வெளிவரக் காத்திருக்கும் எழுத்தாளர், நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களின் நாவல் "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்"... சில நாட்களுக்கு முன்பு எனக்கு அனுப்பியிருந்தார். சமூகத்தின் வெளிவராத பக்கங்களைத் தொட்டிருந்தார்... அது... ஆசைகள் எதிர்பார்ப்புகள் நடைபெறாத போது, கைவிடப்படுதல் நடக்கிறது. சில நேரங்களில் ஒரு நாடே மக்களை கைவிட்டு விடுவதும் உண்டு... சிறுவர்கள், வயது மீறிய ஒருவருடன் தகாத காரியங்களில் சேர்ந்து ஈடுபடுவது என்பதும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலை தான் இந்த நாவலில் வரும் சிறுவன் மணி போல... சிவாவின் கொலை முயற்சிக்கு அவன் மனசாட்சியே தடையாயிருக்கும் என்று சிறுவன் மணியையும், போதையையும் துணைக்கு அழைத்து, அந்த செயலை திட்டமிடுவது, கைவிடப்பட்டவர்கள் வரிசையில் சேர ஒத்தி பார்க்கும் ஒரு செயல் தான்.. செயலுக்கு ஒருவனின் மனமே தடையாயிருந்தால்...? தண்டனை நிச்சயம். அதை தான் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களின் இந்த சிறிய பதிவு கோடிட்டு காட்டுகிறது... அதே போல் சமூகத்தின் உயரத்தில் பதவியில் அவர்கள் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் கூட இருந்தாலும்... மறைமுகமாக கொடுஞ்செயல் புரியும் தயங்க மாட்டார்கள்... என்பது போன்ற கசப்பான உண்மைகளை கூண்டில் ஏற்றி பேச வைத்து இருக்கிறார்... இயல்பாக உயிரோட்டமான வார்த்தைகளை பேச வைத்து இருக்கிறார்... பின்னுரையில், என் எழுத்துக்களில் துயரம் அதிகம் படிந்த நாவல் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்... துயரம் அதிகம் எழுத்தில் படிந்திருக்கிறது என்றால், மக்களையும், சமூகத்தையும் அதிகம் படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்... இந்த நேரத்தை உங்களுக்கு வழங்கி சிந்திக்க தூண்டிய கொரானாவுக்கு நன்றி சொல்லுங்கள்... இந்த நாவல் தங்களின் "கடல்" பதிப்பகத்தின் மூலமாக வருவதாக அறிந்தேன்... அதற்கும் வாழ்த்துகள் . "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்"உங்களை கைவிடாது... உயர்ந்த, உன்னத இடம் தொடவும் வாழ்த்துகள் விஜய் மகேந்திரன்.... GA. சிவசுந்தர், ஒளிப்பதிவாளர் கைவிடப்பட்டவர்களின் கூடாரம் (நாவல்) விஜய் மகேந்திரன் பக்கங்கள் 130 விலை ரூ 160 கடல் பதிப்பக வெளியீடு முதல் பதிப்பு ஜூன் 2021
|
Friday, June 25, 2021
கைவிடப்பட்டவர்களின் கூடாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment