Monday, July 26, 2010
சாரு நிவேதிதாவின் சான்றிதழ்
சாரு நிவேதிதாவின் சான்றிதழ்.
''இந்த இட்த்தில் எனக்கு விஜய் மகேந்திரன் என்ற நண்பரின் பெயர் ஞாபகம் வருகிறது. அவருடைய ’நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதையைக் கூட இலக்கியம் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டுக் குழந்தை ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டு வந்து உங்களிடம் காண்பித்தால் அதை வாங்கி “வான் கோவைச் நீ அவமானப்படுத்தி விட்டாய்” என்று சொல்லி குப்பைக் கூடையிலா போடுவீர்கள்? அந்த மாதிரி சிறுகதைகள் அவை. இது பற்றி விஜய் மகேந்திரனை பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இந்தக் கிண்டலை மற்றவர்களாக இருந்தால் அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொண்டு என்னைப் பகைவனாக நினைத்துத் தூக்கம் வராமல் அவதிப்பட்டிருப்பார்கள். இருந்தாலும் விஜய் மகேந்திரன் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறார். காரணம் என்ன? அவர் ஒரு டாக்டர். இளைஞர். ஏன் அவர் மாலை நேரங்களில் பெண்களை ஒதுக்கிக் கொண்டு டென்.டி போன்ற ப்ப்களில் ஒதுங்காமல் என்னையும் ஹமீதையும் வந்து பார்க்கிறார்? இலக்கியம் என்ற விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதல். அதனால்தான் நானும் ஹமீதும் எவ்வளவு கிண்டல் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து நிற்கிறார். என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
மேற்கண்ட பத்தி சாரு ப்ளோகில் அவர் என்னை பற்றி எழுதியது .பொதுவா எந்த இலக்கிய அரசியல் மற்றும் அக்கபோர்களில் நான் கலந்து கொள்ள விருப்பம் அற்றவன்.மேற்கண்ட பத்தியை முன்னிட்டு நிறைய நண்பர்கள் நான் சாருவுக்கு பதில் சொல்லி எழுத வேண்டும் என போன் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பதில் சொல்லுவதே வேலையாக போய் விட்டது.
அதற்கான விளக்கத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..சாரு என்னை நேரடியாக கிண்டல் செய்து ஒருபோதும் பேசியது இல்லை.என் கதைகள் குறித்து ஒருபோதும் அவரிடம் ஒருபோதும் உரையாடியது இல்லை.மாலை வேளைகளில் நான் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறேன்...மனுஷ்ய புத்திரனை சனி,அல்லது ஞாயிறு தான் சந்திப்பேன்.அவரது வேலைபளு அப்படி.டென் டி பப்ப்களில் ஒதுங்க கூடிய அளவில் எனக்கு வசதி இல்லை.அல்லது ஸ்பான்சர்களும் இல்லை.அன்றாடம் எட்டுமணி நேரம் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை மற்றும் எழுத்து பணிகளை செய்து வருபவன் நான்.
அப்புறம் யாருடைய சான்றிதழ் பெறுவதற்காகவும் நான் எழுதுவது இல்லை.அதே போல் சாரு கடந்த சில வருடங்களாக யாரையும் பாராட்டி எழுதியதும் இல்லை.மனுஷ்யபுத்திரனை நான் ஒரு வாசகனாக இருந்த காலத்தில் இருந்து அறிவேன்...அவர் ஒரு போதும் என் மனம் புண்படுமாறு என் கதைகள் குறித்து எந்த அபிப்ராயமும் சொன்னதில்லை...
சாரு அவர் என்னை கிண்டல் செய்து வந்ததாக குறிப்பிடுகிறார்.எழுத்தை விட்டு விலகி குடும்ப பிரச்சனைகள் சிலவற்றில் அல்லாடி இருந்த போது 2007 இல் எனக்கு போதிய மன தெம்பையும் தைரியத்தையும் அளித்து எழுத சொன்னது மனுஷ்ய புத்திரன்தான்.எனது முதல் தொகுப்பை சிறப்பான முறையில் வெளியிட்டு இன்று நாலு பேர் அறிய காரணமாகவும் இருந்தவரை இப்படி என்னை கிண்டல் செய்தார் என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது.அல்லது இதுதான் வேலையா?அவருக்கு ஆயிரம் பணிகள் இருக்கிறது .
புத்தக கண்காட்சியில் எனது புத்தகத்தை ஆர்வத்தோடு இரண்டு இளம்பெண்கள் வாங்கி போனதாக தெரிவித்து ஊக்கம் அளித்தவர் சாரு...தொடர்ந்து எழுதுமாறும் விகடன் போன்ற வெகு ஜன இதழ்களில் கூட பங்களிக்குமாறும் சொன்னார்.இது ஜனவரி 2010 இல்.உண்மை இப்படி இருக்க இதற்கு என்ன பதில் சொல்லுவது.
கடைசியில்
என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் எழுதிக்கொண்டு இருக்கிறான்.
என்.எஸ்.மாதவனின் ஹிக்விட்டா போன்ற ஒருகதையை நான் எழுதிவிட்டால் என்னோடைய எழுத்து பயணத்தை நிறுத்திவிட கூடும்...நண்பர்களே இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்....
பின்குறிப்பு
கடந்த சனி கிழமை காலையில் சாரு என்னிடம்தான் போன் செய்து எனது தொகுப்பின் பேரை கேட்டார்.மாலையில் எழுதிவிட்டார்.இரண்டுக்கும் நடுவே அவர் கூர்க் வேறு சென்றுகொண்டு இருந்தார்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
சாரு மட்டுமல்ல,, எந்தப் பிரபலங்களின் சேறும் சந்தனமும் உங்களை அண்ட விடாதீர் விஜய்.நாம் விரும்புவதை, நம்மை பாதிப்பதை மட்டும் எழுதினால் போதும் என்ற நிலையில் தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteஎந்தப் படைப்பும் இலக்கியமாவது நம் கையில் இல்லை.படிக்கும் வாசகனின் மனத்தில் இருக்கிறது.
இது போன்ற சாருவின் பேச்சுக்களை பெரிதாக்கத் தேவையில்லை விஜய். அம்மா என்ற பெயரில் ஒரு இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது தெரிந்திருக்கும். அதில் தை 2001 இதழில் நேர்காணல் ஒன்றில் "திருவாளர் சுஜாதாவிடம் இருந்து கூட ஒரு நல்ல க்தை கிடைக்கலாம்" என்று சொன்ன அதே சாருதான் இம் முறை சுஜாதா நினைவு பரிசல்கள் வழங்குவதிலும் பேசினார்.... அவர் பேசியதில் சுஜாதா பற்றி எப்படி உணர்ச்சி வசப்பட்டார் பாருங்கள்....
ReplyDeleteநடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் சாருவின் மேல் எனக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய கருத்துக்களை புறந்தள்ளுங்கள் நண்பரே... உங்களுக்கு இப்படி ஒரு இலவச விளம்பரம் கொடுத்ததற்கு மாத்திரம் நீங்கள் விரும்பினால் ஒரு நன்ரி சொல்லிவிடுங்கள். அவரை பொறுத்த வரை புதிதாக எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்களே அல்ல. என்னவோ அவர் கருவிலேயே எழுத தொடங்கி விட்டதைப் போல நினைத்துக் கொள்கிறார். இதுவும் ஒரு மன வியாதிதான்.
ReplyDeleteஇன்னும் உங்களுக்கு இலக்கியவாதி ஆகத் தெரியவில்லை. வருந்துகிறேன். :))
ReplyDeleteவிடுங்க விஜய், நம்ம சாரு யாருன்னுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சே...
ReplyDelete“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.
ReplyDeleteஉலகிலேயே அதிக நிராகரிப்புகளைப் பெற்ற ஒரு பெண் மர்லின் மன்றோ ! இந்த ஒரு வரி போதும் என நினைக்கிறேன் !...
விஜய், வெற்றி என்பது அடுத்தவர்கள் பாராட்டில் இல்லை, நமது ஆன்ம திருப்தியில் இருக்கிறது !...
-
சேவியர்
இப்போதுதான் வி.ம மேல் இலக்கிய வாசனை வீசுகிறது. வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteதல இங்க சேவியர் அண்ணா சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்....:)
ReplyDeleteவணக்கம் தல...நான் சேவியரண்ணா சொன்னதையே வழிமொழிகிறேன்....:)
ReplyDeleteவிஜய் மகேந்திரன் உங்கள் சொந்த அனுபவ கதையை,அல்லது அனுபவத்தை மட்டும் எழுதுங்கள் நீங்கள் பெரிய ஆள்.அதை விட்டு சாரு சொன்னார்,ஹமீது சொன்னார் என்று உங்கள் சுய அடையளாத்தை இலக்காதிர்கள்.
ReplyDelete