Tuesday, February 23, 2010

வாமு கோமு எனது தொகுப்பிற்கு எழுதிய விமர்சன பதிவு

http://vaamukomu.blogspot.com/2010/02/blog-post_22.html
விஜய் மகேந்திரனின் முதல் சிறுகதைத்தொகுப்பு பத்துகதைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. எனது மண்பூதம் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்த சமயத்தில் படிக்கிறமாதிரி யார் இப்போ எழுதறாங்க கோமு? திரும்பத் திரும்ப படிச்சாலும் உங்களோட கதைகள் சலிக்கவே இல்லை என்று பேசி நணபரானவர் விஜய் மகேந்திரன். பார்த்து பழகு விஷம் அது என்று பெருசு எச்சரிக்கை செய்தது ! இப்போது பெருசுக்கு நாந்தான் விஷம் என்று புரிந்து இருக்கும் . இலக்கிய சூழலில் யார்தான் விஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எல்லோரிடமும் விஷம் இருக்கிறது! யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.அடுத்த நாள் உயிருடன் இருப்போமா மாட்டோமா? என்று உறுதியின்மையில் இருக்கவே, இந்த சூழலில் சண்டைகள் சர்ச்சைகள் !

நகரத்திற்க்கு வெளியே தொகுப்பில் இருக்கும் ஊர்நலன் என்ற‌
சிறுகதை இதெ கருத்தைத்தான் முன் வைக்கிறது, நாயக பிம்பம் வில்லனாகி நாட்டாமையாகி அழிவைத் தேடிக்கொள்கிறது. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் சிறுகதையில் கண்களை இழந்த பெரியவர் கருப்பய்யா தன் பேத்தி ஓடிப்போய்விட்டாள் என்றதும் கிளம்பும் வேகம்.. வெற்றி பெறட்டுமே? என்று நம்மை முன்பே யோசிக்க வைக்கிறது! ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தோற்றுப்போகிறார். வாழ்க்கை எந்த நேரங்களிலும் வெற்றியையே தந்து கொண்டிருப்பதுமில்லை. தொகுப்பில் முதல் கதையாக சனிப்பெயர்ச்சி கதை இடம்பெற்றுள்ளது. இது உயிர் எழுத்து இதழில் வந்த சமயமே எல்லோராலும் பாராட்டப்பட்ட கதை! கதைகளை எனது அறையை பார்ப்பதற்க்கு துயரம் கூடுவதாக உள்ளது என்று நேராகவே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அந்த கூறல் முறையில் தங்குதடையே ஏற்ப்படுவது இல்லை. தொகுப்பில் நகரத்திற்க்கு வெளியே சிறந்த கதையாக இருக்கிறது! கதை சமகாலத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது, வாசிப்போர் சூரிய பிரகாஷாக இருக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ! ஆசியா மேன்சன் , அடைபடும் காற்று என்கிற கதைகள் இரண்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அது சொல்லப்பட்ட முறையில் கோளாறாகக் கூட இருக்கலாம். மழைபுயல்சின்னம் அகநாழிகை இதழில் வந்தது. இதழில் படிக்கும்போதே சென்னை சூழலையும் காதல் என்ற சொல் நகரங்களில் கற்பழிக்கப்படுவதும் .. இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் ? இப்படியேதான் வாழ்ந்து தீரவேண்டுமா ? என்றெல்லாம் தோன்றியது.

வாழப்பழகிக் கொண்டவர்களுக்கு வருத்தங்கள் பெரிய விஷயங்கள் இல்லைதான் என்பதை அழகாகச் சொன்ன படைப்பு. ராமநேசன் என்கிற கதை நண்பனைப்பற்றிய தகவலில் இருக்கிறது, பின் அட்டையில் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப்பிறழ்வை உருவாக்குபவை. என்கிற வாசகம் பயமுறுத்தினாலும் நகரங்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு இந்த தொகுப்பு அவசியமாகப்படுகிறது!

பாக்கியம் சங்கர் இந்த தொகுப்பு பற்றி என்னிடம் பேசுகையில் சாருவாகன்,ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் வாழ்வின் தரிசனங்களை தம் எழுத்தில் பதிய வைத்தது போல் விஜயும் வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். வசவச கசகசவென மொழியைத் திருகி பிசைந்து கொண்டு இருந்த திருச்செந்தாழை, லஷ்மிசரவணகுமார்,எஸ் செந்தில்குமார் சிறுகதைகளுக்குள் நுழையவே அவ்வளவு சங்கடம் பிறந்துவிடுகிறது! தான் எழுதிய கதைகளை வாசிக்க வைத்த சாமார்த்தியமே இத்தொகுப்பின் வெற்றி என்கிறார். தொடர்ந்து மேலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்றெ குறிப்பிட்டார்.

இந்த தொகுப்பின் வெற்றியை இங்கேயிருந்தே பாட்டிலை நீட்டி சியர்ஸை சொல்லி தனியாக நாளை கொண்டாட வேணும்.தொடர்ந்து இயங்குவது சிரமமான இந்த சூழலில் மிக முக்கியம் நண்பரே ! உங்கள் நாவல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் !

நகரத்திற்கு வெளியே -விஜய்மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம் விலை 50.00

6 comments:

  1. வாழ்த்துகள் விஜய் மகேந்திரன்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் விஜய் மகேந்திரன்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் விஜய் மகேந்திரன். அந்த "பெருசு" யார்? :)

    ReplyDelete
  4. சியர்ஸ்.....ஸ்ரேயாக்கு இந்த பொய்தவம் அனுப்பிட்டீகளா?

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே ,இலக்கிய மும்முர்த்திகளில் ஒருவர் தான் அந்த பெருசு.இப்போது என்னை பற்றிய நிலைப்பாடு அவரிடம் மாறி இருக்கும் என நம்புகிறேன்.
    பொதுவாக சக எழுத்தளர்களின் படைப்புகளை பற்றி பேசவே மாட்டார்கள்.கோமு எழுதிருப்பது அவரின் பெருந்தன்மை மற்றும் அவரது தீவிர இலக்கிய ஆர்வத்தை காட்டுகிறது.

    ReplyDelete
  6. நண்பா அருமையான தொகுப்பு. கோமு பெருந்தன்மை..அவரது இலக்கிய ஆர்வத்தின் பொருட்டே அமைந்தது மட்டுமல்ல. அனைவரும் படைப்பு வெளியில் சமம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete