Saturday, March 3, 2012

பெருவனத்தின் வேட்கை




காமப்பெருவனத்தின் இலையுதிர்காலம்
முட்களுக்கும் சருகுகளுக்குமிடையே
படர்ந்து கிடக்கிறது எனது சரீரம்.
உள்நுழைந்து வெளிவர
ஒரு பாதை கொடு!
வேண்டாம் வேண்டாம்
அது கூட தேவை இல்லை
கொஞ்சம் உமிழ் நீர் இருந்தால் கொடு
உயிர்வாழ்ந்து கொள்கிறேன்..