனி.முலை,குறி போன்ற ஆபாச சொற்கள் உள்ளன.என்று. சங்ககால பெண் கவிகளில் இருந்து இன்று வரை உடலுறவு குறித்து எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன
நவீன பெண் கவிகளின் மீது அடிக்கடி இந்த வன்முறை ஏய்யபடுகிறது.சமுக பொது புத்தியில் உரைத்துள்ள கற்பிதங்களை நீக்குவது அவ்வளவு எளிது இல்லை.
இந்த கூட்டத்தில் பேசுமாறு அழைத்த போது நான் ஏற்று கொண்டேன்
அதன் பின் பலவிதமான போன் அழைப்புகள் வந்தன நண்பர்களிடம் இருந்து.ஒரு நண்பர் பேச வீடுல உட்கார்து எதாவது கதை எழுதுங்கள் ஏன் இப்படி போய் வம்புல involve ஆகிறேன் என்றார்.அப்படடிதன் நமது பொதுபுத்தி சொல்கிறது

.இன்னோறவர் கூட்டத்தில் ம.க.இக.வினர் பிரச்னை செய்ய வாய்ப்புண்டு என்றார்.சிலர் இந்த மாதிரி வம்பு எதாவது வருமென்றே வரவில்லை என நினைக்கிறன்..கூட்டம் நடந்த அன்று சற்று தாமதமாக தான் சென்றேன்..கூட்டம் நடந்த இடமே ஏதோ போர்களம் போல காட்சியளித்தது.ம.க.இக. தோழர் ஒருவர் மைக் பிடித்து பேசி கொண்டு இருந்தார். வேறு கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என ஒரு நிமிடம் தோன்றியது.சூழல் அந்த அளவு அன்னியமாக இருந்தது.வாசலில் இரண்டு மூன்று போலீசார் நின்றனர்.சார் இரு குலுக்கலாம் அடித்து கொள்ளும் நிலையில் இருக்கிறது என்றார் ஒருவர்.
அ.மார்க்ஸ் மிக பொறுமையாக அவர்களை சமாதான படுத்த முயற்சி செய்தார்.ம.க .இக மற்றும் புரட்சி பெண்கள் அமைப்பினர் ஒரு குழுவாக வந்திருந்து லீனா எழுதிய கவிதைகளுக்கு விளக்கம் கேட்டு கூச்சல் போட்டு கொண்டு இருந்தனர்.கூட்டத்தை நடத்த விடுமாறு பலரும் கேட்டு பயனில்லை


.ஒரு மணிநேரம் இந்த நிலையே நீடித்தது.வந்து இருந்த சிலர் இனிமேல் கூட்டம் நடக்காது என்று கிளம்பி போக ஆரம்பித்தனர்.வாய்ச்சண்டை கைகலப்பாக மாறுவது மாதிரியான நிலை இருந்தது.ஒருவழியாக அ. மார்க்ஸ் அவர்களை அனுப்பிவைத்தார். ஒருவர் சேர் மேல் நின்று லீனாவுக்கு எதிராக கோசம் போட்டார்.

வசுமித்ரா மைக் பிடித்து அமைதி தோழர் என்று கேட்டு கொண்டு இருந்தார்.அவர்கள் கலைந்து சென்ற போது ஒன்றரை மணி நேரம் கழிந்து விட்டது..கூட்டம் ஆரம்பமான உடனே கூச்சல் செய்து நிறுத்தினர் என அருகே இருந்த நண்பர் ஒருவர் கூறினார்.
மாலை ஏழு மணிக்குத்தான் முறையாக ஆரம்பித்தது.
ராஜன் குறை,வ.ஐ.ச.ஜெயபாலன்,ஓவியா,சுகுணா திவாகர்,இசை,கலை,மணிமொழி ,கே.குணசேகரன்,லதா ராமகிருஷ்ணன்,வசுமித்ரா,மு.ஹரிக்ரிஷ்ணன்,லக்ஷ்மி மணிவண்ணன்.யவனிகா ஸ்ரீராம்,யூமா.வாசுகி,நிர்மலா கொற்றவை,மற்றும் பல நண்பர்கள் கலாச்சார ஒடுக்குமுறை குறித்தும்,சமூகத்தின் பொதுபுத்தியில் படிந்த்ருக்கும் பிற்போக்குதனம் பற்றியும்,பேசினார்.



மணல் வீடு ஹரி கிருஷ்ணன் லீனா இன்னும் எவ்வளவு கொச்சையாக கவிதை எழுதினாலும், வெளியேடுவேன்,அவருக்கு அவ்வாறு எழுத சுகந்திரம் உண்டு என பேசினார்.
லதா ராமகிருஷ்ணன் பெண்களின் அந்தரங்கமான கவிதை மொழி லீனாவிடம் வெளிப்பட்டு இருக்கிறது.அதற்காக அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்து கேள்விகள் எழுப்புவது அநாகரிகம் என்றார்.


கலை இதழின் ஆசிரியர் மணிமொழி ஐந்து வருடங்களுக்கு முன்னர் முப்பது பெண் கவிகளின் கவிதைகளை தொகுப்பாக கொண்டு வந்தா தகவும் இப்போது அவர்களில் இரண்டு பேர் மட்டும் தான் எழுதி கொண்டு இருக்கின்றனர்.மற்றவர்கள் இவ்விதமான அடக்கு முறைகளுக்கு பயந்து எழுதுவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.
அ.மார்க்ஸ் பேசும் போது இவ்வளவு எதிர்ப்புகள் வரும் என அறிந்துதான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார்.



ஆபாச திரைப்படங்கள் தொலைகாட்சி முலம் நமது வீட்டின் வரவேற்பறைக்கு வரும்போது,ஆயிரம் பிரதிகள் அச்சு அடிக்கும் ஒரு இலக்கிய புத்தகத்தை ஆபாசம் என கூறி தடை செய முயற்சிப்பது அபத்தமானது என நான் பேசினேன்
இவ்விதமான கலாச்சர ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இளம்படைப்பாளிகள் திரள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டேன்.
இறுதியாக லீனாவின் கணவர் ஜெரால்டு பேசும் போது,சினிமாவை விட பல மட்டரகமான செயல்கள் இலக்கிய உலகில் நடப்பதாக குறிப்பிட்டார்.
எவ்விதமான எதிர்ப்புகள் வந்தாலும் லீனாவுக்கு துணை நிற்பேன் என உறுதி பட கூறினார்..



.

No comments:

Post a Comment